பிரபலமான இடுகைகள்

திங்கள், 24 அக்டோபர், 2011

முதியோருக்கு என்று ஒரு தனி சமையல்

‘‘முதியோருக்கு என்று ஒரு தனி சமையல்... இளையோருக்கு என்று ஒரு சமையல், குழந்தைகளுக்கு என்று ஒரு எளிய சத் தான சமையல்... அப்பப்பா... முடியலைடா சாமி’’ என்று அங்கலாய்த்து அவஸ்தைப்படும் தாய்மார்கள் நிறைய பேர். அத்தனை வயசுக்காரர்களுக்கும் ஏற்ற சத்தான,
சுவையான சமையல் குறிப்பு களைக் கொடுங்களேன் என்று பல விண்ணப்பங்கள். இதோ, அவர்களின் ஆதங்கத்தைத் தீர்க்க ஒரு முழுமையான குடும்பத்துக்கும் நிறைவைத் தரக்கூடிய சமையல் குறிப்புகள். அத் தனையும் மருத்துவ குணம் வாய்ந்தவை. தயாரிக்க எளிமையானவை. மிகவும் விலை மலிவான பொருட்களைக் கொண்டே தயாரிக்கக்கூடிய சிக்கன சமையலும்கூட.

சம்பா சங்க் உப்புமா

தேவை

உடைத்த சம்பா கோதுமை - 1 கப்
சோயா சங்க் (அல்லது வேக வைத்து உதிர்த்த மீல் மேக்கர்) - லு கப்
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - லு கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - லு கப்
நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் - 3
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 5
பெருஞ்சீரகம் - ரு தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
(பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் பிடிக்காதவர்கள் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளித்துக்கொள்ளலாம்.) உப்பு - ருசிக்கேற்ப
சன் பிளவர் ஆயில் - ரு கப்
செய்முறை
சோயா சங்க்கை அல்லது சோயா மீல் மேக்கரை வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு வெளியே எடுத்து பச்சைத் தண்ணீரில் முக்கி உடனடியாகப் பிழிந்து உதிர்த்து நீர்ப் பதம் போக உலரவிடவும்.
உடைத்த சம்பா கோதுமையை சுத்தப்படுத்தி லேசாக வறுத்து வைக்கவும். குக்கர் பேனில் எண்ணெயை விட்டு சூடாக்கி, அதில் பட்டை, கிராம்பு மற்றும் பெருஞ்சீரகம் போட்டு வதக்கி, கிள்ளிய கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்
கவும்.
அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, அதன்
பின் தக்காளியையும் ஒரு துளி உப்பையும் சேர்த்து வதக்கவும்.
கோதுமையின் தன்மைக்கு ஏற்ப நீர் சேர்த்து கொதிக்கும்போது, அத்துடன் உடைத்த கோதுமை, உதிர்த்த சோயா மீல் மேக்கர் ஆகியவைகளை சேர்த்து உப்பு கூட்டி மூடி போட்டு மூன்று விசில் வந்தபின் இறக்கி சூடாக சுவைக்கவும்.
மாறுபட்ட சுவையுடன் சத்தான உப்புமா ரெடி.
புதினா சட்னி இதற்கு மிகவும் தோதாக
இருக்கும்.

வாழைப்பூ அடை

தேவை
ஆய்ந்த வாழைப் பூ - 1 கப்
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
கடலைப் பருப்பு - லு கப்
மிளகாய் வற்றல் பொடி - 1 தேக்கரண்டி
ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு... கால் தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ரு தேக்கரண்டி
சர்க்கரை - லு தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
நெய் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ரு கப்
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்... தாளிதம் செய்ய.

செய்முறை

அரிசி, பருப்பு வகைகள் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து பின் சுத்தப்படுத்தி கரகரப்பாக அரைக்கவும்.
வாழைப்பூவை ஆய்ந்து பொடியாக நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் மிருதுவாக வேக வைத்து எடுத்து ஈரத் தன்மை போக உலரவிடவும். அரைத்த மாவுடன் வாழைப்பூவைச் சேர்த்து உப்பு கூட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து, அதை மாவுக் கலவையுடன் சேர்த்துப் பிசறி தோசைக் கல் லில் சிறு சிறு அடைகளாக வார்த்து முறுகலாக சுட்டு எடுக்கவும். மிகவும் சுவையாக இருக்கும். விருப்பப்படுவோர் தேங்காய் சட்னியுடன் சுவைத்து சாப்பிடலாம்.

அகத்தி பால்ஸ்

தேவை
மைதா மாவு - அரை கப்
சிரோட்டி ரவை - 1 தேக்கரண்டி
அகத்திக்கீரை - 1 கப்
உதிர்த்த சோயா (மீல் மேக்கர்) - லு கப்
உடைத்த கடலை - 1 கப்
தேங்காய்த் துருவல் - லு கப்
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
(கார சுவைக்கு ஏற்ப அளவு மாறலாம்)
கசகசா - 1 மேஜைக்கரண்டி
வெல்லப் பொடி - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்பொடி - ரு தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - பொரித்து எடுக்க.

செய்முறை

கீரையைப் பொடியாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி வைக்கவும். கசகசாவை சிவக்க வறுத்து எடுக்கவும்;
பொடிக்கவும். தேங்காய்த் துருவலை வெறும் வாணலியில் வதக்கவும். சோயா (மீல்மேக்கரை) வெண்ணீரில் ஒரு நிமிடம் போட்டு வெளியே எடுத்து உடனடியாக தண்ணீரில் முக்கி எடுத்து ஒட்டப் பிழிந்து உதிர்த்து ஈரம் போக உலரவிடவும். மிக்சியில் இட்டு கரகரப்பாக கெட்டியாக அரைக்கவும்.

இத்துடன் உடைத்த கடலை, கசகசா, வெங்காயம், பச்சைமிளகாய், வெல்லப் பொடி, உப்பு ஆகியவைகளை சேர்த்து அரைத்து, வதக்கிய கீரை மற்றும் கொத்துமல்லி இலைகளைச் சேர்த்துக் கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

மைதா, சிரோட்டி ரவை அதற்குத் தேவையான உப்பு ஆகியவைகளோடு போதுமான தண்ணீர் சேர்த்து (தோசை மாவு பதத் தில்) மேல் மாவு தயாரித்து வைக்கவும்.

பிடித்து வைத்த உருண்டைகளை, மைதாவில் முக்கி எடுத்து வாணலியில் காயும் எண்ணெயில் விட்டு, சிவக்க வெந்ததும் எ டுத்து காரச் சட்னியுடன் சுவைத்து சாப்பிடவும். வெல்லம் சேர்ப்பதால் கசப்புச் சுவை மறைந்துவிடும். இரும்புச் சத்தும்கூட.

இதுவரை அகத்தியைத் தொட்டுப் பார்க்காதவர்கள்கூட ‘கொண்டா... இன்னமும் கொண்டா’ என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவர். குறிப்பாக இளவயதினரை வெகுவாகக் கவரும் ஒரு நவீன சுவை மிகுந்த பண்டம்.
வயிற்றுப் பிரச்னை உள்ளவர்களுக்கு அகத்தி ஒரு அற்புத மூலிகை.

மல்லி சாலாட்

தேவை
கொத்துமல்லி (இலைகள் மட்டும்)... 1 கப்
புளிக்காத கட்டித் தயிர்... வு கப்
துருவிய கேரட்... லு கப்
துருவிய நூல்கோல்... ரு கப்
மிளகுத்தூள் மற்றும் உப்பு... ருசிக்கேற்ப
சாலட் ஆயில்... லு தேக்கரண்டி

செய்முறை :

தயிருடன் சாலட் ஆயிலை நன்கு கலக்கவும். கொத்துமல்லி இலைகள், துருவிய கேரட், நூல்கோல் ஆகியவைகள் சேர்த்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலக்கி குளிர வைத்து சுவைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக