பிரபலமான இடுகைகள்

திங்கள், 3 அக்டோபர், 2011

உடல் நலம்

கர்ப்பிணிகள் அதிக அளவில் காபி அருந்துவது அவர்களது உடல்நலத்திற்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் நல்லதல்ல என்று மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கர்ப்பிணிகள் காபி குடிப்பது நல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். தினமும் ஒரு வேளை காபி அருந்தி வந்தால் காபியில் உள்ள காஃபின் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் மூலம் குறை பிரசவம் தடுக்கப்படும் என்று அமெரிக்க மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் வில்லியம் பர்த்தும் அவரது குழுவினரும் தெரிவித்துள்ளனர். இத்துடன் நான்கு கப் தேநீர், குளிர்பானங்கள் அல்லது 6, 7 பார் சாக்லேட்டுகளையும் சாப்பிடலாம் என்று கூறியுள்ளனர். காபி ஒரு வேளை, தேநீர் நான்கு வேளை சாப்பிட்டாலும் உடனுக்குடன் ஒரு டம்ளர் தண்ணீரும் அருந்தி விடுவது நல்லது.

வால்நட் சாப்பிட மறவாதீர்கள்!

இங்கிலாந்தில் உள்ள மார்ஷெல் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவுத் தலைவர் எலைன் ஹார்டுமேன் என்ற பேராசிரியர். இவர் வால்நட் பருப்புகளை எலிக்குக் கொடுத்து பரிசோதித்தார். இதன் மூலம் வால்நட் சாப்பிட்டால் மார்பகப் புற்றுநோய் அபாயம் குறைவாக இருந்ததைக் கண்டுபிடித்தார். வால்நட் பருப்புகள் கலக்காத உணவை உண்ட எலிகளுக்கு ஏற்படும் மார்பகப்புற்று நோய் அபாயத்தைவிட மார்பகப்புற்றுநோய் குறைவான அளவிலேயே காணப்பட்டது. இத்துடன் மூளையில் கட்டி ஏற்படுவதும், அவற்றின் அளவும் குறைவாக இருந்தது. மார்பகப்புற்றுநோயைத் தடுத்துக் கொள்ளவும், மூளையில் கட்டி உருவாகாமல் இருக்கவும், பெண்கள் தினமும் வால்நட் பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், வால்நட் இதய ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கிறது. இந்தப் பருப்பில் உள்ள லினோலெய்க் அமிலம் கொலஸ்ட்ரல் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த த்தில் கட்டிகள் தோன்றி இரத்தக்குழாய் அடைத்துக் கொள்வதையும் தடுக்கிறது. அடிக்கடி பசி, பசி என்பவர்களின் பசியை அடக்குவதிலும் வால்நட் உதவுகிறது. இந்தப் பருப்பில் உள்ள அதிகக் கலோரியும், முக்கியமான சத்துக்களும் வயிற்றுக்கு திருப்தியையும் உடலுக்கு நன்கு ஆரோக்கியத்தையும் வழங்கி விடுகின்றன. எனவே, அகோரப்பசி என்பவர்கள் உணவைக் குறைவாகச் சாப்பிட தினமும் வால்நட் பருப்பு சாப்பிட்டு வந்தால் போதும்.

தினமும் ஒரு சோளக்கதிர் சாப்பிடுங்கள்!

அடிக்கடி பசி எடுப்பவர்களுக்கு வால்நட், குடிதண்ணீர் போல் ஒரே ஒரு சோளக்கதிரும் அகோரப் பசியை அடக்கிவிடுகிறது. காய்கறியாகவும் முழுத்தானிய உணவாகவும் திகழும் சோளத்தில் உயர்தரமான மாவுச்சத்தும் தாராளமாக நார்ச்சத்தும் உள்ளன. இதனால் மனமும் வயிறும் உடனடியாக நிரம்பி விடுவதால் அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற பேரவா அடங்கிப் போய்விடுகிறது.

மேலும் சோளத்தில் நன்கு சேமிப்பில் உள்ள ஃபோலேட் என்ற பி குரூப் வைட்டமின் லூட்டீன் என்ற சத்தும் முறையே இதயத்தையும் கண்களையும் நன்கு ஆரோக்கியமாக பராமரிக்கின்றன. ஒரு மனிதனுக்கு தினமும் தேவையான நார்ச்சத்தில் 15% சோளம் மூலம் கிடைத்துவிடுகிறது.

மேலும், தினசரி தேவையான தயாமின் என்ற பி குரூப் வைட்டமின்னில் 25% சோளம் மூலம் கிடைப்பதால் மாவுச்சத்தை உடனடியாக உடல் செல்களில் இடம்பெறச் செய்து சக்தியை உற்பத்தி செய்து உடலையும் சுறுசுறுப்பாக்கி விடுகிறது. எனவே, தினமும் சோளக்கதிர் ஒன்று சாப்பிட்டு வருவதில் ஆர்வமாக இருங்கள். 50 கிராம் பாப்கார்ன்கூட இந்த வகையில் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக