பிரபலமான இடுகைகள்

திங்கள், 24 அக்டோபர், 2011

கரிசலாங்கண்ணிக் கீரை

நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் செரிமான சக்தியை மேம்படுத்து கின்றன. மலச்சிக்கலைக் குணப்படுத்து கின்றன. நமது உட லுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன. கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கரப்பான், கையாந்தகரை என்ற வேறு பெயர்களும் உண்டு. வள்ளலார் இக் கீரையைத் தலை சிறந்த கீரை என்று குறிப்பிடுகிறார். இக் கீரையைப் பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு வர வேண்டும். இதை தினந்தோறும் தவறாது உட்கொண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும். உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். முகத்தில் தெளிவும், வசீகரமும் ஏற்படும். கரிசாலையைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களுக்கு வன்மையைக் கொடுக்கும். பித்த நீர், கப நீர் வெளியாகும். கண்ணொளியைத் தரும். இக் கீரையைச் சாப்பிட்டுவந்தால் முக்தி அடையலாம் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். கரிசலாங்கண்ணிக் கீரையில் அநேக நன்மைகள் உள்ளன. எனினும் பல கருத்துக்கள் சித்தர்களின் மூலம் அறியப்படாமல் உள்ளது. சித்தர்களும், முனிவர்களும், இந்த கரிசலாங்கண்ணியை உண்டுதான் பல்லாண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது உண்மை.

கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவிட வேண்டும். வாயில் இருக்கும் சக்கையைக் கொண்டு பல் துலக்க வேண்டும். நாக்கு, உள்நாக்கு உட்பட மேலும் கீழும் விரல்களால் தேய் த்தோமானால் மூக்கு, தொண்டையிலுள்ள கபம் அப்பொழுதே வெளிவந்துவிடும். பித்தப்பை கெட்டுப்போய் பித்தம் அதிகமாக இருந்தால் அப்பொழுதே பித்தம் வாந்தி மூலமாக அல்லது மலத்தோடு வெளியேறும். அன்றைக்கே மலம் தடங்கல் இல்லாமல் கழியும். சிறுநீர் நன்றாகப் பிரியும். கபநீர், பித்தநீர் வெளியேறி, மலமும் வெளியேறுவதால் பெருங்குடலும், சிறுநீரகங்களும் தூய்மை அடைகின்றன. கல்லீரல் சுத்தமடைவதால் மற்ற ஜீரண உறுப்புகளாகிய மண்ணீரல், கணையம் போன்றவையும் நன்கு வேலை செய்யும். கணையம் நன்கு பணியாற்றும் போது நீரிழிவு நோய் நம்மை அண்டுவதில்லை. மலச்சிக்கல் அகன்றுவிடுகிறது. மண்ணீரல் வீக்கத்தை கரிசலாங்கண்ணிக் கீரை குறைக்கிறது. உடலைப் பொன்னிறமாக்கும். சுவாசப் பைகளில் கபமும், கல்லீரலில் பித்தமும், பெருங்குடலில் கிருமிகள், விஷங்கள் கலந்த மலமும், மூத்திரப் பைகளில் யூரியா, யூரிக் ஆசிட் போன்ற கழிவுப் பொருட்கள் கலந்த சிறுநீரும் தேங்கி உறுப்புகள் கெட்டுப் போகின்றன. கல்லீரல், பெரு ங்குடல், மூத்திரப் பை போன்ற உறுப்புக்களை நாம் சுத்தம் செய்ய வேண்டாமா? பேதிக்கு மருந்து சாப்பிட்டுப் பெருங்கு டலைச் சுத்தம் செய்ய வேண்டும். சுவாசப்பை, கல்லீரல், பெருங்குடல், சிறுநீரகம் ஆகியவற்றைச் சுத்தம் செய்யும் ஒரே மூலிகை கரிசலாங்கண்ணிதான். கரிசலாங்கண்ணியின் பலன் அன்றைக்கே தெரிந்துவிடும். எனவேதான் கரிசலாங்கண்ணிக் கீரையை வள்ளலார் அவ்வளவு சிறப்பாகக் கூறியிருக்கிறார். மேலும் கண்பார்வையைக் கூர்மையாக்கும்.

தேகத்திற்குப் பொற்சாயல் ஏற்படும். யாளி என்ற மிருகத்திற்குச் சமமான பலம் உண்டாகும். இக்கீரை குடலுறுப்பு நோய், காமாலை, குஷ்டம், வீக்கம், பாண்டு ஆகிய பல வியாதிகளைப் போக்கும். உடலுக்கு ஊட்டம் தரும்.

உரமாக்கி, பலகாரி, உடல் தேற்றி, வாந்தி உண்டாக்கி, நீர், மலம் போக்கி, வீக்கம் உருக்கி, ஈரல் தேற்றி, பித்த நீர்ப் பெருக்கி என்று பல சிறப்பியல்புகளைக் கொண்ட இக் கீரையை மதியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இக் கீரையைப் பரு ப்புக் கலந்த கீரைக் குழம்பாக வைத்தும் சாப்பிடலாம். இது மிகவும் ருசியாக இருக்கும்.

நமது உள்ளுறுப்புகளில் முக்கியமானவை கல்லீரல், இருதயம், சுவாசப்பை. (மிகவும் முக்கியம் கல்லீரல்). சுத்த இரத்தத்தை உடல் முழுவதும் விநியோகித்துக் கெட்ட இரத் தத்தைச் சுத்தம் செய்வதற்காக சுவாசப்பைக்கு அனுப்புவது என்ற ஒரே வேலைதான்!

இருதயத்திற்கு, ‘‘பம்பிங் ஸ்டேஷனாக’’ வேலை செய்கிறது. அது போல சுவாசப் பைக்கும் ஒரே வேலைதான்! அதாவது கெட்ட இரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி பிராண வாயுவை ஊட்டி இரத்தத்தைச் சுத்தம் செய்வதற்காக சுவாசப் பைக்கு அனுப்புவது என்ற ஒரே வேலைதான்! அதாவது கெட்ட இரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி பிராண வாயுவை ஊட்டி இரத்தத்தைச் சுத்தம் செய்வது.
ஆனால் கல்லீரலுக்குப் பல வேலைகள், கல்லீரலின் வேலைகளை ஒழுங்குபடுத்திக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பது கரிசலாங்கண்ணியின் வேலையாகும்.

கல்லீரலில் ஒரு கோளாறு ஏற்பட்டால் அதன் வேலைகள் பாதிக்கப்படும். ஏதேனும் ஒரு நோய் வந்து உடலைத் தாக்கும்.

1. அஜீரணம், 2. வயிற்று வலி, 3. குடற் புண் (அல்சர்) 4. காய்ச்சல் 5. இரத்த சோகை 6. மஞ்சள் காமாலை 7. பாண்டு 8. மலச்சிக்கலும் அதனால் வரும் நோய்களும் 9. கொழுப்பு அதிகமாக உடலில் சேருவதால் உண்டாகும் இரத்தக் கொதிப்பு நோய் 10 இருதய நோய் 11. இரத்த வாந்தி, பித்தப்பையையும், கல்லீரலையும் சீராக வைத்துக் கொள்ள கரிசலாங்கண்ணி போன்ற ஒரு மருந்து எதிலும் இல்லை என்றே கூறலாம்.

கால்சியம் இல்லாமல் இருதயத்தின் சுருங்கி விரியும் தன்மை ஒழுங்காக நடக்காது. கைகால்களை அசை விக்கும் தசை நார்கள் சரியாகச் சுருங்கி விரியாது. இரத்தம் உறையாது. இந்த மாதிரி உடம்பில் நடக்கும் பல ரசாயன மாறுதல்களுக்கும் முக்கியத் தேவையாக இருப்பது கால்சியம்.
நரம்புகளுக்கும், இரத்தக் குழாய்களுக்கும், இதயத்திற்கும் சுருங்கி விரியும் தன்மை ஒழுங்காக இருப்பதற்கு கால்சியம் உயிர்நாடியாக இருக்கிறது. கால்சியம் சத்தின் குறைவின் காரணமாக இருதய நோய், இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் உண்டா கின்றன.

உடம்பின் உள்ளுறுப்பு கள் அனைத் தும் நன்றாக இயங்க வேண்டுமா னால் கால்சியம் தேவை.

கரிசலாங் கண்ணியைப் போல கால்சியமும் பாஸ்பரசும் இணைந்து அதிகமாக இருக்கக் கூடிய வேறு உணவுப் பொருள் இ ல்லையென்றே கூறலாம். இரத்த அழுத்தம், இருதய நோயுள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி ஒரு வரப்பிரசாதமாகும். இது சஞ் சீவி மருந்தாகும். புரதம் 4.4, கொழுப்பு 0.8, தாதுப் பொருள் 4.5, மாவுப் பொருள் 9.2, சக்தி 62 கிலோ கலோரி, கால்சியம் 306, பாஸ்பரஸ் 462, இரும்பு 8.9, வைட்டமின் இல்லை.

கரிசலாங்கண்ணிக் கீரையில் இரு வகை உண்டு.

1. வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி,
2. மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை, மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாகும். வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் கொஞ்சம் சத்து அதிகம்.

இவ்வளவு நன்மைகள் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையைத் தவறாமல் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக