பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 8 மார்ச், 2011

பேரீச்சம்ப​ழத்தில் பெருகும் கலப்படம்

பேரீச்சம்பழம்- இரும்புச்சத்தை இனிதே தந்து, இரத்த விருத்திக்கு வித்திடும்.

மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா பகுதியில் தோன்றிய பனைமரம் போன்ற ஒரு மரம், பின்னர் உலகின் பிற பகுதிகளிலும் பயிரிடப்பட்டது.

பேரீச்சம்பழம் மரங்கள் 82 அடி உயரம் வரை வளரும். மரத்தின் உச்சியில் படர்ந்துள்ள இலைகளின் அடியில் கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்கும். பழம் பழுக்கத்துவங்கும்போது, மஞ்சள் நிறத்துடனிருக்கும். நன்கு பழுத்த பின்னரே, பழம் மிருதுவாகும். அவற்றைப்பறித்து, பதப்படுத்தி விற்பனைக்குச் சந்தைப்படுத்துகின்றனர். பறித்த பழங்கள், குளிர்சாதன நிலையில் இரு வாரங்கள் வரை கெட்டுப்போகாமலிருக்கும். பதப்படுத்திய பழங்களை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.பழங்களை எப்படி பார்த்து வாங்குவது?:
பேரீச்சம்பழத்தின் நிறம் செழுமையாக இருக்கவேண்டும். காய்ந்த பழங்களும், உப்புப் பொரிந்தார்போலுள்ள பழங்களும் தவிர்க்கப்படவேண்டியவை.சத்துக்கள்: (100 கிராமில்)சக்தி :280 கிலோ கலோரிகள்.
காh;போஹைட்ரேட் : 75 கிராம்.இனிப்பு : 63 கிராம்.நாh;ச்சத்து : 8 கிராம்.கொழுப்பு : 0.4 கிராம்.புரதம் : 2.5 கிராம்.நீh;ச்சத்து : 21 கிராம்.உயிh;ச்சத்து-சி : 0.4 மி.கி.

பேரீச்சம்பழ உணவு: இதனை உணவாகவும் உண்ணலாம். மருந்தாகவும் உண்ணலாம். நாம் அன்றாடம் உண்ணும் பண்டங்களில், பேரீச்சம்பழத்தை பல விதங்களில் கலந்து உண்ணலாம். தேனில் ஊறிய பேரீச்சம்பழம், உடலில் இரும்புச்சத்தை உருவாக்கி, இரத்த விருத்திக்கும் வழிவகுக்கும். நைஜீரியாவில்,பீரில்(BEER) பேரீச்சம்பழத்தையும், மிளகையும் போட்டு அருந்தினால், பீரினால் உருவாகும் நச்சுத்தன்மை குறையுமென்று நம்புகின்றனர். பேரீச்சம்பழ ரசத்தை,பண்டிகை நாட்களில், போதையற்ற பாணமாக, சில இஸ்லாம் நாடுகளில் பயன்படுத்துகின்றனர். இளம் பேரிச்சை இலைகளும், குருத்துப் பூக்களும் கூட உணவாகப்பயன்படுத்தப்படுகின்றன. பெண் பூக்களே எடை அதிகம்.மருத்துவ குணங்கள்:பேரீச்சம்பழத்திலுள்ள டேனின்(Tanin) எனும் சத்து, அவற்றிற்கு நம் வயிற்றுக் குடல்களை சுத்தம் செய்யும் குணத்தினை அளித்துள்ளது. பேரீச்சம்பழக்கொட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் டிகாக்ஷன், தொண்டை தொற்றுக்களையும்,அதனால் வரும் காய்ச்சலையும் குணப்படுத்த வல்லது. பேரிச்ச மரங்களைக்கீறி விட்டு, அதிலிருந்து வெளியாகும் பிசினை, வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரக நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகின்றனர். வேர்கள் பல்வலிக்கு அருமருந்தாகும்.
கலப்படம் காண்பது எப்படி?: இத்தகைய மருத்துவ குணங்கள் வாய்ந்தபேரீச்சம்பழத்தை பாக்கட்களில் அடைத்து விற்பனை செய்கின்றனர். அவ்வாறு,பாக்கட்களில் பொதியும்போது, அந்த பாக்கட்கள் மீது, பாக்கிங் செய்த தேதி, பாட்ச் எண்.,எந்த தேதி வரை பயன்படுத்தலாம், சைவ வகை உணவுக்குறியீடு,தயாரிப்பாளாரின் முழு விலாசம், விலை விபரம் கண்டிப்பாக அச்சிடப்படவேண்டும். அவ்வாறு தேவையான விபரங்கள் அச்சிடப்படவில்லையென்றால், அந்த பாக்கட்கள், உணவுக்கலப்படத்தடைச்சட்டம் மற்றும் விதிகளின் கீழ், தப்புக்குறியடப்பட்டதெனக் கருதப்படும். பேரீச்சம்பழத்தில் கலப்படம் என்றால், பழத்தை பளபளப்பாகக் காட்ட அதன்மீது தடவப்படும் தாது எண்ணெயே. பெட்ரோலியக் கழிவாகக் கிடைக்கும் தாது எண்ணெயை, பேரீச்சம்பழங்கள் மீது தடவினால், பழங்கள் பள பளவென பகட்டாய் இருக்கும். தொடர்ந்து தாது எண்ணெய் தடவிய பழங்களைத்தின்றால்,வயிற்றுப்புற்று வரும் வாய்ப்பு அதிகம். பூச்சி அரித்த பழங்களும், அழகான பாக்கட்களில், பகட்டாகப் பேக்கிங் செய்து வரும்.

அட்வைஸ்:எனவே, அடுத்த முறை பேரீச்சம்பழ பாக்கட்கள் வாங்கும்போது,பார்த்து வாங்குங்க! பள பளப்பை நம்பி ஏமாறாதீங்க!சுய புராணம்: கடந்த 18.08.2006 அன்று, நெல்லை டவுண் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். ஒரு பலசரக்கு கடையில் விற்பனை செய்த பேரீச்சம்பழ பாக்கட்களில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில், அதனை உணவு மாதிhpயாக எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம்.

எடுத்து அனுப்பிய அன்று மாலையே வந்தது பிரச்சனை. அவர் ஒரு அரசியல் பிரபலத்திற்கு வேண்டியவரென்பதால், அடிப்பொடிகள் சிலர் பண்ணிய அலம்பல்கள் ஆயிரம். நாளையே, உன்னை இந்த ஊரிலிருந்து மாற்றி, தண்ணீர்இல்லா காட்டிற்குத் தூக்கியடிப்போம் என்பன போன்ற மிரட்டல்கள் நேரிலும்,போனிலும். நான் சொன்னேன், நாளை காலை நாமிருவரும் உயிருடன் துயில் எழுவோமா என்பதற்கு உத்தரவாதம் கொடுங்கள், அதன் பின்னர், இந்த ஊரை விட்டு மாற்றுவது குறித்து அஞ்சலாம் என்றேன்.

நாட்கள் நகர்ந்தன. ஆய்வறிக்கை வந்தது. விதிகளுக்குப் புறம்பாக,அந்த பேரீச்சம்பழ பாக்கட்கள் தயாரிக்கப்பட்டிருந்ததால், வழக்கு தொடர்ந்தேன். தீர்ப்பும் வந்தது. ஆனால், நான் இன்னமும் அதே ஊரில்தான் பணியாற்றுகிறேன். விந்தை மனிதர்கள். வியப்பாகத்தான் இருக்கின்றது. இவர்கள் வீழ் என்றால் வீழ போவதுமில்லை, வாழ் என்றால் வாழ போவதுமில்லை!

1 கருத்து: