பிரபலமான இடுகைகள்

திங்கள், 24 அக்டோபர், 2011

கொட்டை வகை உணவுகளின் இரகசியம்.

பறங்கிக்காயையும் அதன் விதைகளையும் ஆண்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். பறங்கி விதையில் உள்ள குகர்பெட் டாசின்ஸ் என்ற பைட்டோ-நியூட்ரியண்ட் வயதாக வயதாக விந்துச் சுரப்பி விரைந்து பெரிதாக வளர்வதைத் தடை செய்துவிடு கிறது. பிராஸ்டேட் சுரப்பி என்றும் சொல்லப்படும் இந்த சுரப்பியை பெரிதாகாமல் பார்த்துக் கொள்வதுடன் எலும்பு மண்டலம், கண்கள் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கும் படு தாராளமாக துத்தநாக உப்பு பறங்கி விதைகளில் உள்ளது. மேலும் ஒமேகா-6 என்ற முக்கியமான கொழுப்பு அமிலம், மாங்கனீஸ் தாது உப்பும் இந்த விதைகளில் உள்ளன. தினமும் 20, 25 பறங்கிவிதைகளையே சாப்பிட்டு வந்தால் பிராஸ்டேட் சுரப்பி மெதுவாக வளர உதவி செய்து நீண்ட நாள்கள் வாழலாம்.

காலையில் எழுந்ததும் ஒரு கோப்பை கறுப்பு காபி அருந்தினால் நேற்றைய கவலை எல்லாம் உடனே ம(¬)றந்து புத்துணர்வு ஏற்படும். அதிகபட்சம் (பால் கலவாத) மூன்று வேளை காபி அருந்திவந்தால்போதும். நாள் முழுவதும் புத்துணர்வுடன் வாழலாம். நான்காவது முறையாக இன்னொரு வேளை (Black Coffee) காபி அருந்தினால் இதே காபி உடலில் நீர்க்கூறை அகற்றுவதுடன் மனக்கவலையையும் அதிகரித்துவிடும். எனவே, தமிழர்கள், அளவுடன் தண்ணீர்விடாத பாலில் புது டிக்காஷன் காபியை அருந்தி (இரு வேளை மட்டும்) வாருங்கள். ஒருவேளை கறுப்பு காபி அருந்துங்கள். இதனால் உங்கள் உற்சாகம் மற்றவர்களையும் உற்சாகமாக வாழவைக்கும். ஹார்வார்டு பல்கலைக்கழகம் 51 ஆயிரம் பெண்களை 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்ததில் மிகவும் படபடப்பும் டென்ஷனும் ஆன பெண்கள் தினமும் மூன்று வேளை கறுப்பு காபி அருந்தி வந்ததன் மூலம் உற்சாகமாக இருந்ததைக் கண்டுபிடித்தனர். இத்துடன் குறிப்பிட்ட அமினோ அமிலத்தின் மூலம் செரோட் டனின் என்ற உற்சாகத்தைப் புதுப்பிக்கும் பொருளும் நன்கு சுரந்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். ஒரு தடவை கறுப்பு காபி அருந்தினால் நான்கு மணி நேரம் மன இறுக்கம் இன்றி நம் வேலைகளைச் செய்ய முடியும் என்கிறார் மைக்கேல் லூகாஸ். இவர் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தில் பணிபுரியும் டாக்டர் ஆவார். மொத்த த்தில் காபியில் உள்ள காஃபின் உண்மையில் ஓர் ஆரோக்கிய மருந்து பானம் என்கிறார் இவர். எனவே, இரண்டு வேளை கறுப்பு காபி, ஒரு வேளை கறுப்பு தேநீர் என்றும்கூட நீங்கள் அருந்தி வரலாம். பால் கலக்காமல் காபி, தேநீர் அருந்த முடிந் தவரை முயற்சி செய்யுங்கள்.


கொட்டை வகை உணவுகள் உண்மையில் நல்லதா?

வாரத்திற்கு 5 முறை ஒரு கைப்பிடி அளவு ஏதாவது ஒரு கொட்டை வகை உணவைச் சாப்பிட்டு வந்தால் 5 முதல் 15 ஆ ண்டுகள் வரை கூடுதலாக வாழலாம். லோமா லிண்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வில் இப்படிச் சாப்பிடுகிறவர்களின் ஆயுள் 1லு முதல் 2லு ஆண்டுகள் வரை அதிகரிப்பதைக் கண்டுபிடித்தனர். நீண்ட நாள்கள் இந்த அளவு கூடாமல் குறையாமல் சாப்பிட்டு வந்தால் 15 ஆண்டுகள் கூடுதலாக உங்கள் உடல்நலம், ஜாதகநலன் போன்றவற்றைத் தாண்டி உறுதியாக வாழலாம். கொட்டை வகை (பாதாம், வேர்க்கடலை, வால்நட், பிஸ்தா போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை மாற்றி மாற்றி சாப்பிடலாம்) உணவு சாப்பிட்டு வரும்போது இதயநோய், மாரடைப்பு போன்றவை தாக்குவது 35% முதல் 50% வரை உடனடியாக கு றைகிறது. இதனால் மற்றவகை ஆரோக்கிய உணவுகளும் சாப்பிடுவரும்போது இதய நோய் முற்றிலும் குணமாகி வாழ்நாள் நீடிக்கிறது. இதுவே நீண்ட ஆயுளைத் தரும் கொட்டை வகை உணவுகளின் இரகசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக