பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

புரோட்டின் தோசை

புரோட்டின் தோசை

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு 1 கப்,
சுரைக்காய் 200 கிராம்,
பச்சை மிளகாய் 3,
பிரெஷ் கெட்டித் தயிர் 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் 1 சிட்டிகை
சால்ட் தேவைக்கு

ஸ்டஃபிங் செய்ய தேவையான பொருட்கள்:

தக்காளி 2
பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய் 2
பொடியாக நறுக்கிய
கொத்துமல்லி இலைகள் 2 அல்லது
3 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு தேவைக்கு ஏற்ப
கடுகு உளுந்தம் பருப்பு 1 டீஸ் ஸ்பூன்
சமையல் எண்ணெய் 1 டீ ஸ்பூன்

செய்முறை:

பாசிப்பருப்பை மூன்று முதல் நான்கு மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்து அதனோடு பச்சை மிளகாய் மற்றும் பிரெஷ் கெட்டித் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையோடு பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும், இப்போது புரோட்டின் தோசைக்கு மாவு தயார்.இனி ஸ்டஃபிங் செய்ய தேவையான பொருட்களைப் பார்க்கலாமா?!

ஸ்டஃபிங்க்கு:

வாணலியில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளிதம் செய்த பின் பொடியாக நறுக்கிய சுரைக்காய்,பொடியாக நறுக்கிய பச்சை மிள காய்,பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலைகளோடு சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை லேசாக வதக்கவும், வதங்கிய பின் அளவாக உப்பு சேர்த்து இறக்கவும். இந்தக் கலவையை புரோட்டின் தோசைக்குள் ஸ்டஃப் செய்யப் பயன் படுத்தலாம்.

அடுப்பில் தோசைக் கல்லை சூடாக்கி அதன் மீது ஒரு கரண்டி மாவுக்கலவையை மெல்லிசான தோசையாக வார்க்கவும், தோசையின் மேற்புறத்தில் முன்னரே தயாரித்து வைத்த ஸ்டஃபிங் கலவையை தேவைக்கு ஏற்ப வைத்து நிரவி விடவும்.மொறு மொறுப்பாக தோசை வெந்த பின் அப்படியே சுருட்டி எடுத்து சூடாகப் பரிமாறலாம்.

டேஸ்ட் டிப்ஸ்:

புரோட்டின் தோசைக்கு சிறந்த காம்பினேஷன் புதினா சட்னி. இந்த ஸ்டபிங் புரோட்டின் தோசையை புதினா சட்னியோடு பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.

ஹெல்த் வியூ:

பேரே புரோட்டின் தோசை என்றிருப்ப தால் இந்த தோசையில் புரதச் சத்து அதிகம், சுரைக்காய் சேர்ப்பதால் நார்ச் சத்தும் கிடைக்கும், தக்காளி, கொத்து மல்லி மற்றும் புதினாவில் தேவையான விட்டமின் மற்றும் மினரல்கள் கிடைக் கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் விரும்பி உண்ணலாம். நோ ரெஸ் ட்ரிக்சன்ஸ்!

சாப்பிட்டவுடன் சும்மா இருக்கவும்!

‘உண்ட மயக்கம் தொண் டருக்கும் உண்டு’ என்று சொல்கிறோம். நன்றாக சாப் பிட்டவுடன் தூக்கம் கண்களை இழுத்தால் முகத்தில் தண்ணீரை அடித்துத் தூக்கத்தி லி ருந்து தப்பிக்கவும். அரைமணி நேரம் கழித்து படுக்கச் செல்லவும். அப்போது தான் நன்கு செரிக்கும்.

சாப்பிட்டவுடன் ஒரு பழம் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். மலச்சிக்கல் வராது என்பது அவர்கள் நம்பிக்கை. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்போ, பி ன்போதான் பழம் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட வுடன் பழம் சாப்பிட்டால் வயிற்றுக்குள் காற்று சென்று வயிறு உப்புசத்திற்கு உள்ளாகும். சாப்பிட்டவுடன் சிறிது தூரம் நடக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி நடக்கக் கூடாது. ஏனென்றால் செரிமான உறுப்புகளுக்கு சாப்பிட்ட வுடன் செல்ல வேண்டிய ரத்தம் கால் களுக்குச் சென்று வி டும். உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு சாப்பிட்ட வுடன் நடப்பது இடைஞ்சல் செய்யும். சாப்பிட்டவுடன் சிலர் புகைபிடிப் பார்கள். சாப்பிட்ட வுடன் புகைக்கும் ஒரு சிகரெட்டால் ஏற்படும் புற்று நோய் அபாயம் பத்து சிகரெட்டால் ஏற்படும் அபாயத்துக்குச் சமம்.

அதனால் சாப்பிட்டவுடன் சும்மா இருப்பதே நல்லது.

1 கருத்து:

  1. Write more, that’s all I have to say.
    Literally, it seems as though you relied on the video to make your point.
    You definitely know what you’re talking about.
    Thanks for sharinhg!
    winzip-system-utilities

    பதிலளிநீக்கு