பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

நீங்களாகவே மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவீர்களா?

உலகத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்தாலும் திரு. தம்பிராஜன் அவர்கள் சொல்வது போல மருந்துக் கடைக்காரருக்கு தலைவலி வந்தால் ‘டீ’ சாப்பிடுவார். டீக்கடைக்காரருக்கு தலைவலி வந்தால் மாத்திரை சாப்பிடுவார். ஒரே வலி, பல்வேறு நிவாரணங்கள்.

உலகெங்கும் OTC எனப்படும் Over the Couter மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே கிடைக்கும் மாத்திரை, மருந்துகள் கிடைத்தாலும், மு ன்னேறிய நாடுகளில் அதற்கு மிகப் பெரும் கட்டுப் பாடுகள் உண்டு. நம் இந்தியாவிலும் அந்த மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் பெயரளவிலும், எழுத்தளவிலும் உண்டே தவிர ‘Rules are for fools’ என்பதில் நம்பிக்கை கொண்ட, சட்டத்தை மீறவே விரும்பும் ஒரு ஜனநாயக நாட்டில், நீங்கள் எந்த ஊரிலும் எந்தக் கடையிலும், எந்தவித மாத்திரையும், எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதற்கு தினசரி அவசர சிகிச்சைப் பிரிவில் நூற்றுக்கணக்காக தூக்க(?) மாத்திரைகள் ம ருத்துவரின் சீட்டின் அனுமதியின்றி வாங்கி தற்கொலை முயற்சி யில் ஈடுபடும் நோயாளிகளின் எண்ணிக் கையைப் பார்த்தாலே புரியும்.

நம் நாட்டைவிட மேல் நாடுகளில் மருந்துகளின் விலை சுமார் 10 மடங்கு அதிகம் என்பதாலும், மருத்துவரின் சீட்டின்றி மருந்து வாங்க இயலாது என்ப தாலும், மருத்து வரைப் பார்க்க இன்சூரன்ஸ் மற்றும் முன்பதிவு பெற்ற பிறகே பார்க்க இயலும். மற்றும் அவர் பரிந்துரை சீட்டின் மூலம்தான் சிறப்பு மருத்துவரை (34 மாத முன்பதிவுடன்) அணுகவே முடியும்.

எனவேதான் இங்கிருந்து செல்லும் போதே 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மருந்துகளை பில் மற்றும் மருத்துவர் சீட்டுடன் வாங்கி எடுத்துச் செல்பவர்கள் அநேகர்.

கடைகள்:

நம் நாட்டில் சாதாரண பெட்டிக்கடை, மளிகைக் கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை மருந்துகள் தாராளமாக கிடைக்கும் பெட்டிக்கடைகளிலேயே அனாசின், சாரிடான், பரால்கான், விக்ஸ் ஆக்ஷன் 500 என வரிசைகட்டி மாத்திரைகள் கிடைக்கும். வழக்கம்போல பில் இருக்காது, மாத்திரைகள் உதிரியாகவே கிடைப்பதால், பழைய தாகவோ, போலியானதாகவோ, தடைசெய்யப் பட்டதாகவோ, காலாவதியானதாகவோ இருக்க வாய்ப்புஉண்டு. பார்த்து, கேட்டு, கவனித்து வாங்காவிட்டால், நஷ்டம் நமக்குத்தான்!

மருந்துக் கடைகளில் இதுபோன்ற உரையாடல் சர்வ சாதாரணம்:

தம்பி ‘வயிற்றுப் போக்கு மாத்திரை கொடுங்க’. அந்த தம்பி 3 அல்லது 4வது படித்துவிட்டு 4, 5 மருந்துக் கடைகளில் கூட்டி, பெருக்கி, தன் அனுபவத்தை வைத்து பதவி உயர்வு பெற்று, டவுன் கடைகளுக்கு தினசரி போய் மருந்து வாங்கிவரும் வேலை பழகி, இப்போது சொந்தமாக(?) ஒரு மருந்துகடைக் வைத்திருப்பவராகவோ அல்லது அதற்கான நேரம் கனிந்துவரக் காத்திருப்பவராகவோ இருப்பார். இதே கேள்வியை ஒரு மருத்துவரிடம் கேட்டிருந்தால் வயிற்றில் என்ன தொந்தரவு, பசிக்கிறதா? சாப்பிடமுடிகிறதா? வாந்தி, வயிற்றுவலி இருக்கிறதா? மலம் கழிக்கும் போது, சீதம், இரத்தம், தண்ணீர் போல வருகிறதா, காய்ச்சல் இருக்கிறதா, அலர்ஜி உண்டா, கருவு ற்றிருக்கிறீர்களா? தாய்ப் பால் கொடுக்கிறீர்களா? என பல கேள்வி கேட்டு, பரிசோதித்து, மருந்து அல்லது மாத்திரை, எந்த நேரத்தில், என்ன உணவுடன் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தி, வயிற்றுப் போக்கு என்றால் அதை சரிசெய்வதற்கும் வயிற்றில் போகவேண்டும் என்றால் அதற்கான மருந்தையும், தேவைப்பட்டால், பரிசோதனை களும் செய்ய எழுதிக்கொடுப்பார்.

ஆனால் இங்கே நீங்கள் கேட்டு வாயை மூடும் முன்னர் ஒரு காக்கி கவரில் இரண்டு மூன்றுவித கலர் மாத்திரைகள் போட்டு அவற்றில் பெயர், தேதி, விலை எதுவும் இருக்காது. குத்துமதிப்பாக ஒரு ரேட் (எம்.ஆர்.பி.யைவிட 2 முதல் 5 மடங்கு ஆளுக்கு தகுந்தாற்போல்) தீட்டி விடுவார்.

டாக்டரிடம் போனாலும் இதைத் தானே தருவார். அந்த காசு மிச்சம்தானே என தன்னைத்தானே பாராட்டிக் கொள்வார்(?) அந்த மனிதர்.

அது உண்மையான(?) மருந்தா? போலி மருந்தா? தடைசெய்யப்பட்ட மருந்தா? எனத் தெரியவேண்டிய ஆயிரம் கேள்விகள் இருக்க, இவருக்கு தலைக்கு(?) மேலே இருக்கும் வேலையில் இதற்கு எங்கே நேரம்.

அந்தக் கடைக்கார தம்பி விரைவி லேயே ஒரு கைராசி போலி டாக்டர் ஆகவும் பிரகாசமான வாய்ப்பு உண்டு.

மருந்துக்கடை வைக்கணுமா?:

காலாவதி, தரமற்ற மருந்துகள், போலி மருந்துகள் விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்தபிறகு புதிதாக மருந்துக் கடை திறக்க நிறைய(?) கட்டுப்பாடுகள் இருந்தாலும், பழைய கடைகள் லைசென்ஸ் புதுப்பிக்க, தடையேதும் இல்லை.

200 சதுர அடி கட்டிடம், ஏ.சி. மிஷின், ஒரு ஃப்ரிட்ஜ், 1 ஜெனரேட்டர்(?) ஒரு டி.ஃபார்ம் படித்தவரின் சர்ட்டிஃபிகேட் ஜெராக்ஸ் (மாதம் 1000 2000 ரூபாய்க்கு தாராளமாக கிடைக்கும்) லைசென்ஸ், மறைமுக, நேர்முக கட்டணம் எல்லாம் ஒரு 15,000 ரூபாய்க்குள் வரும். நீங்கள் தூக்க மாத்திரை, வலிப்பு, போதை(?) மாத்திரை விற்க, உணவுப் பொருட்கள்(?) விற்க, சோப்பு, ஷாம்பு, பவுடர் விற்க என ரூ.100 கட்டினால் கூடவே 1015 ரூபாய் கட்டினால் ஆயுர்வேத, சித்த மற்றும் தேவைப்பட்டால் கால்நடை மருந் துகள் விற்க அனுமதி ரெடி! மாதம் ஒருமுறை மருந்து ஆய்வாளர்கள் வந்து மருந்து இருப்பு, கணக்கு, பில், தரமற்ற போலி மருந்து, சாம்பிள் மருந்து உள்ளதா என பரிசோதனை செய்வார்களே என கவலை வேண்டாம். தமிழகத்தில் 70,000 மருந்துக் கடைக்கு சுமார் 46 ஆய்வாளர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களை நீங்களே போய்ப் பார்த்து(?) கையெழுத்து வாங்கி வந்தால் நீங்கள் மிகத் திறமையான மருந்துக்கடை முதலாளி. மிகச் சில பெரிய கடைகள் தவிர பெரும்பாலான கடைகளில் ‘பார்ம ஸிஸ்ட்’ என்பவர் இருக்கமாட்டார்.

பில் கொடுக்காத ‘பில்லா’க்கள்:

எந்த மருந்தையும் பில் இன்றி விற்பது சட்ட விரோதம். பில்லில், நோயாளி பெயர், மருத்துவர் பெயர், தேதி, நேரம், மருந்துகளின் பெயர், வீரியம். தயாரித்த கம்பெனி, விலை, தயாரித்த தேதி பேட்ஜ் நம்பர், காலாவதி தேதி, தள்ளுபடி, எத்தனை மாத்திரை, என்பது போன்ற அனைத்து விவரங்களும் குறிப்பிடப் பட்டிருக்கும். உங்களுக்கு, தேவைப் படாத, ஒத்துக்கொள்ளாத மருந்துகளை அல்லது டாக்டர் மாற்றிக்கொடுத்த மருந்து களை பில் இருந்தால் மட்டுமே, திருப்பிக் கொடுத்து, காசை திரும்பப் பெறமுடியும்.

சென்சார் செய்யாதீர்கள்:

சமீபத்தில் ஒரு பெரிய இதய நோய் மருத்துவரின் நோயாளி ஒருவர், ஒரு மருந்துக் கடையில் மாத்திரை வாங்க வந்தார்.

இனி கடைக்காரரிடம் இவர் கேட்ட கேள்விகளும், அதற்கு கடைக்காரர் பதில் களும், நம் கருத்துக்களும் கட்டங்களுக் குள்ளே.

நோயாளி: இந்த முதல் மாத்திரை எதுக்குங்க?

மருந்துக் கடைக்காரர்: பிரஷர் மாத்திரை

நோயாளி: எனக்கு பிரஷர் இல்லை, மாத்திரை வேண்டாம்.

(உண்மை: அந்த மருந்து பொதுவாக ரத்தக் கொதிப்புக்கும் கொடுக்கப்பட்டிருந் தாலும், இந்த நோயாளிக்கு இதயத் தசையை பலப்படுத்த கொடுக்கப்படுகிறது).

நோயாளி: இரண்டாவது மருந்து எதுக்குங்க?

மருந்துக் கடைக்காரர்: ரத்தம் உறை யாமல் தடுக்க

நோயாளி: இந்த மாத்திரை சாப் பிட்டால் வயிறு எரிச்சல் வருகிறது. எனவே வேண்டாம்.

(உண்மை: இந்த மாத்திரை மறுபடி ரத்தக் குழாய் அடைபட்டு மாரடைப்பு வராமல் தடுக்கும். உயிர் காக்கும் மருந்து ஆகும்.)

நோயாளி: 3வது மாத்திரை எதுக்குங்க?

மருந்துக் கடைக்காரர்: வயிறு எரிச்சல் தடுக்க...

நோயாளி: இந்த மாத்திரையும் வேண் டாம். 2ம் மாத்திரை நிறுத்தினாலே வயிறு எரிச்சல் குறைந்துவிடும். 4ம் மாத்திரை வலி வந்தால் சாப்பிடச் சொன்னால், நெஞ்சுவலி இப்போது இல்லை. அதுவும் வேண்டாம்.

அடுத்த மாத்திரை எதுக்குங்க.

மருந்துக் கடைக்காரர்: அது கொழுப்புச் சத்தைக் குறைக்க...

நோயாளி: நான் பத்தியமா சாப்பிட்டுக் கொள்கிறேன். எண்ணெய்ப் பல காரம் வேண்டாம். மாத்திரையும் வேண்டாம்.

(உண்மை: இதயக் குழாயில் ரத்தக் கொழுப்பு படிவதைத் தடுக்க, மறுபடி, மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்க அவசியமான மருந்து.)

நோயாளி: அடுத்த மாத்திரை A, B, C, D, E Vit போட்டிருக்கே.

மருந்துக் கடைக்காரர்: சத்து மாத்திரை.

நோயாளி: நல்லா காய்கறி சாப்பிட் டால் அதுவும் வேண்டாம்.

(உண்மை: அது ரத்தக் குழாய்களை செப்பனிட்டு அடைப்பு, விரிசல் வராமல் இதயத்தை, மூளையைப் பாதுகாக்கும்.)

நோயாளி: அடுத்து மாத்திரை தூக்க மாத்திரை. அது போட்டால் பழகிப் போகும். வேண்டாம். அந்த பாட்டில் மருந்து எதுக்கு?

மருந்துக் கடைக்காரர்: அது மலச் சிக்கலுக்குக் கொடுப்பது.

நோயாளி: நல்ல வேளை அந்தத் தொந்தரவும் எனக்கு இல்லை.

(உண்மை: கஷ்டப்பட்டு முக்கி, முனகி போனால்கூட மாரடைப்பு திரும்ப வரும். தூக்க மாத்திரை தேவையில்லாத மன பதட்டம், டென்ஷன் படபடப்பை குறைக்க கொடுக்கப்படுவது.)

இந்த நோயாளி என்ன ஆகியிருப்பார் என்று நினைக்கிறீர்கள். ஒரு வாரத்தில் ஏறக்குறைய சொர்க்கத்தில் இருப்பார். பெரும்பாலான சமயங்களில் உண்மை யாக இந்த மருந்து எதற்காக கொடுக்கப் படுகிறது என்பதை மருத்துவர், அல்லது அவரது உதவியாளர் சொல்வார். மருந்து விலை, நிறைய மருந்து சாப்பிட பயம், அறியாமை, இவை நோயாளியை நேராக சொர்க்கத்துக்கே கொண்டுபோய் சேர்த்து விடுகிறதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக