பிரபலமான இடுகைகள்

புதன், 5 அக்டோபர், 2011

முறையான தேடுதலும், அதற்கான கடின உழைப்பும் நம்மிடம் இருந்தால்

சேலத்தில் ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு டெல்லியில் உள்ள அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

முதல் முறையாக ஒரு பெண் என்ற முறையில் தனக்குக் கிடைத்திருக்கும் பெருமையோடு நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சேலத்தைச் சேர்ந்த அபிராமி.

“என்னோட சொந்த ஊரு சேலம். நான் பிளஸ் டூவில் 1101 மார்க் எடுத்தேன். எனக்கு இன்ஜினீயர் ஆகணும்னு ஆசை. ஆனா என்னோட குடும்பச் சூழ்நிலையினால என்னால படிக்க முடியலை. சரின்னு சொல்லி மனசைத் தேத்திக்கிட்டு பி.எஸ்.சி. இயற்பியல் சேர்ந்தேன். அதுக்கப்புறம் பி.எட். படிச்சிட்டு ஒரு ஸ்கூல்ல டீச்சரா வொர்க் பண்ணிட்டு இருந்தேன்.

இந்த சமையத்திலதான் குரூப் தேர்வுகளை எழுதலாமேன்னு தோணுச்சு. அதுக்காக இடைவிடாம படிக்க ஆரம்பிச்சேன். பேங்க் தேர்வுகள் உட்பட ஒண்ணுவிடாம எழுதினேன். கடைசியில தபால்துறையில தேர்வெழுதி இப்போ சேலம் போஸ்ட் ஆபீஸ்ல கிளரிக்கல் அசிஸ்டென்ட்டா இருக்கேன். அதுக்கப்புறமும் குரூப் தேர்வுகள் எழுதறதை விடலை. அப்போதான் Staff Selection Commissionல இருந்து அறிவிப்பு வெளிவந்துச்சு. சரி.. அட்டென்ட் பண்ணித் தான் பார்ப்போமேன்னு இறங்கிட்டேன். கிட்டத்தட்ட நாலு மாசம் என்னோட முழு முயற்சியை இந்த எக்ஸாமுக்காக செலவிட்டேன்.

முயற்சிக்கான பலனும் கிடைச்சிருக்கு. ஷிஷிசி ரிசல்ட்ல தமிழ்நாட்டுல இருந்து தேர்வாகியிருக்குற ஆட்கள்ல நானும் ஒருத்தி. டெல்லி மத்திய அமைச்சரவை அலுவலகத்தில் வேலை, வர்ற நவம்பர் மாதம் போஸ்டிங் கிடைக்கும். நெனச்சுப் பார்க்கும் போதே பெருமையா இருக்கு. ஆனா ஒவ்வொரு எக்ஸாம் எழுதும் போதும் நான் ரொம்ப வேதனைப்பட்ட ஒரு விஷயம் ஊழல் தான். எங்க திரும்புனாலும் பணம் கேட்டு நச்சரிச்சாங்க. கையில பணத்தோட போனா வேலை ஈஸியா முடிஞ்சுடும்கிற நிலை இன்னைக்கு நிறைய இடங்கள்ல இருக்கு.

அந்த நிலையை மாத்த நான் முயற்சி செய்வேன். ஊழலற்ற அதிகாரியா நான் எப்பவும் செயல்படுவேன்.

இன்னைக்கு டி.என்.பி.எஸ்.சி. மட்டும்தான் இருக்குனு நிறையப் பேர் நினைக்குறாங்க. அது ரொம்பவே தப்பு. உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு. முறையான தேடுதலும், அதற்கான கடின உழைப்பும் நம்மிடம் இருந்தால் எல்லாவற்றிலும் சாதிக்கலாம். இதுக்கு நானே ஒரு உதாரணம்!’’ என்ற அபிராமிக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக