பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 8 மார்ச், 2011

அனுபவ மொழிகள்

மனிதர்களெல்லாம் முனிவர்கள் அல்ல. ஆனால் முனிவர்களெல்லாம் மனிதர்கள்தான்.
-கண்ணதாசன்.
-
புத்திசாலிகளுக்கு வாழ்வு ஒரு பிரச்சனை; முட்டாள்களுக்கு அது முடிந்த ஒன்று.
-மார்ஷல்.
-
உபயோகமில்லாத இரும்பு துருப்பிடித்து விடுகிறது; தேங்கி நிற்கும் தண்ணீர் தூய்மையை இழந்து விடுகிறது; அதே போன்று ஒன்றுமே செய்யாமல் சோம்பி நிற்கும் மனமும் செயலாற்றலை இழந்து விடுகிறது.
-லியனார்டோ டாவின்சி.
-
நாம் செய்கின்ற வேலையில் வெட்கப்படக் கூடாது. நாம் வெட்கப்படும்படியான வேலை எதையும் ஒருபோதும் செய்தல் கூடாது.
-ஸிஸெரோ.
-
பேச்சை விட மவுனமே சிறந்தது. பேசித்தான் தீர வேண்டுமென்றால், அப்பேச்சு, உண்மையாய், நேர்மையாய், இனிமையாய் இருக்கட்டும்.
- மகாபாரதம்.
-
உலகில் ஆசையைப் போன்ற நெருப்பில்லை, வெறுப்பைப் போன்ற பகையில்லை, காமத்தைப் போன்ற புயலில்லை.
-புத்தர்.
-
உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம். கவலையற்றிருப்பது இரண்டாவது இன்பம். பிற உயிர்களுக்கு உதவியாய் வாழ்வது மூன்றாவது இன்பம்.
-மு.வரதராசனார்.
-
ஏடுகளில் உள்ள கடுஞ் சொற்கள் அறிவை வளர்க்கும். பெரியோர்களின் கொடுஞ் சொற்கள் நல்ல வாழ்வை வளர்க்கும். அரசனின் கொடிய சொற்கள் போரட்டத்தை வளர்க்கும்.
-கௌடில்யர்.
-
இதைப் பெற்றுக் கொள் என்று ஒருவனுக்கு ஒன்றைக் கொடுப்பது உயர்ந்தது. அப்படியொருவர் கொடுக்கும் போது எனக்குத் தேவையில்லை, ஆகையால் இதை வாங்க மாட்டேன் என்று சொல்வது அதை விட உயர்ந்தது.
-புறநானூறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக