வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..
ஒரு சின்ன முத்தத்தில் இதயம்
ஒட்டிக் கொள்ளவும் -
உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது.
நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும்
பண்பின் நகர்தலில் காதல் கற்கவும் -
ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது..
முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து
உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க
உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது..
பேசிக் கழிக்காத பொழுதொன்றாய்
ஒவ்வொரு நாளினையும் - வாழ்ந்துக் காண்பிக்க
காலக் கணக்கின் அச்சாணி புடுங்கி -
ஒரு அசட்டுத் தைரியம் உட்புகுந்து
வருடங்களை எல்லாம் நாட்களாய் மாற்றி
நாட்களை நொடிகளாய் திரித்து - யுகம் பல உன்னுள் தொலைக்க
உனை மட்டுமே தேடி -
யாருமிலா அண்டப் பெருவெளியில்
அலைகிறதென் இமைப் பூட்டாத யிக் கண்களிரண்டும்..
உச்சி நடுக்கோட்டில் முத்தம் பதித்து
பாதபஞ்சுதனில் பூமிபடாதுனை - நெஞ்சுக் கூட்டில் தாங்கிக் நிற்க
நித்தமும் நித்தமும் ஓர் தவம்
காத்திருப்பின் கண்ணீர்பெருக்கில் கரைந்தேப் போகிறதெனில்
நம்புவாயா???
சப்தமிடாத வானத்தின் இரவொன்றில்
நட்சத்திரம் பொருக்கி பெயர்கோர்த்து
அதற்கு வானவில்லில் கோடுகிழித்தா லென்ன யெனும் கற்பனை
உனை எண்ணும் போதெல்லாம் -
உன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் - உன் நினைவுகளாய் உள்ளே
பெருக்கெடுக்கிறது...
காலத்திற்குமான சாபமாக காதலை திரித்த
பொய்யர்களின் முகத்தில் - எது காதலென எழுதிவிட்டு
ஜாதியின் மதத்தின் வெறியை
ஒரு முத்தத்தில் அழித்துவிட்டு -
வெறுமனே திரும்பிப் படுத்துக் கொள்ளும்
ஒரு இள-ரத்த துணிவல்ல யிது;
உன்னோடு வாழமட்டுமே -
கனவின்றி காத்திருக்கும் ஒரு வாலிபனின் உணர்வு.
உனக்கும் பிடிக்குமெனில் சொல் -
இரு கைவிரித்து -
இதோ இந்த கனம் முதல் நமதென்று முழங்கி
வார்த்தைகளில்லா ஓரிடம் நோக்கி
நீயும் நானும் பறந்துபோவோம்!!!
பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக