பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 7 அக்டோபர், 2011

‘அகத்தின் அழகு நகத்தில் தெரியும்’

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. ‘அகத்தின் அழகு நகத்தில் தெரியும்’ இது புதுமொழி. ஆம் ஒருவரின் குணம் அவரின் நகத்திலும் பளிச்செனத் தெரிந்துவிடும். எப்படி என்று கேட்கின்றீர்களா?

சுத்தமாக இருப்பவர்களின் நகமும் சுத்தமாக இருக்கும். தூய்மையற்றவர்களின் நகமும் அவ்வப்போது வெட்டப்படாது அழுக்கு மண்டி காணப்படும். எப்போதும் அதிக கோபத்துடனும் கொந்தளிப்புடனும் கவலையுடனும் இருப்பவர்களின் விரல்களில் நகம் இருக்காது. நகத்திற்குப் பதிலாக சிவப்பேறிய சதையே காணப்பெறும். கோபத்தை மெல்லுவதைப் போல நகத்தைக் கடித்து மென்று துப்பி விடுவார்கள். அமைதியானவர்களின் விரல் நகங்கள் அளவோடு சீராக்கியதாக இருக்கும். அழகியல் உணர்வு உள்ளவர்களின் நகங்கள் நேர்த்தியாக திருத்தப்பெற்று அதில் இளம் வண்ணங்கள் பூசப்பெற்று இருக்கும். சற்று ஆடம்பரமானவர்களின் நகங்கள் பொருத்தமா பொருத்தமில்லையா என்ற கவலையில்லாது கண்களைக் கூசும் பளிச் வண்ணங்களில் மின்னும். கட்டுப்பாடற்ற மனம் கொண்டவர்களின் நகங்கள் இன்னும் ஒரு படி மேலே போய் பிறரை அச்சுறுத்தும் அளவு கூராக்கிய கத்தி போல நீண்டு, பல வண்ணங்களுடனும் பூ, காய், கனி, பறவை என்று பல படங்களுடனும் மின்னும். இப்போது கூறுங்கள். இந்த புது மொழி பொருத்தம் தானே?

நகங்களை வைத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைக் கணித்து விடலாம். சாம்பல் படிந்த வெள்ளைநிற புள்ளிகள் உளள நகங்கள் உலோகம் மற்றும் உப்புச்சத்து பற்றாக்குறையையும், வெளுத்துப்போன நகங்கள் ரத்த சோகையையும், கருத்த நகங்கள் கல்லீரல் மற்றும் நுரையீரல் பலஹீனத்தையும், நீல நிற நகங்கள் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவையும் ஆஸ்துமா, இதயநோய்களின் அறிகுறியையும் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அறிகுறியையும். கீறல் அல்லது குழிகள் விழுந்து காணப்பட்டால் சரும நோய்களின் அறிகுறியையும். வைட்டமின் குறைபாட்டையும், சொத்தையான நகங்கள் ஒவ்வாமை மற்றும் தோல் நோய்களையும் உள்நோக்கி குழிந்திருந்தால் இரும்புச்சத்து, விட்டமின் பி12 பற்றாக்குறையையும் காட்டுவதாக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

. அதுமட்டுமல்ல. நகங்களால் ஒருவரின் பழக்க வழக்கங்களும் அம்பலத்திற்கு வந்து விடும். புகைப் பழக்கம் உள்ளவர்களின் நகம் பழுப்பாகவும் மதுப்பழக்கம் உள்ளவர்களின் நகம் கருப்பாகவும் தோன்றி அவர்களின் அப்பழக்கத்தைக் காட்டிக் கொடுத்து விடும் ஆரோக்கியமான நகங்கள் என்பது இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.நகத்தை வைத்து ஒருவரின் வயதைக் கண்டுபிடித்து விடலாம். நம் வயதைக் காட்டும் கண்ணாடியாகச் செயல்படும் நகத்தை அவ்வப்போது கவனித்தால் சற்று வயதைக் குறைத்துக் காட்டும். இல்லாவிட்டால் வயதைக் கூட்டிக் காட்டி நம்மை முதியோர் பட்டியலில் இணைத்து விடும். அதனால் நகத்தை அழகாக பராமரித்து வைத்துக்கொண்டால் வயதைக் குறைவாகக் காட்டிக்கொள்ளலாம்.

நக?ம் கடி?க்கு?ம் பழ?க்க?ம் பலருக்கு இருக்கின்றது.சிலர் எ?ப்போதாவது மன?க்கவலை? ஏ?ற்படு?ம் போது நக?ம் கடி?ப்பர். சிலர் எப்போதும் நக?த்தைத் தேடி?த் தேடி கடி?ப்பர்.இவர்கள் கால் நகங்களைக்கூட விட்டு வைக்கமாட்டார்கள்.அசந்தால் அடுத்த வீட்டுக்காரர் நகத்தையும் கடிக்கப் புறப்பட்டுவிடுவார்கள். இ?வ்வாறு நக?ம் கடி?க்கு?ம் பழ?க்க?ம் இரு?ப்பது கூட நர?ம்பு ?ச?ம்ப?ந்தமான ?பிர?ச்?சினையாக இரு?க்கலா??ம் எ?ன்?கி?ன்றன?ர் மரு?த்துவ?ர்க?ள். இதிலும் ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி ஒன்று தற்காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தன்னம்பிக்கை அதிகம் இல்லாதவர்களே நகம் கடிப்பார்கள் என்ற பொதுவான கருத்து மாறி எப்படியேனும் கடுமையாக முயற்சி செய்து தாம் எடுக்கும் செயலை முடிக்கும் மன வலிமையும் உடல் வலிமையும் இருப்பவர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கிறார்கள் என்கின்றது தற்போதைய புதிய ஆய்வு.

விரல் நுனிகளில் ஏராளமான உணர் நரம்பு கூட்டங்கள் பின்னிப் பிணைந்துள்ளன.விரல் நுனிகளின் நரம்புக் கூட்டங்களைப் பாதுகாப்பதற்கு இறைவனால் வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசம்தான் நகங்கள். நகங்களைப் பாதுகாப்பாக வைத்தால்தான் விரல்களையும் சக்தி குறையாமல் பாதுகாக்க முடியும்.

நகம் கெரட்டின் என்றழைக்கப்பெறும் நகமியம் என்னும் புரதப் பொருளால் ஆன அழகிய பகுதி. சத்தமில்லாமல் நாளும் வளர்ந்து கொண்டிருக்கும் இதனை உகிர் என்றும் கூறுவர். நகங்கள் சுண்ணம்பு, பாஸ்பரஸ், புரதச் செல்களின் கலவையாகும். நாம் அதிகமாக உட்கொள்ளும் உலோகங்களும் நச்சுப் பொருள்களும்கூட உடலால் வெளியேற்றப்பட்டு, நகத்தால் சேமித்து வைக்கப் படுகின்றன. விரல் நுனிகளை வெப்பத்திலிருந்தும், குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாப்பவை இவையே.

சிலருக்கு நகங்கள் அடிக்கடி உடைந்து போகும். இதற்குக் காரணம் அன்றாடம் பயன் பயன்படுத்தும் சோப்பாக இருக்கலாம். அல்லது போதிய நீர்ச்சத்து இன்மையாலும் நகம் உடைதல் ஏற்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக