பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய

www.irctc.in என்ற வெப்சைட் மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கும், ரயிலின் பெயர்கள், எண்கள், புறப்படும் நேரம் மற்றும் எத்தனை டிக்கெட்டுகள் உள்ளன போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் கூட வெப்சைட்டில் உங்களை பதிவாக்கிக் கொள்ளவேண்டும். இவ்வாறு வெப்சைட்டில் பதிவாக்கிக் கொள்ளும்போது, உங்களுக்கான `யூசர் நேம்' மற்றும் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டியிருக்கும். அந்த யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டினை மறக்காமல் ஏதேனும் ஓரிடத்தில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், எப்போது டிக்கெட்டை ரிசர்வ் செய்யத் தேவையிருந்தாலும், இதே யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் நேம் மற்றும் பாஸ்வேர்டைத் தொலைத்து விடாதீர்கள்!

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வெப்சைட்டில் உங்களை பதிவு செய்து கொள்ளும் முறையைத் தெரிந்து கொள்வோம்!

எந்த வெப்சைட் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பினாலும் முதலில் உங்களை அந்த வெப்சைட்டில் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் Registered Userஎன்று பெயர். இப்படி பதிவாக்கிக் கொண்டால்தான் உங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை உருவாக்க முடியும். அதனைப் பயன்படுத்தியே வெப்சைட்டில் உள்ள அனைத்து விவரங்களையும் பார்வையிடவும், பயன்படுத்தவும் முடியும்.

இதோ அதன் ஸ்டெப்கள்...

ேஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பிரவுசர் சாஃப்ட்வேருக்குள் செல்லவும்.

www.irctc.in என்ற வெப்சைட் முகவரியை டைப் செய்து பிறகு signup பட்டனை கிளிக் செய்தால் விண்ணப்பப்படிவம் ஒன்று ஸ்கிரீனில் வரும். இதில் மூன்று பிரிவுகள் இருக்கும்.

ே முதல் பிரிவில் உங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்யவும்.

ே இரண்டாவது பிரிவில் உங்கள் பெயர், வயது, பிறந்த தேதி இவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ே மூன்றாவது பிரிவில் முகவரி மற்றும் தொலைபேசி மற்றும் செல்போன் நம்பர்களை பூர்த்தி செய்துவிட்டு submit பட்டனை கிளிக் செய்தால், நீங்கள் அனுமதி பெறப்பட்ட வெப்சைட் பயனாளராகிவிடுவீர்கள். உதாரணத்துக்கு உங்கள் யூசர் பெயர் Sundarisuk பாஸ்வேர்ட்: Sukumarஎன்று உருவாக்கியிருந்தீர்கள் என்றால், இவையிரண்டையும் பத்திரமாக எழுதி வைத்துக் கொள்ளவும்.

கவனிக்க வேண்டிய விஷயம்!

இவ்வாறு யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கிக் கொண்டு விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது, உங்களுக்கான இ-மெயில் முகவரியைப் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும். எனவே ஏதேனும் ஒரு வெப்சைட்டில் (hotmail.com, yahoo. com, google.com..) இலவசமாக உங்களுக்கான இ-மெயில் முகவரியைத் தயாரித்த பிறகுதான், www.irctc.co.in வெப்சைட் மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியும். இந்த வெப்சைட்டுக்கு என்றல்ல, பெரும்பான்மையான வெப்சைட்டின் சேவைகளை நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்தந்த வெப்சைட்டுகளில் உங்களை பதிவாக்கிக்கொள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அப்போது உங்களுக்கான இ-மெயில் முகவரியைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த வெப்சைட் தேவையான தகவல்களை உங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப முடியும்.

டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யவும், இரயில் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

ேஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் சாஃப்ட்வேரில் www.irctc.co.inஎன்ற வெப்சைட் முகவரியை டைப் செய்துகொள்ளவும். இப்போது கிடைக்கும் திரையில் Login என்ற விவரத்தின் கீழ் user name என்ற இடத்தில், நீங்கள் வெப்சைட் பயனாளராக கிரியேட் செய்து வைத்துள்ள உங்கள் யூசர் நேமையும், பாஸ்வேர்ட் என்ற இடத்தில் உங்களுக்கான பாஸ்வேர்டையும் டைப் செய்யவும். உங்கள் யூசர் பெயர் Sundarisuk என்றும், பாஸ்வேர்ட் Sukumar என்றும் உருவாக்கியுள்ளோம். எனவே, இதனை டைப் செய்துகொள்ளவும். இங்கு Sundarisuk-™ ‘S’என்ற முதல் எழுத்து ஆங்கில பெரிய எழுத்தாகவும், அடுத்தடுத்த எழுத்துக்கள் ஆங்கில சிறிய எழுத்தாகவும் உருவாக்கி உள்ளதால் டைப் செய்யும்போதும் அதுபோலவே செய்ய வேண்டும்.

ே பிறகு login பட்டனை கிளிக் செய்தால் Welcome Ms.Sundari Sukumar என்ற தலைப்பிலான திரை வெளிப்படும்.

டிக்கெட்டுகளை உறுதி செய்ய...

ே plan my travel என்ற பகுதியின் கீழ் நீங்கள் பிரயாணம் செய்ய இருக்கும் தேதி, இரயில் பெட்டியின் வகுப்பு மற்றும் எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்குச் செல்லப் போகிறீர்கள் மற்றும் டிக்கெட்டின் பிரிவு போன்றவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ே From என்ற இடத்தில் நீங்கள் எந்த ஊரில் இருந்து பிரயாணம் செய்யப் போகிறீர்களோ அந்த ஊரின் பெயரை டைப் செய்ய வேண்டும். இதற்கு fetch station code என்ற பட்டனை கிளிக் செய்தால் கிடைக்கும் திரையில் station name என்ற இடத்தில் Chennai என டைப் செய்துவிட்டு submit பட்டனை கிளிக் செய்யவும். உடனடியாக List of Stations என்ற தலைப்பில் சென்னை பீச், சென்னை எக்மோர் மற்றும் சென்னை சென்ட்ரல் போன்ற ரயில்வே ஸ்டேஷன் பெயர்கள் வெளிப்படும். நீங்கள் எங்கிருந்து புறப்பட விருப்பமோ அதனை செலக்ட் செய்து (உதாரணத்துக்கு எக்மோர்) ரீஷீ பட்டனை கிளிக் செய்யவும். இப்போது plan my travelபகுதியில் from பகுதியில் Chennai Egmore என்று வெளிப்படும்.

ே To என்ற இடத்தில் நீங்கள் எந்த ஊருக்குச் செல்ல இருக்கிறீர்களோ அந்த ஊரின் பெயரை டைப் செய்ய வேண்டும்.

உதாரணத்துக்கு Madurai செல்ல விரும்பினால், Fetch Station code என்ற பட்டனை கிளிக் செய்து Madurai என டைப் செய்து submit பட்டனை கிளிக் செய்தால் List of station names பகுதியில் மதுரை ஸ்டேஷன் பெயர்கள் வெளிப்படும். அதில் தேவையானதை செலக்ட் செய்துவிட்டு ரீஷீ பட்டனை கிளிக் செய்தால் plan my Travel பகுதியில் to என்ற விவரத்துக்கு அருகில் Madurai Jnஎன்று வெளிப்படும்.

ே என்றைக்கு பிரயாணம் செய்யப் போகிறீர்களோ, அந்த தேதியை Date பகுதியில் பூர்த்தி செய்ய வேண்டும். ே அடுத்ததாக class பகுதியில் ரயில் பெட்டி வகுப்பினை செலக்ட் செய்ய வேண்டும்.

ே class என்ற பிரிவுக்கு அருகே இருக்கும் பகுதியைத் தெரிவு செய்து ரயில் பெட்டி வகுப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். .உதாரணத்துக்காக First class Ac(மிகி) என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம்.

ே Ticket type: இந்தப் பிரிவில் டிக்கெட் பிரிவைத் தெரிவு செய்ய வேண்டும்.

ே i ticket புக் செய்ய விரும்பினால் i ticket பிரிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

ே From, To, Date, lass, ticket typeபோன்ற விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு plan my Travel விண்டோஸில் Find Trains பட்டனை கிளிக் செய்தால், List of Trains பகுதியில் சென்னையில் இருந்து மதுரை செல்லும் ரயில்களின் பெயர் பட்டியல் வெளிப்படும். இந்தப் பகுதியில் ரயிலின் பெயர் மற்றும் எண் இவைகளுடன் புறப்படும் நேரம், போய் சேரும் நேரம் போன்ற விவரங்களும் வெளிப்படும்.

ே இந்தப் பகுதியிலேயே டிக்கெட்டுகளுக்கான விலை, எந்த வழியாகச் செல்கிறது மற்றும் டிக்கெட் இருப்பில் இருக்கிறதா போன்ற தகவல்களையும் Get fare மற்றும் show availability போன்ற பட்டன்களை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

விருப்பமான ரயிலைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ே முதலில் ரயிலின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். உதாரணத்துக்கு Kanyakumari Exp. என்ற ரயிலின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

டேிக்கெட்டின் விலையைத் தெரிந்து கொள்ள Get fare பட்டனை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

ே ரயில் செல்லும் பாதைகளைத் தெரிந்து கொள்ள Show Route பட்டனை கிளிக் செய்யுங்கள்.

டேிக்கெட் இருக்கிறதா? இல்லையா? என தெரிந்து கொள்ள show availability என்ற பட்டனை கிளிக் செய்யலாம்.

டேிக்கெட்டை முன் பதிவு செய்ய Book Ticket பட்டனை கிளிக் செய்தால், Ticket Reservation என்ற விண்டோஸில் நீங்கள் தேர்ந்தெடுத்த ரயிலின் எண், பெயர், பிரயாண தேதி, எங்கு செல்லப் போகிறீர்கள், எங்கிருந்து புறப்படப் போகிறீர்கள் போன்ற விவரங்கள் வெளிப்படும்.

ே Passenger Details என்ற பகுதியில் பிரயாணம் செய்ய விரும்பும் நபர்களது பெயர், வயது, ஆணா, பெண்ணா என்ற பிரிவு மற்றும் பர்த் விவரங்கள் போன்றவைகளுடன் சீனியர் சிட்டிஸனாக இருந்தால், அதனைக் குறிப்பிடும் பகுதியும் வெளிப்படும். அதைப் பூர்த்தி செய்யவும்.

ே இந்த விண்ணப்பப்படிவத்தின் கீழேயே i-ticket என்ற தலைப்பில் place of delivery என்ற பகுதி வெளிப்படும். டிக்கெட்டை எந்த முகவரிக்கு கொரியர் செய்ய வேண்டும் என்ற தகவலை இங்கு பூர்த்தி செய்ய வேண்டும். home, officeபோன்ற விவரங்களைத் தேர்ந்தெடுத்தால், இது நீங்கள் உங்களைப் பதிவு செய்யும்போது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தில் கொடுத்த முகவரி கீழேயே வெளிப்படும். others என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்தால் புதிதாக ஒரு முகவரியை (உங்கள் உறவினர் முகவரியையோ, அம்மா வீட்டின் முகவரியையோ டைப் செய்து கொள்ளலாம். அதாவது எங்கு டிக்கெட்டை கொரியர் செய்ய வேண்டுமோ... அந்த முகவரியை டைப் செய்ய வேண்டும். பிறகு ரீஷீ பட்டனை கிளிக் செய்தால். இப்போது டிக்கெட் விவரங்கள் திரையில் வெளிப்படும்.

ே இதில் make payment என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

ே உடனடியாக payment Gate என்ற தலைப்பிலான திரை வெளிப்படும். அதில் எந்தெந்த வங்கிகள் மூலம் கட்டணம் செலுத்தலாம் என்ற விவரங்கள் வெளிப்படும். உங்களிடம் எந்த வங்கியின் கிரெடிட் கார்டு இருக்கிறதோ, அந்த வங்கியை செலக்ட் செய்து கொள்ளவும்.

இப்போது கிரெடிட் கார்டின் வகை, கிரெடிட் கார்டு எண் போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்யும் பகுதி வெளிப்படும். அதை நீங்கள் பூர்த்தி செய்து ஙி–ஹ் என்ற பட்டனை கிளிக் செய்தால், டிக்கெட்டுக்கான கட்டணம் உங்கள் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தப்பட்டதற்கான அத்தாட்சி வெளிப்படும்.றீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக