பிரபலமான இடுகைகள்

திங்கள், 3 அக்டோபர், 2011

எப்போதும் இளமையாக இருக்க உதவும் இரண்டு வழிகள்

நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிடும். மேலும் திசுக்களையும் இந்த அதிகப்படியான திரவம் சேதமடையச் செய்து முதுமையை விரைவில் எட்டி விடச் செய்கிறது.

இந்த நிலையில் எதிர் நச்சு முறிவு மருந்தாகச் செயல்படும் பீட்டா கரோட்டீன் இரத்தத்தில் அதிகமாக இருந்தால் இந்த ஃப்ரீராடிக்கல் திரவம் குறைவாகச் சுரக்க வழி செய்கிறது. இதனால் செல்கள் கெட்டுப் போவது தடைபடுவதுடன் முதுமை அடைவதும் முற்றிலும் தடுக்கப்படுகிறது.

வயதுக்கு மீறிய முதுமைத் தோற்றம், தோல் சுருங்குதல், தோலில் வறட்சி, சொறி, சிரங்கு போன்றவை பீட்டா கரோட்டீன் சத்து இரத்தத்தில் குறைவாக இருப்பதையே காட்டுகிறது.

எனவே, எப்போதும் இளமையாக வாழ விரும்பினால் எல்லா வயது ஆண்களும், பெண்களும் பீட்டா கரோட்டீன் சத்து அதிகமாக உள்ள காரட், கீரைகள் (குறிப்பாக முருங்கைக்கீரை), ஆரஞ்சு, முட்டை, பப்பாளி, மாம்பழம், ஆட்டு ஈரல் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் போதும்.

இவற்றுள் மிக முக்கியமானது தினமும் இரண்டு பெரிய காரட்டுகளையோ அல்லது நான்கு சிறிய காரட்டுகளையோ சாறாக்கியோ, அவித்தோ சாப்பிடலாம். காரட் சாறு எனில் தயிரையும் இரண்டு கிண்ணம் அளவு கலந்து அருந்தி வரவும்.

இத்துடன் அன்றைய உணவில் பப்பாளிப் பழமோ, ஏதேனும் ஒரு கீரையோ இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இதனால் ஒவ்வொரு திசுவிற்கும் தொடர்ந்து ஆக்ஸிஜன் கிடைப்பதால் தோல் சுருங்காது. தொடர்ந்து ஒவ்வொரு திசுவிற்கும் ஆக்ஸிஜன் கிடைத்துக் கொண்டே இரு ப்பதால் வயதானாலும் முதுமை அடைவது தடுக்கப்படுகிறது. உடலில் உள்ள எல்லா திசுக்களும் ஆரோக்கியமாக இருப்பதால் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய், கண்புரை போன்றவை தடுக்கப்பட்டு வாழ்நாளும் இயற்கையாக தடையின்றி அதிகரிக்கிறது.

அமெரிக்காவிலும் ஃபின்லாந்திலும் புகை பிடித்து புற்றுநோயால் அவதிப்பட்டவர்களுக்கு பீட்டா கரோட்டீன் சத்து உள்ள மாத்திரைகளும், உணவுகளும் தொடர்ந்து சாப்பிட சிபாரிசு செய்யப்பட்டு இவர்கள் கண்காணிப்பிலும் இருந்தனர். இவர்களுக்கு புற்றுநோய் முற்றிலும் குணமானதுடன் அழகான தோற்றத்தையும் பெற்றுவிட்டனர்.

காரணம், காரட் போன்ற பீட்டா கரோட்டீன் சத்து அதிகமாக உள்ள உணவுகள் இரத்தத்தை சுத்தப்படுத்தியதுடன் எல்லாத் திசுக்களுக்கும் ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும்படி பார்த்துக் கொண்டதால்தான் தோலுக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைத்து இளமையான தோற்றத்தைப் பெற்றுவிட்டனர்.

‘பப்பாளிப் பழம் தோலில் ஏற்படும் சுருக்கத்தை நீக்கி தோலையும் பளபளப்பாக்குகிறது. தினமும் பப்பாளிப்பழம் சாப்பிடாமல் இரவு உணவை நான் முடிப்பதில்லை. இதனால்தான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்’ என்று தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவருக்கு இந்த நன்மைகளை வாரிவழங்கியது பப்பாளியில் தாராளமாக உள்ள பீட்டா கரோட்டீன்தான்.

இதனால்தான் 80 வயதைக் கடந்த நாகேஸ்வரராவ் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் நடிகை நயன்தாராவைப் பார்த்ததும் ‘அவருடன் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க என் மனம் விரும்புகிறது’ என்று கூறினார்.

இந்த கதாநாயகர் இளமைக்கு மட்டுமல்ல இரவு உணவு நன்கு ஜீரணமாகவும், இரவில் திடீர் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க நன்கு ஆக்ஸிஜன் கிடைக்கவும்தான் பப்பாளி சாப்பிட்டு வருகிறார். இதனால் ஆண்டு முழுவதும் மூளைக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைக்கும்.

இளமையாக வாழ துரித நடைப்பயிற்சி, ஏரோபிக் பயிற்சி, டென்னிஸ், நீச்சல், பளுத்தூக்குதல் என எதைப் பின்பற்றினாலும் நன்கு ஆக்ஸிஜன் கிடைக்கும்.

இதே நன்மைகளை பீட்டா கரோட்டீன் உள்ள காரட், பப்பாளி போன்ற உணவுகளைச் சேர்த்து வந்தால் நோய்களும் குணமாகி இளமையாக வாழலாம்.

பெண்களைப் போலவே ஆண்களும் இளமைத் தோற்றத்தைப் பராமரிக்க ஆரம்பித்தால் இரத்தம் சுத்தமாகிக் கொண்டே இருப்பதால் வாழ்நாளும் எந்த விதமான உடல் நலத் தொந்தரவும் இன்றி நீடிக்கும் இயற்கையாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக