பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 14 அக்டோபர், 2011

குடல் புண்களை குணப்படுத்தும் கோஸ்

கேப்பேஜ் தாவரத்தின் விரியாத இலை அடுக்குகளே நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பகுதியாகும். இலை பயன்படுவதால் இதை தூய தமிழில் ‘‘இலைக்கோசு’’ என்று தாவர இயல் நிபுணர்கள் கூறுகிறார்கள். பேச்சு வழக்கில் ஆங்கிலப் பெயரான கேப்பேஜ் என்பதையே எல்லோரும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்துப் பொருட்கள் : நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் நூறு கிராம் கேப்பேஜில் அடங்கியுள்ள சத்துப் பொருட்கள் கீழ்க்க ண்ட அளவில் உள்ளன.

புரதம்:1.7கிராம், கொழுப்புச்சத்து:0.1 கிராம், நார்ப்பொருள்:1.2 கிராம், மாவுப் பொருட்கள்:4.6 கிராம், கால்சியம்:3.9 மில்லி கிராம், பாஸ்பரஸ்:24 மில்லி கிராம், இரும்புச் சத்து:0.8 மில்லி கிராம், மெக்னீசியம்:10 மில்லி கிராம், சோடியம்:14.1 மில்லி கிராம், தாமிரம் :0.09 மில்லி கிராம், கந்தகம்:67 மில்லி கிராம், குளோரின்:12 மில்லி கிராம், பொட்டாசியம்:11.6 மில்லி கிராம், கரோட் டின்:120 மைக்ரோகிராம், தயாமின்:0.07 மில்லி கிராம், ரைபோஃபிளேவின்:0.09 மில்லி கிராம், நியாசின்:0.4 மில்லி கிராம், வை ட்டமின் ‘சி’:124 மில்லி கிராம், ஆக்சாலிக் அமிலம்:3 மில்லி கிராம், ஃபைட்டின் பாஸ்பரஸ்:3.1 மில்லி கிராம், ஃபோலிக் அமிலம்:2.3 மில்லி கிராம், கோலைன் 12.3 மில்லி கிராம், சக்தி:28 கிலோ கலோரிகள்.

கேப்பேஜில் 23 வகையான சத்துப் பொருட்கள் இருப்பதால் இதை ‘‘சத்துக் கோஸ்’’ என்று சிறப்பாக நாவினிக்கச் சொல் லலாமே.

எந்த ஏஜ் (கிரீமீ) உள்ளவருக்கும் ஏற்றது கேப்பேஜ்!

பேக்கேஜ் உல்லாசப் பயணத்தால் உள்ளம் நலம்பெறும்; கேப்பேஜ் உண்பதால் உடல்நலம் பெறும்!

மருத்துவப் பயன்கள் : கேப்பேஜில் அடங்கியுள்ள பல வகை சத்துக்களுக்கும் குடல் புண்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதில் குளுட்டோமைன் என்னும் வேதிப் பொருள் கணிசமாக உள்ளது. இது உணவின் மூலம் குடல் பாதைக்குச் செல்லும் நோய்த் தொற்றுக் கிருமிகளை அழிக்கும் தன்மையது. மேலும் குடல் சுவருக்கு தீங்கு செய்யும் வேதிப் பொருட் களை செயலிழக்கச் செய்துவிடும் ஆற்றல் கேப்பேஜிற்கு உண்டு. இதனால்தான் கேப்பேஜ் குடல் புண்களைக் குணப்படுத்தும் இயற்கை மருந்தாகத் திகழ்கிறது. குடல் புண்களால் அவதிப்படுவோர்கள் கேப்பேஜை சாலட்டாக அல்லது துவரனாக தயாரித் துச் சாப்பிடுவது நல்ல பலன் கிடைக்கும். கேப்பேஜை உசிலி, கூட்டு, பச்சடி செய்தும் சாப்பிடலாம்.

கேப்பேஜ் ஜீரண சக்தியை அதிகரிக்கும். பசி ருசி ஏற்படுத்தும். எனவே அஜீரணக் கோளாறுகள் உள்ளவர்கள் கேப்பேஜை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலைப் போக்கும் தன்மை இதற்கு உண்டு. வாரத்தில மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்து வருவது நல்லது. வருடம் முழுதும் கிடைப்பது கேப்பேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்பேஜை பொடியாக அரிந்து பாலில் இட்டு நன்கு வேக வைத்து, சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர குண்டான உடல் மெலியும். உடல் எடை கணிசமாக குறையும். கேப்பேஜ் இலைகளை நறுக்கி அத்துடன் ரோஜா இதழ்களையும் சேர்த்து மெ ன்று தின்று வர தோல் வறட்சி மாறி, சருமம் பளபளப்பாகத் திகழும். சரும நோய் வராது காக்கும்.

சின்ன வெங்காயத்துடன் கேப்பேஜையும் சேர்த்து சாலட்டாக சிறிது மிளகாய்த்தூள், உப்பு தூவி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொலஸ்டிரால் சேராது தடுக்கும். இரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

கேப்பேஜில் இருபதிற்கும் மேலான பல சத்துக்கள் அடங்கி இருப்பதால் பொதுவான உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது. இதில் வைட்டமின்கள் ‘ஏ’ ‘பி’ ‘சி’ மற்றும் தாதுப் பொருட்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் (Micromutrients) இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

குடல் மற்றும் கோலன் புற்று நோய் வராது காக்கும் ஆற்றல் கேப்பேஜிற்கு உள்ளது. புற்று நோயை உண்டாக்கும் திசுக்களை வளர விடாமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.

கேப்பேஜ் சிறுநீர் கோளாறுகளைச் சீராக்கும். பித்தத்தைப் போக்கும். மூல நோய்க்கு எளிய இயற்கை மருந்து. கேப்பேஜ் உடன் மிளகு, சீரகம், திப்பிலி சுக்கு சேர்த்து கஷாயம் செய்து பருகிவர கை கால் மூட்டு வலி குணமாகும். கேப்பேஜ் குடலிலுள்ள தீமை தரும் பூச்சிகளை அழித்து மலத்துடன் வெளியேற்றும். நரம்புகளை நன்கு இயங்கச் செய்யும். கண் பார்வையை அதிகரிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக