பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

‘‘கீரையோ கீரை’’

‘‘கீரையோ கீரை’’ என வீதிகளில் கூவி வருவோரிடம் எத்தனை எத்தனை கீரை வகைகள்! இவை மருத்துவப் பேழை. உடல்நலம் காக்கும் எளிய நல் இயற்கை மருந்து கள் ஆகும். வீதியில் விற்பதால் இவற்றை குறைத்து மதிப்பிட்டு வாங்காது, அவற்றை பயன் படுத்தாது இருந்தால் பெரும் இழப்பு நமக்குத்தான்.

முக்கியமான கீரைகளின் சிறந்த மருத்துவக் குணங்களைத் தெரிந்துகொள்வோம். தேவைக்கு ஏற்ப அவ்வப்போது பயன்படுத்தி உடல் நலம் காப்போம்.

அரைக்கீரை:

அரிந்து அரிந்து சேகரித்தாலும், அற்புத மாய் துளிர்த்துவரும் கீரை அரைக்கீரை. இரத்த விருத்திக்கு நல்கீரை, சரும நோய் வராது காக்கும்.

அகத்திக்கீரை:

அகஉறுப்புகளைக் காக்கும் அருமை யான கீரை அகத்திக்கீரை.

சிறுகீரை:

இரணங்களை விரைவில் குணப் படுத்தும். கண் பார்வையை அதிகரிக்கும். குண்டு உடம்பை மெலியச்செய்யும்.

ஆரைக்கீரை:

ஆரம்ப நிலை மனநோயை குணப் படுத்தும். அதிக நீர்ப்போக்கை சீராக்கும். பித்தத்தைக் குணமாக்கும் குணமுடையது.

கரிசலாங்கண்ணிக்கீரை:

பெண்களின் கூந்தல் பராமரிப்புக்கு இக்கீரைச் சாறை எண்ணெயிலிட்டு காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்துவர கருகருவென நீண்ட கூந்தல் அமையும். ஈறு, பொடுகு அழியும். கூந்தல் பளபளப்பாகத் திகழும்.

புளிச்சைக்கீரை:

உடல் வீக்கத்தை வற்றச் செய்யும். இரத்த சுத்திக்கு நல்லது. உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சி உண்டாக்கும்.

புதினாக்கீரை:

சீரண சக்தியை அதிகரிக்கும். பசிருசி ஏற்படுத்தும். புதினா கீரையை துவையல் அரைத்து, சாதத்தில் சேர்த்து சாப்பிட்டுவர இரத்த விருத்தி ஏற்படுத்தும். வயிற்றுப் போக்கை சீராக்கும்.

வெந்தயக்கீரை:

கைகால் மூட்டுவலியைப் போக்கும். தலைச்சுற்றைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும். சரும நோய்களைக் குணமாக்கும்.

சாரணக்கீரை:

கபத்தைக் குணப்படுத்தும்.

வயிற்று உப்புசத்தைப் போக்கும்.

அதிக இரத்தப் போக்கை சீராக்கும். இரணங்களை விரைவில் ஆற்றும்.

தூதுவளைக்கீரை:

ஆஸ்துமா நோய்க்கு அரும்

இயற்கை மருந்து. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உடல் நமச்சலைத் தணிக்கும்.

கொத்துமல்லிக்கீரை:

பித்தத்தை வேரறுக்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். பசி ருசி ஏற்படுத்தும். வாயுத் தொல்லையைப் போக்கும்.

முடக்கற்றான் கீரை:

வாதக் கோளாறுகளைக் குணப்படுத்தும். மேக வெட்டை நோய்க்கு இயற்கை மருந்து, நரம்புகளை சீராய் இயக்கும்.

பொன்னாங்கண்ணிக்கீரை:

கண் பார்வையை அதிகரிக்கும். கல்லீரல் கோளாறுகளைப் போக்கும். உடலை வலப் படுத்தும் எளிய கீரை.

முருங்கைக் கீரை:

மலச்சிக்கலை மாய்க்கும்.

இரத்த விருத்தி ஏற்படுத்தும்.

தசைச் சிதைவுகளை சீராக்கும்.

கை, கால் உளைச்சலைப் போக்கும்.

வல்லாரைக் கீரை:

ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

மண்ணீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

நரம்புகளை சீராக இயக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக