பிரபலமான இடுகைகள்

புதன், 6 ஜூலை, 2011

பக்காவான தீர்வு தரும் பத்து நிமிஷ தியானம் !

''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும். அதற்குக் கைகொடுப்பது... ஆழ்மன தியானம் எனப்படும் ஆஃல்பா நிலை தியானம்!''

- இப்படி அறிமுக விளக்கம் தருகிறார் சென்னை, டெல்லி, மும்பை, கோவா, சண்டிகர், திருச்சி, மதுரை, கோவை, கொச்சி என்று நேரடியாக ஆயிரமாயிரம் பேருக்கு ஆழ்மன தியானப் பயிற்சியைத் தந்துவரும் டாக்டர் விஜயலட்சுமி பந்தையன். இவர், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'ஆல்ஃபா மைண்ட் பவர் இன்ஸ்டிடியூட்'டின் நிர்வாக இயக்குனர்!





''பேங்க் ஆஃப் இந்தியாவுல வேலை செய்துட்டு இருந்தேன். டைம் டேபிள் போட்ட மாதிரி ரெகுலரா செய்ற அந்த வேலையில திருப்தி இல்லை. இன்னும் பவர்ஃபுல்லா எதையாவது பண்ணனும்னு ஒரு எண்ணம் எழ... ஆழ்மனம் சம்பந்தமா நிறைய புத்தகங்கள் படிச்சேன். ரெய்கி, பிரானிக் ஹீலிங், மாக்னிஃபைட் ஹீலிங், வேதிக் ஹீலிங், விபாசனா தியானம், சில்வா மெதட் ஆஃப் மைண்ட் கண்ட்ரோல்னு பலவிதமான தியான முறைகள நிறைய பயிற்சியாளர்கள்கிட்ட கத்துக்கிட்டேன். நான் படிச்ச தியான முறைகளை அன்றாட வாழ்க்கை முறைக்கு உதவுற மாதிரி ரிசர்ச் பண்ணி, நிறைய பேருக்கு சொல்லித் தர்றதுக்காக பதினோரு வருஷத்துக்கு முன்ன இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சேன்'' எனும் விஜயலட்சுமி, அந்த தியான முறை பற்றி சிம்பிளாக விளக்கினார்... இப்படி -

''மனித மூளையோட செயல்பாட்டை டெல்டா, தீட்டா, பீட்டா, ஆல்ஃபானு நாலு நிலைகளா விஞ்ஞானிகள் தெளிவா ஆராய்ந்து சொல்லியிருக்காங்க. 'ஆல்ஃபா நிலை’ங்கறது, தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலை. இடது பக்க மூளையுடன் வலது பக்க மூளையும் ஊக்குவிக்கப்பட்டு, சக்தி வாய்ந்த, ஆக்கப்பூர்வ உள்ளுணர்வு கொண்ட சிந்தனையுடன் மூளை செயல்படுறது இந்த நிலையிலதான். 10 - 15 நிமிட ஆல்ஃபா தியானத்துலயே நம்மகிட்ட மறைந்துள்ள மகத்தான சக்தி வெளிப்பட்டு, நம்ம பிரச்னைகளுக்கான தீர்வை விஷ§வலா மனக் கண் மூலமா காட்டும். அதை நடைமுறையில அப்ளை செய்யலாம். தற்கொலை செய்துக்கற அளவுக்கு விரக்தியில இருக்கறவங்ககூட, இந்த தியானத்துக்குப் பிறகு தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கிட்டிருக்காங்க!''

1 கருத்து: