பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

அபார வளர்ச்சி கொடுக்கக்கூடிய பருவம் இது!

போன வருஷத்துக்கு முன்தின லீவுல இங்க வந்திருந்தப்போ நம்ப ப்ரீத்தி குழந்தை மாதிரி இருந்தா.. இரண்டே வருஷத்தில இப்படி ஆளே அடையாளம் தெரியாதபடி நெடு நெடுன்னு வளர்ந்துட்டாளே!..'' என்று வீட்டுக்கு வீடு குழந்தைகளைப் பார்த்து நாம் வியக்கும் பருவம் அவர்களது டீன்-ஏஜின் ஆரம்ப கண்ணிமைக்கும் நேரத்தின் வயதுகள் தான்!

அபார வளர்ச்சி கொடுக்கக்கூடிய பருவம் இது!

இத்தனை ஆச்சர்யம் ஏற்படுத்தும் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது அந்த உடல் வளர்ச்சியை உருவாக்கும் உணவுதான். ஆனால், இந்த வயதில்தான் குழந்தைகள் நாக்கு ருசி பார்த்து அல்லது டயட் இருக்கிறேன் பேர்வழி என்று இது வேணாம்! அது வேணாம்! என உணவுகளை தவிர்ப்பதும் நடக்கிறது. பல பெற்றோரும் டீன்ஏஜ் வயதுப் பிள்ளைகளை சமாளிக்க முடியாமல், சரி, பிடிச்சதை சாப்பிட்டுட்டுப் போகட்டும்!' என விட்டு விடுவார்கள்! சரிவிகித உணவை இந்த வயதில் இந்தக் குழந்தைகள் எடுத்துக் கொள்ளாமல் போவதால், உதாரணமாக இருபது வயதுகளிலேயே டயபடீஸ், பி.பி. மூட்டுவலி, முதுகுவலி போன்ற பல வகையில் நோய் வாய்ப்படுவது நடக்கிறது! இவர்கள் பின்நாட்களில் ஏதாவது சில உடல்நலக் குறைவினால் பெரும்பாதிப்புக்குள்ளாகிறது நடக்கிறது. இதோ, டயட்டீஷியன் வீணா, சேகர், டீன்ஏஜ் குழந்தைகளின் வளர்ச்சிக்கான உணவுபற்றியும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவர்கள் சந்திக்க நேரிடும் அவதிகள் பற்றியும் விளக்கிக் கூறுகிறார்.

டீன்ஏஜில் நல்ல உணவு ஏன் அவசியம்?

குழந்தைகளின் உடல் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகமாகிற ஸ்டேஜ் என்று பார்த்தால் டீன்ஏஜ்தான். இந்தக் காலகட்டத்தில் சரியான சத்துணவான கார்போஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து என சரிவிகித சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும். டீன்ஏஜில் இப்படிப்பட்ட உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டால், உடனடி உடல் வளர்ச்சி தடைபடுவதோடு பின்நாட்களில் ஆண்கள் என்றால் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமலும், பெண்கள் என்றால் திருமணத்திற்குப் பின் கர்ப்பகாலத்தில் ரத்தசோகையாலும் அவதியுறுவார்கள். எனவே டீன்ஏஜின்போது சரிவிகித உணவின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு சொல்வது மிக அவசியம்.

அரிசி, உளுந்து சேர்த்த இட்லி, தேங்காய், கடலை சேர்த்த சட்னி, சாதம், பருப்பு, காய்கறி, தயிர், நெய், பாயாசம், ஊறுகாய் என நம் முன்னோர் நமக்கு அறிமுகப்படுத்திய உணவுகள் வெறும் ருசி சம்பந்தப்பட்டது இல்லை. சரியான விகிதத்தில் உடம்பில் சேர வேண்டிய சத்துக்களின் அளவு சம்பந்தப்பட்டது!

இந்த வயதில் சரியன உணவு எடுத்துக் கொள்ளாமல் போவதால் ஏற்படும் சில பிரச்னைகள், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியும் வகையில் உருவாகியிருக்கின்றன!

அனெலெக்ஸியா (Anelexia)

டீன்ஏஜ் வயதில் பொதுவாக பெண்கள் நார்மல் உடல் அமைப்போடுதான் இருப்பார்கள். ஆனால் சில பெண்கள் மாடலிங் உலகிலுள்ள பெண்களை தங்களுக்கு ரோல் மாடலாக வைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்துப் பார்த்து தான் ரொம்ப குண்டாக இருப்பதாக நினைத்து சாப்பாட்டையே தவிர்ப்பார்கள். இப்படிப்பட்ட பெண்கள் அனெலெக்ஸியா வகையைச் சார்ந்தவர்கள். டயட்டில் இருப்பதாகச் சொல்லி எதையாவது சாப்பிடும்போது, உடம்புக்குத் தேவையானச் சத்துக்களில் அதிகமாகக் கிடைக்க வேண்டியது கம்மியாகவும், கம்மியாகக் கிடைக்க வேண்டியது அதிகமாகவும் என்று நிலைமை தலைகீழாக கிடைத்துக் கொண்டிருக்கும்!

இதனால் இந்த டீன்ஏஜ் காலகட்டத்திலேயே என்ன பிரச்னைகள் ஆரம்பமாகிறது தெரியுமா?

விளைவு 1: வீஸிங் ப்ராப்ளம், பக்கவாதம், ஹார்ட் தசைகள் வீக்காவது போன்ற தொல்லைகள்.

விளைவு 2: `ஸ்ட்ரிக்ட் டயட்' என்று விடாப்பிடியாக ஃபாலோ செய்யச் செய்ய, சில நாட்களில் அவர்களை அறியாமலேயே சாப்பாட்டில் ஆர்வம் மிகவும் அதிகமாகி விடும்! அகோரப்பசியும் ஏற்படும். அதனால் சாப்பாடு, அதிகம் சாப்பிட ஆரம்பிப்பார்கள். சாக்லெட்ஸ், ஐஸ்க்ரீமும் நிறைய சாப்பிட ஆரம்பிப்பார்கள். ஸோ திடீர் வெயிட்போடவும் வாய்ப்புக்கள் அதிகம்.

ப்ளுமியா (Blumia)

இன்னும் சில வகை பெண்கள் இருக்கிறார்கள். நாக்கு ருசிக்காக விதவிதமான சாப்பாடோ, ஐஸ்க்ரீமோ பிடித்ததைசாப்பிட்டு விடுவார்கள். பெற்றோர் கண்டிப்புக்காக என்றாலும் ஓ.கே! ஆனால், வயிறு ரொம்ப சாப்பிட்டுவிட்டு, உடனே பாத்ரூமில் போய் தொண்டைக் குழியில் அனாயாசமாக கைவிரல் விட்டு சாப்பிட்ட அத்தனையையும் குமட்டியபடி வாந்தியெடுத்து விடுவார்கள். இவர்கள் ப்லுமியா வகையைச் சார்ந்தவர்கள்.

விளைவு: இவர்கள் உடலை ஸ்லிம்மாக மெயின்டெய்ன் பண்ணமுடியும் என்றாலும் கார்போஹைட்ரேட் புரோட்டின், அயர்ன், விட்டமின்ஸ், மினரல்ஸ் என்று சரிவிகிதமாக உள்ளே போன உணவில், வாமிட்டின் மூலம் என்ன வகைச் சத்துக்கள் வெளியே வந்தது என்ன வகைச்சத்துக்கள் உள்ளே தங்கியது என்று தெரியாமல் போகும். இதனால்சரிவிகிதச் சத்துக்கள் உள்ளே போகாமல் இவர்களுக்கு உணவுக்குறைபாடு நிலை ஏற்படலாம்! ஒரு ஸ்டேஜில் இந்த வகைப் பெண்களின் உடலில் ஓடும் ரத்தத்தின் தன்மை மாறுபட்டு, சருமத்தின் நிறமே மாறிவிடக்கூடிய அபாயம் நேரிடும்! இதனால் நியூட்ரிஷியஸ் டிஸ்ஆர்டர், ரத்தசோகை போன்ற குறைபாடுகள் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

கவனம் தேவை!

பெரும்பாலும் டென்த், ப்ளஸ்டூ, கல்லூரி மாணவிகள் தான் இந்த வகை டீன்ஏஜ் பெண்கள்! இவர்கள் எக்ஸாம், என்ட்ரன்ஸ் எக்ஸாம் என்று அதிகம் படிக்கும் பரபரப்பில் காலை, மாலை, இரவு என்று அந்தந்த நேரத்துக்கான உணவைச் சாப்பிடமாட்டார்கள். பல சமயங்களில் ஒருவேளை உணவோடு இவர்கள் சாப்பாடு முடிந்து விடும். இரண்டாவது வேளை பசிக்கும்போது வெளியில் கண்டதை சாப்பிடுவார்கள். தவிர இரவு அசதியில் கொஞ்சமே கொஞ்சம் சாப்பிடுவார்கள். இப்படித் தொடர்ச்சியாக உணவு விஷயத்தில் நடப்பதால் இவர்களுக்கு நியூட்ரிஷியஸ் டிஸ்ஆர்டர் என்று சொல்லப்படும் சரிவிகித சத்துணவு கிடைக்காத குறைபாடு ஏற்படும்! இவர்கள் உடலில் புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை குறைவாக இருக்கும்.

மேற்கண்ட பாதிப்பினால் டீன்ஏஜ் பெண்களுக்கு மாதவிலக்கின்போது ரத்தப்போக்கு அதிகம் இருக்கும். அதிக ரத்தப்போக்கு கடைசியாக ரத்தச் சோகையில் முடியும்! குறிப்பாக தலைமுடி அதிகம் உதிரும்! சருமம் பளிச்சென்று இருக்காமல் டல்லாக உயிரற்று தென்படும்! முகப்பரு வரும்! திடீரென உடல் எடை கூட அதிகரிக்கலாம்! உடலில் நோயெதிர்ப்பு சக்தியே இருக்காது. அடிக்கடி உடல் நலம் குன்றும்!

எனவே தினம் ஏதாவதொரு பழம், சாப்பாட்டில் நிறைய காய்கறிகள், அல்லது மாலைநேரங்களில் பழங்கள், சாலட்ஸ் என்று பெற்றோர்கள் பார்த்துப் பார்த்து கவனித்தால் மட்டுமே டீன்ஏஜ் குழந்தைகளின் வளர்ச்சி எந்தவிதத்திலும் தடைபடாமல் இருக்கும்.

-எழில்செல்வி

சத்துக்கள் அந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் டீன்ஏஜ் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு

கார்போஹைட்ரேட் அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம் காலை - இட்லி என்றால் -4 (அ) சப்பாத்தி என்றால் _ 3, கம்பு, கேழ்வரகு, சோளம், அடை என்றால் - 2 (இரவும் அதே அளவு)
மதியம் : ஒன்றரை கப் சாதம்

புரோட்டீன் பால், முட்டை, பயறு, பருப்பு, கோழி, மீன், மட்டன் பால் தினம் ஒரு தம்ளர் கட்டாயம். முட்டை வாரத்தில் மூன்று முறையாவது. பயறு, பருப்பு வகைகளில் தினம் 50 லிருந்து 100 கிராம்

வரை சாப்பிடலாம். கோழி, மீன், மட்டன் இவைகளை வாரத்தின் மூன்று

நாட்கள் நாள் ஒன்றுக்கு மாற்றிச் சாப்பிடலாம்.

வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து பழங்கள், காய்கறிகள், சாலட்ஸ். பழமோ, காய்கறியோ ஒன்றிலிருக்கும் சத்துக்கள் இன்னொன்றில் இருப்பதில்லை. அன்றாடம் ஏதாவது ஒரு பழம், காய்கறிகள் என தினம் ஒன்றாக மாற்றி சாப்பிடுவது அவசியம்.


கொழுப்பு மீன், பாதாம், வேர்க்கடலை இவைகளை தினம் ஒன்றாகச் சாப்பிடலாம். மீன் தேவையான அளவு சாப்பிட்டாலும், பாதாம் 5 (அ) 6க்கு மேல் கூடாது. வேர்க்கடலை 100 கிராம் சாப்பிடலாம். தினசரி எண்ணெய்-3 டீஸ்பூன், வெண்ணெய் (அ) நெய்-2 டீஸ்பூன், சர்க்கரை-3 டீஸ்பூன் அவசியம். உப்பு, சாப்பிடும் உணவின் தேவைக்கேற்ப சாப்பிடலாம். மீன், பாதாம், வேர்க்கடலை, எண்ணெய், நெய், வெண்ணெய், சர்க்கரை, உப்பு.


இது கட்டாயம்

டீன் ஏஜ் வயதில் உள்ளவர்கள் அன்றாடம் 3 டீஸ்பூன் வரை சர்க்கரை சாப்பிட்டே ஆக வேண்டும். சர்க்கரை பிடிக்காதவர்கள் வெல்லம், பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை சாப்பிடலாம்.


கவனியுங்கள்!

உணவில் மாவுச்சத்து குறைவாக இருந்தால்தான் இளைக்க முடியும். அதுவே நல்லது என நினைப்பார்கள். ஆனால், உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புண்டு.

டேக் கேர்

புரதச்சத்து குறைவாக இருந்தால் உடல் மெலியும் வாய்ப்புண்டு.

சுறுசுறுப்பு போயிடும்!

அன்றாட உணவில் சத்துக்களில் ஏதாவதொரு குறைபாடு நேர்ந்தால் டீன்ஏஜ் குழந்தைகளின் சுறுசுறுப்பான செயல்பாடுகள் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக