மக்களும் மரபுகளும் என்ற நூலில் குருவிக்காரர்கள் பறிய சில குறிப்புகள் காணப்படுகின்றன.
இதோ:
நரிக்குறவர்கள் அல்லது குருவிக்காரர்கள் என்று கூறப்படும் மக்கள், தென் மாநிலங்களைச் சேர்ந்த நாடோடி இனத்தவர். இவர்கள் மத்திய மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்ததாகக் கருதப்படுகின்றனர். தென் மாநிலங்களில் சில நூற்றாண்டுகளாக வழ்ந்து வந்தாலும் தங்கள் தனித்தன்மையைக் காப்பதில் மிகவும் கவனமாக இருந்துவரும் இவர்கள், வேறு எந்த இனத்துடனும் கலந்துவிடுவதில்லை.
நறிக்குறவர்கள் அனைவரும் இந்துக்கள். சமய உணர்ச்சி மிக்கவர்களான இவர்கள், தங்கள் கடவுளளர்களைத் தங்கள் இருப்பிடங்களிலேயே வணங்குகின்றனர். அக்கடவுளின் உருவங்கள் ஒரு துணி மூட்டையில் வைக்கப்பட்டு, அந்தத் துணிமூட்டை சாமி மூட்டை என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சாமி மூட்டை உண்டு. குடும்பத் தலைவரால் மரியாதையாகவும், கவனமாகவும் அம்மூட்டை பாதுகாக்கப்படுகின்றது. சாமி மூட்டையில் உள்ள துணியில், பலி கொடுக்கப்பட்ட விலங்கின் இரத்தத்தில் தோய்க்கப்பட்ட துணியும் அடங்கியிருக்கும். இவற்றை அவர்கள் பரம்பரையாக உள்ளதாகக் கூறிக் கொள்வார்கள்.
இரத்தத்தில் தோய்க்கப்பட்ட பாவாடை ஒன்று ‘சாமி பாவாடை’ என்று பெயர் பெற்று அவர்களிடையே உள்ளது. நரிக்குறவப் பெண்கள் சாமி மூட்டையைத் தொடுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை; அத்துடன் ஒரு பிரிவைச் சார்ந்தவர்களின் சாமி மூட்டையை அடுத்த பிரிவைச் சார்ந்தவர்கள் தொடுவதில்லை. அடுத்தவர்களுக்குத் தங்கள் சாமி மூட்டையைப் பிரித்துக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தொட அனுமதியும் இல்லை. பிரித்துக் காட்டவும் விரும்புவதில்லை.
ஆண்களும் பெண்களைப் போன்று தலையில் சிகை வளர்த்துக் கொள்கின்றனர்.வழிபாடு செய்யும் பொழுது, தன் தலையை விரித்துப் போட்டுகொண்டு சாமி மூட்டையைத் திறப்பான் குடும்பத் தலைவன். பின்னர், இரத்தம் தோய்ந்த பாவடையை அணிந்து, வழிபாடு செய்வான்.
பூவும், மஞ்சள் தூளும் தேவதைகளின் முன் படைக்கப்படும். பலி கொடுத்த மிருகத்தின் இரத்தமும் தேவதை முன் படைக்கப்படும். தேவதைகளின் முன் நடனமாடியபடி, அந்த இரத்தத்தில் புரள்வான் குடும்பத் தலைவன்.
ஒரு குடும்பத்தில் மகன் மணம் புரிந்துகொண்டால், தகப்பனின் சாமி மூட்டையில் ஒரு பகுதி அவனுக்குக் கொடுக்கப்படும். குடும்பத்தில் மூத்த மகன் தந்தையினுடைய சாமி மூட்டைக்கு வாரிசாகக் கருதப்படுகிறான். எனவே, அவனுடைய சாமி மூட்டையில் உள்ள இரத்தம் தோய்ந்த துணி, ஏழு அல்லது எட்டு தலைமுறைகள் கடந்த மிகப் பழமையானதாகக் கூட இருக்கும்.
எப்பொழுதெல்லாம் பூஜை நடத்துகின்றனரோ, அப்பொழுதெல்லாம் உறவினர்களையும், கோத்திரக் காரர்களையும் ( தந்தை வழி உறவினர்கள்) அழைத்து, அவர்களுக்குத் தலைக்கு ஐந்து ரூபாயும், சம்பந்திகளுக்கு இரண்டு ரூபாயும் அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.
நரிக்குறவர்கள் மலைவாழ் பழங்குடியினர் பட்டியலில் அரசு வைத்துள்ளது. ’திருநாளைப் போவார்’ என்ற அடை மொழி அவர்களுக்குத் தகும். மாநிலம் முழுவதிலுமான பிரபலமான உற்சவங்கள் பற்றிய முழு விபரங்கள் அவர்களுக்கு மனப்பாடமாய்த் தெரியும். முதலாம் திருநாள் தொடங்கி பிரம்மோர்சவம் முடிவாகும் வரையிலான பஞ்சாங்கம் போன்று கன கச்சிதமாக தெரிவிப்பார்கள். அவர்கள் சொந்தமாக குடியிருக்க வீடுவாசல் இல்லாமலிருப்பதாலும் சொந்த நிலம் வாங்கவோ விவசாயம் செய்யவோ, அன்றி விவசாயக் கூலி வேலை செய்வதற்கோ நோங்குவதில்லை.
”அவர்கள் குழுக்களாகத் தான் சென்று கொண்டிருப்பார்கள். திருநாள் விழாக்கள் பிரபல்யமான ஊர்களில் நடைபெறும் காலங்களில் அங்கே சென்று குடில்களை புறம்போக்கு பூமி, தரிசு நிலங்கள், கோயில் அருகில் ஒதுக்குப் புறத்தில், ஆற்றுக் கரையோரங்களில் அமைதுக் கொள்வார்கள். பித்தளை, பாசிமணி, பெண்கள் விரும்பும் அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றுடன் விற்பனை தொடங்குவர்.
அவர்கள் பேசும் மொழி எழுத்தில்லாத ஒன்று. ஆனால், அவர்கள் பிராந்திய மொழி அனைத்திலும் உரையாட வல்லவர்கள். தொடர்வண்டி நிலையத்தில் போர்ட்டர்கள் பிற மாநிலத்தவருடன் சரளமாகப் பேசுவதும் சண்டையிடுவதிலும் வல்லவர்களாய் இருப்பது போன்று நரிக்குறவ மக்கள் திறமையானவர்கள்.
ஆண்கள் நரி, முயல் வேட்டையாடுவர். பறவைகளையும் வேட்டையாடி புசிப்பர்.ரவைத் துப்பாகியும், கவுட்டையில் கட்டப்பட்ட’ கேடாபெல்ட்’ , கைத்தடி ஆகியவை அவர்களுடைய ஆயுதம்.
காடை கௌதாரி, குருவி வகைகள், மாந்தோப்புக் கிளி. இவறை உயிருடன் கண்ணி வைத்தும் வலையினாலும் பிடித்து உயிருடன் வளர்ப்போருக்கு விற்பனை செய்வார்கள். திருவிழாக் காலங்களில் கோயில் சப்பரத்தில் உற்சவர் எழுந்திருத்து ஆகி புறப்பாடு செய்கையில், பெட்ரோ மாக்ஸ் விளக்குகள் சுமந்து செல்ல இவர்கள் ஆணும் பெண்ணும் ஈடுபட்டுக் கூலி பெறுபவார்கள்.
ஆண்களில் சிலர் மூக்கு குத்தி மூக்குத்தி அணிந்திருக்கின்றனர். தினமும் குளிக்கவேண்டிய அவசியம் இல்லை. இல் அடு கள் அருந்திவந்தவர்கள், தற்பொது தயார் நிலையில் சாராயம் கிடைப்பதால் இல்அடுகள் இல்லையாம்.
பெண்கள் கையில் சிறிய மெல்லிய கம்பிகள், ஊசிமுனைக் குறடு ஆகியவற்றுடன் சோர்வின்றி கோர்த்து முறுக்கிக் கொண்டே இருப்பார்கள். தியாகிகள் நடமாடும் போதும் அமர்ந்திருக்கும் போதும் தக்கிளியில் நூர்த்துக் கொண்டே செல்வது போன்று உழைப்பார்கள்.அல்லது நரம்பு போன்றவற்றில் வித விதமான பாசி மணிகளை அலங்காரமாகக் கோர்த்து கண்ணைக் கவரும் மாலைகளாக உருப்பெறும்.
மதுரையில் அலங்கா நல்லூரில் நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு மனைதொடர் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.நிர்வகிப்பதில் பல சங்கடங்கள் அவர்கள் உணர்கிறார்கள்.
மதுரை வடக்கு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் நரிக்குறவர் குடியிருப்புகள் உள்ளன.
கழிவின் கிழிந்த காகிதங்கள், திரும்பவும் உருக்கும் பிளாஸ்டிக் பைகள் சேகரம் ஆகியவை தற்காலத்திய வருமான வழிகளாக சிறுவர்களும் குடும்பமும் ஈடுபடுகின்றனர்.
எக்ஸோனரா வின் மூலம் கழிவுக் குப்பைகள் வெளியேற்றும் பணியில் சிலர் இருக்கின்றனர்.
இந்த வகுப்பைச் சேர்ந்த சில பெண்கள் ஆங்காங்கே படித்துவருகிறார்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து வருகிறார்கள். போட்டிமிகுந்த இவ்வுலகில் கரையேற்றிவிட ஆளில்லை. துயரத்தில் ஆழ்த்த பலர் இருக்கின்றனர்.
பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக