பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

உடல் பருமன்

ஒபிசிட்டி அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்புபவர்கள் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியதாக இருக்கும்?

லேப்ராஸ்கோபிக் முறையில் செய்யப் படும் ஒபிசிட்டி அறுவை சிகிச்சைக்காக ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும், சிகிச்சை முடித்து நார்மலாக வீடு திரும்பலாம்.

ஒபிசிட்டி சர்ஜரி செய்து கொள்வதால் தலை முடியை இழக்க நேரிடுமா?

தலைமுடி கொட்டுவதும், வலுவிழப் பதும் அறுவை சிகிச்சை முடிந்து மூன்றி லிருந்து ஐந்து மாதங்கள் வரை நீடிக்கலாம், ஆனால் அது தற்காலிகமான பிரச்னையே. சில வாரங்களில் கேச ஆரோக்கியம் இயல்பான நிலைக்கு மீண்டுவிடும்.

அறுவை சிகிச்சை செய்த பிறகு சிகிச்சை செய்து கொண்ட நபர் எத்தனை நாட்களுக்குப் பின் வேலைக்குச் செல்ல முடியும்?

இம்முறையில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறவர்கள் பொதுவாக குறைந்தபட்சம் சிகிச்சை முடிந்த இரண்டு வாரங்களில் வேலைக்குத் திரும்பி விடலாம்.

ஒபிசிட்டி சர்ஜரிக்குப் பிறகு ஒருவருக்கு எத்தனை கிலோ வரை எடை குறையும் என்று எதிர்பார்க்கலாம்?

சர்ஜரி செய்து கொள்பவர்களின் உடலமைப் பையும், எடையையும் பொறுத்து இது மாறுபடும். பொதுவாக அறுவை சிகிச் சைக்குப் பின் ஒருவரது உடலில் இருக்கும் அதிகப்படி எடையில் 70% முதல் 80% வரை குறைவதற்கான வாய்ப்பு உண்டு என நம்பலாம்.

ஒபிசிட்டி சர்ஜரி செய்து கொள்ளும் பெண்களுக்கு சர்ஜரிக்குப் பிறகு கருவுறுதலில் பிரச்னை வருமா?

பெண்கள் கர்ப்பமாவதற்கு ஒபிசிட்டி சர்ஜரி தடையாய் இருப்பதில்லை. சொல்லப் போனால் சிகிச்சைக்கு முன் அந்தப் பெண் களுக்கு இருந்த தாமத கர்ப்பத்திற்கான காரணங்கள் கூட இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் சீராகி விடும். ஆனால் சர்ஜரிக்குப் பிறகு 18 முதல் 24 மாதங் களுக்கு உடல் எடை சராசரியாக நிதானத் திற்கு வரும் வரை கருவுறுதலை தள்ளிப் போடுவது நல்லது.

இந்த அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்து அதனால் யாராவது இறந்ததாக?!

அப்படி விரும்பத்தகாத செய்திகள் எதுவும் இல்லை. சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்புபவரின் உடல் நிலையைப் பொறுத்து அறுவை சிகிச்சை தோல்வியில் முடிய 0.5% அளவில் வெகு குறைவான வாய்ப்பு மட்டுமே உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக