பிரபலமான இடுகைகள்

திங்கள், 24 அக்டோபர், 2011

ஆரோக்கியமாக இருப்பவர்கள்

ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் பருமனை பற்றி கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநில பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உடல் பருமன் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஆதர்ஷ் குப்தா தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 454 பேரின் மருத்துவக் குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களிடமும் பரிசோதனைகள், கருத்துக் கணிப்பு மேற்கொள் ளப்பட்டது. ஆய்வு சொல்லும் தகவல்கள் வரு மாறு:

உடல் எடையை உயரத் தின் இருமடங்கால் வகுத்து கிடைக்கும் தொகை பி.எம்.ஐ. (பாடி மாஸ் இண்டக்ஸ்) எனப் படுகிறது. இது 18.5 முதல் 25 வரை இருப்பது நார்மல் என கருதப்படுகிறது. குறைந்தால் ஒல்லி என்றும் அதிகரித்தால் குண்டு என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. 25-30 இருப்பது அதிக எடை என்றும் 30-35 இருப்பது சுமார் குண்டு, 35-40 என்பது அதிக குண்டு. 40-க்கு மேல் இருந்தால் அதிகபட்ச குண்டு என்றும் கூறப்படுகிறது.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 454 பேரில் 135 பேரின் பி.எம்.ஐ. அதிகமாக இருந்தது.பருமனாக இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தனர். அவர்களது உடலில் கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகள் சரியான அளவில் இ ருந்தது. இந்த நிலை ‘மெடபாலிகலி ஹெல்தி ஓபீஸ்’ (எம்ஹெச்) எனப்படுகிறது. அதாவது, வளர்சிதை மாற்றம் காரணமாக எடை அதிகரித்தவர்கள். பருமனாக இருப்பவர்களில் சுமார் 30 சதவீதத்தினர் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

167 பேர் அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஆரோக்கியமற்றவர்களாக இருந்தனர். இதை ‘மெடிகலி அன்ஹெல்தி ஓபீஸ்’ (எம்யுஒ) என்கிறோம். இதுதான் ஆபத்தானது. ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, உப்பு அளவு ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருப்பதுதான் முக்கியம். உடல் பருமனாக இருந்தால்கூட இவற்றை கட்டுக்குள் வைக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக