* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே.
* ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.
* மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது, ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.
* பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.
* மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.
* தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
* அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
* பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.
* பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
* நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித் தரப்படும்.
* எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.
* வாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.
* நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.
* நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.
* ஆண்டவன் உனக்குத் தர நினைக்கும்போது யாரும் தடுக்க முடியாது, அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்க முடியாது.
* ஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.
* உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.
* ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.
* நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
* நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் 'கடன்காரன்' ஆகிறான்
பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
ஆண்டவன் உனக்குத் தர நினைக்கும்போது யாரும் தடுக்க முடியாது, அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்க முடியாது.//
பதிலளிநீக்குwell said. True.