பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 14 அக்டோபர், 2011

தேன் இருக்க பயம் ஏன்?

ஒரே ஒரு தேனீ 4000 பூக்களுக்குச் சென்று வந்தால்தான் ஒரு தேக்கரண்டி தேனை தயாரிக்க முடியும். இப்படிப்பட்ட தேனில் வைட்டமின் பி1, பி2, பி6, பி5, பி3 என ஐந்து பி குருப் வைட்டமின்களும் உள்ளன. நோய்களைப் பரப்பும் கிருமிகளை உடலுக்குள் செல்லாமல் தடுக்கும் சக்தி படைத்தது தேன். நோயணுக்களால் தாக்கப்பட்ட புண்களில் தேனைத் தடவி வந்தால் தேனில் உள்ள சத்துக்கள் புண்கள் மேலும் புண்ணாகாமல் தடுக்கப்படுவதுடன் குறிப்பிட்ட புண்ணும் விரைவில் ஆறி குணமாகிவிடும்.

தினமும் இருவேளை கிரீன் டீ சாப்பிடலாமா?

உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை வளர்சிதை மாற்றத்தின் மூலம் வேகமாகக் குறைப்பதற்கு கிரீன் டீ உதவுகிறது. எனவே, தினமும் இரு வேளை கிரீன் டீயும், ஒரு வேளை பால் சேர்த்த காபியோ அல்லது தேநீரோ அருந்தி வருவது நல்லது. உணவு எளிதாக ஜீரணமாகவும், கொலஸ்ட்ரலைக் கரைக்க ஃப்ளாவோனாய்ட்ஸும் போதிய அள வில் தேநீரில் உள்ளன. மேலும் இயற்கையாக சிரமமின்றி சிறுநீர் வெளி யேறவும் உதவு கிறது.

தயிரைப்போல ஒரு காய்கறி!

தயிரில் உள்ளது போலவே ப்ரோபயோட்டிக்ஸ் (Probiotics) என்ற நல்ல பாக்டீரியா உள்ள காய்கறியாக வெண்டைக்காய் திகழ்கிறது. நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள வைட்டமின் பி உடலில் நன்கு சேர ப்ரோபயோட்டிக்ஸ் உதவுகிறது. மேலும் மூளை செயல்பாட்டிற்கு உதவும் பாஸ்பரஸ் உப்பும் வெண்டைக்காயில் அதிகம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல அனைத்து வயதினருக்கும் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகும். இளையராஜா தனக்கு மிகவும் பிடித்தது வெண்டைக்காய் என்று ஒரு முறை கூறினார். இதற்குக் காரணம் மூளையில் பாஸ்பரஸ் உப்பு குறையாமல் வெண்டைக்காய்ப் பச்சடி பார்த்துக் கொள்வதே! தயிரைப் போல உடல்நலனைப் பாது காப்பதுடன் மூளையின் சக்திக்கும் வெண்டைக்காய் உதவுகிறது என்பது உண்மையே!

காலை உணவால் என்ன நன்மை?

இரவு தூங்கி காலையில் எழுந்தபிறகு ஏழு, எட்டு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். எனவே, காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடச் சொல்கின்றனர். இதனால் உடலுக்கு போதிய அளவு உணவும், கிடைத்துவிடும். உறுப்புகள் நன்றாகச் செயல்பட சத்துணவும் வைட்டமின்களும், தாது உப்புகளும் கிடைத்துவிடுகின்றன. இதனால் உணவின் மூலம் உடலுக்கு போதிய அளவு சக்தியும் கிடைத்து விடுவதால் சுறுசுறுப்பாக காலை நேரத்தில் நம் பணிகளைச் செய்து முடிக்கிறோம். காலை உணவு சாப்பிடாதவர்களையும், காலை உணவு சாப்பிட்டவர்களையும் தொடர்ந்து கண்காணித்து ஆராய்ந்ததில் காலை உணவு சாப்பிடாதவர்கள் குறைந்த அளவு சக்தியுடனேயே பணியாற்றுவதைக் கண்டுபிடித்தனர். ஆனால், காலை உணவு சாப்பிட்டவர்கள் சக்தியுடன் சுறுசுறுப்பாக வேலை செய்ததுடன் எளிதில் கோபப்படாத அமைதியும் புன் னகையும் ததும்பும் விதத்தில் பணியாற்றுவதையும் கண்டுபிடித்தனர்.

காலை நேர சோர்வைத் தவிர்க்க சிறந்த வழி, ஆரோக்கியம் மிகுந்த உணவை காலை உணவாக சாப்பிட்டு வரவும். பால், பழங்கள் சாப்பிடலாம். ஆனால், கண்டிப்பாக இட்லி, தோசை, பொங்கல், இடியாப்பம் என்று அரிசியில் தயாரான உணவு ஒன்றும் தவறாமல் இடம் பெற வேண்டும். ஏன் இப்படி? அரிசியில் மட்டுமே மனதிற்கு திரு ப்தியையும் மகிழ்ச்சியையும் தரும் லைசின் என்ற அமினோ அமிலம் தாராளமாக இருக்கிறது. சாம்பாரும் சட்னியும் இடம் பெற வேண்டும். இதன்மூலம் நோய்களைத் த டுக்கும் பி குரூப் வைட்டமின்கள் உடலுக்கு நன்கு கிடைத்துவிடும். அரிசி உணவைத் தவிர்த்தால் வாரத்தில் இரண்டொரு நாட்கள் கேழ்வரகு, தினை, கம்பு போன் றவற்றைச் சேர்க்கலாம். கோதுமையில் தயாரிக்கப்படும் சப்பாத்தி போன்றவை இரவு உணவிற்கே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக