பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 மார்ச், 2011

உதிர்ந்த முத்துக்கள் - காதலற்ற வாழ்க்கை

காதல்

கூட்டுகுடும்ப அமைப்பின் காரணமாக யாரையும் காதலிக்காமல், யாராலும் காதலிக்கபடாமல் வாழ்க்கைதுணையாக, தாயாக, ஏன் பாட்டியாக கூட பலர் ஆகிவிடுகின்றனர்.

திருமணம் என்பது காதலுக்கு தரப்படும் உயர்ந்த அங்கீகாரம்.அதை காதலுக்கு வைக்கபடும் முற்றுபுள்ளி என கருதுபவர்களை கல்யாணம் செய்து கொள்பவர்கள் அனுதாபத்துகுரியவர்கள்

காதலுக்கு திருமணம் அவசியம் இல்லை.ஆனால் பிள்ளைகளை பெற திருமணம் அவசியமாகிறது.பிள்ளைகள் நல்லபடி வளர தம் பயலாஜிக்கல் தாய்-தந்தையருடன் அவர்கள் தம் பார்மேடிவ் வருடங்களில் வளர்வது அவசியமாகிறது.பிள்ளைகள் பெரியவர்களாவதற்குள் அவசரப்பட்டு விவாகரத்து செய்யும் பெற்றோர் பொறுப்பற்றவர்கள்.

விட்டுகொடுக்காமல் காதல் நீடிக்காது.ஆனால் விட்டுகொடுத்தல் இருவழிபாதையாக இருத்தல் வேண்டும்.ஒருவரே விட்டுகொடுத்து கொண்டிருப்பது நீண்டகால நோக்கில் ஒத்துவராத விஷயம்.

காதலுக்காக எதையும் விட்டுதரலாம்,சுயமரியாதையை தவிர்த்து...சுயமரியாதையை பலிகேட்கும் காதல் காதல் அல்ல.

காதல் சமத்துவமான உறவிலேயே மலரகூடியது.சமத்துவமற்ற படிமநிலை ஆண்டான் - அடிமை உறவுகளில் கலவி நிகழலாமே ஒழிய காதல் நிகழாது.அடிமையும் எஜமானும் உறவு கொள்ளலாமே ஒழிய காதல் புரிய இயலாது

பிரியகூடிய சுதந்திரமும்,வலிமையும் படைத்த இருவர் பிரியாமல் இருப்பதே காதல் எனப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக