பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

‘கோதுமை ரவை பொங்கல்Õ எப்படிச் செய்வது?

மார்கழி' - வெப்பத்தின் தாக்கம் இல்லாமல் இதமளிக்கும் இனிமையான குளிர் மாதம்! பஜனை, இயல், இசை, நடனம், நாடகம் என்று கலைகளை பேணிப் போற்றும் மாதமும் மார்கழிதான். அதனால்தான் ‘மாதங்களில் நான் மார்கழி!’ என்றான் கிருஷ்ண பகவான்.

‘பிரம்ம முகூர்த்தம்Õ எனப்படும் விடியற்காலையில் விழித்தெழுந்து கூட்டாகச் செய்யும் பிரார்த்தனைகள் மனிதர்களுக்கு மிகுந்த பலனளிக்கும் என்று ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது. விஞ்ஞானரீதியாகவும் இது ஆதரிக்கப்படுகிறது. அதனாலேயே மார்கழி மாதம் தேவர்கள் விழித்தெழுவதாகவும் அந்த மாதம் முழுவதுமே தேவர்களுக்கு மிகவும் விசேஷமானதென்றும் கருதப்படுகிறது.

விடியற்காலையில் எழுந்து குளித்து இதமான குளிரில் புத்தம்புது தென்றலை அனுபவித்தபடி சிறந்த உடற்பயிற்சியான நடை பயின்று, காலையில் ஆக்ஸிஜனை ‘வாய்விட்டுப் பாடும் பஜனைகள்Õ மூலமாகவும் சுவாசித்து, பலருடன் கூடி நடப்பதாலும் பாடுவதாலும் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தையும் சமூக சந்தோஷத்தையும் அனுபவிப்போர் பலர் இன்றும் உள்ளனர்.

இதனாலேயே திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளை இந்தமாதம் நடத்துவதில்லை. சொந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இப்படிப்பட்ட கூட்டுப் பிரார்த்தனைகள் கலை மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் மனதை ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதுபோல வைத்தார்கள் போல!

மார்கழி மாதம் முழுக்க கோயில்களில் பிரசாதமாக பெரும்பாலும் சுடச்சுட வெண் பொங்கல் தரப்படும்! மார்கழியில் வீடுகளில் நாம் பொங்கல் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்யலாம். தற்போதைய ஃபாஸ்ட் வாழ்க்கை நடைமுறைக்கேற்ற ‘கோதுமை ரவை பொங்கல்Õ எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.


கோதுமை ரவைப் பொங்கல்
தேவையானவை :
சம்பா கோதுமை ரவை ஒரு கப்
பாசிப்பருப்பு அரை கப்
நெய் 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது அரை டீஸ்பூன்
மிளகு 4
சீரகம் அரை டீஸ்பூன்
உப்பு ஒரு டீஸ்பூன்
அலங்கரிக்க :
கறிவேப்பிலை சிறிதளவு,
நெய்யில் வறுத்த முந்திரி 4

செய்முறை : பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே குக்கரில் இஞ்சி விழுது, மிளகு, சீரகம், களைந்த பாசிப் பருப்பு சேர்த்து சிறிது வறுக்கவும். பிறகு அதில், 3 கப் நீர் ஊற்றி அது கொதிக்கும்போது உப்பு சேர்க்கவும். சம்பா கோதுமை ரவையை நன்கு களைந்து பிரஷர் குக்கரில் கொதிக்கும் நீரில் போட்டு மூடி 2 விஸில் விட்டு 3 நிமிடம் ‘சிம்Õமில் வைத்து அணைக்கவும். பிரஷர் அடங்கியவுடன் பதமாக வெந்த பொங்கலில் வறுத்த முந்திரி கறிவேப்பிலை தூவி ‘சுடச்சுடÕ பரிமாறவும்.
நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, புரதச்சத்துடன் சுலபமாக ஜீரணிக்கும். பாசிப்பருப்பு, உடலில் சேரக்கூடிய நச்சுப் பொருட்களை அகற்றும். மிளகு, உடலைச் சீராக்கும். சீரகம், வயிற்று உபாதைகளை நீக்கவல்ல இஞ்சி, மிதமான கொழுப்புச் சத்துடன் கூடிய சிறிதளவு நெய் மற்றும் உப்பு நிறைந்த சூப்பர்ப் ரெசிபி இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக