பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 8 மார்ச், 2011

காதல் சிற்பி

சிற்பம் செதுக்குபவர் சிற்பி எனில்....,
காதலும் சிற்பிதான்....!
சிற்பம் செதுக்குவது உளி எனில்....,
காதலும் உளிதான்....!

விந்தை என்னவெனில்....,
சிற்பி கல்செதுக்கி
சிற்பம் செய்வார்....,
ஆனால்....,
காதலில்..................,
சில பொழுதுகளில்
சிற்பங்கள் கூடி
சிற்பியை செதுக்குகிறார்கள்.
பல பொழுதுகள்..........,
தனித்தனியாக....!

இப்படி சேர்ந்தும், தனியாகவும்
சிலர் தவிர அனைவரும்
செதுக்குவதால்தானோ என்னவோ....,
காதலை ஒருவராலும்....,
இதுதான் காதல்....,
இப்படித்தான் காதல் என்று
வரையறுத்து சொல்ல
முடியவே இல்லை.

செதுக்கும் ஒவ்வொருவரும்
"இதுவும் காதல்"
என்று சொல்லி கொள்கிறார்கள்.

ஒவ்வொரு சிற்பமும்
ஒவ்வொரு விதமாய் செதுக்குகிறது.
செதுக்குகையில்....,
கவிதை மட்டுமல்ல....
காயங்களும் காணும்.
காதலில் காயங்களானாலும் நியாயங்களே....!

சிற்பம் செதுக்கும் சிற்பியும்
அழகானது.
சிற்பி கொண்ட சிற்பங்களும்
அருமையானது.
ஆம்....,
காதல் செய்யும்
ஒவ்வொருவரும்
அழகான சிற்பமே....!

காயம் இல்லாமல் காதல் இல்லை.
காதல் இல்லாமல்
வாழ்வே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக