பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

நமது கலாச்சாரத்தில் விழாக்களுக்கும் உணவுகளுக்குமா பஞ்சம்!

திருமணங்கள், பெர்த் டே பார்ட்டிகள், ஃபிரெண்ட்ஸ் கெட்டுகெதர் பார்ட்டிகள், புதுமனைப்புகு விழாக்கள், புதிதாக தொழில் துவக்க விழாக்கள் இப்படியான குடும்ப விழாக்கள் மட்டுமல்லாது ஆடியில் அம்மனுக்கு கூழ், வெள்ளிக்கிழமை தவறாது அம்மன் கோயில்களில் சர்க்கரைப் பொங்கல் படையல்கள், கிருத்திகைக்கு முருகனுக்கு கந்தரப்பம், பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை படைப்பு, அனுமன் ஜெயந்திக்கு வடை மாலைகள், புரட்டாசி ஆரம்பித்து விட்டதா பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை தவறாது புளியோதரை விநியோகம், நவராத்திரி காலங்களில் ஒன்பது நாட்களிலும் கொலு பண்டிகைகளில் விதம் விதமான நைவேத்தியங்கள் இப்படியான பக்தி விழாக்கள்;

தலைவருக்குப் பிறந்தநாள், அறுபதாம் கல்யாணம், கட்சியின் முப்பெரும் விழாக்கள், தேர்தலில் வென்ற விழாக்கள் இப்படி அரசியல் ரீதியாகவும் பல விழாக்களை ஏற்படு த்தி வைத்துக் கொண்டு நாம் எதையாவது கொண்டாடிக் கொண்டே தான் இருக்கிறோம்.

தமிழர்களான நமது கொண்டாட்டங் களில் பிரதான இடம் வகிப்பது உணவு. நமது சந்தோசத்தை, பூரண மன நிம்மதியை வெளிப்படுத்த நாம் பல விதமான உணவு வகைகளைச் செய்து நமது நண்பர் களுக்கும், தெய்வங்களுக்கும் படைத்து நன்றியை வெளிக்காட்டிக் கொள்கிறோம். இது ஒரு விதமான ரிலாக்சேஷன்.

இப்படி படைக்கப்படும் உணவுகள் எல்லா இடங்களிலும் முழுமையாக உபயோகமாகிறதா என்பதில் எத்தனை பேருக்கு நிஜமான அக்கறை இருக்கக் கூடும் என்று தெரியவில்லை.

பெரும்பாலான திருமணங்களில் பந்தியில் இலைகளில் பரிமாறப்படும் முழு சாப்பாடு பாதிக்கும் மேல் வீணடிக்கப் படுவதை நம்மில் பலர் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். நமது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாத ஆப்ரிக்க நாடுகள், போரினால் பாதிக்கப்பட்ட நாடு களிலெல்லாம் எண்ணிக்கையற்ற அளவில் பெரியவர்களும், குழந்தைகளும் உண்ண உணவில்லாமல் குடிக்கத் தண்ணீர் கிடைக் காமல் தவிக்கிறார்கள் என்பதை கண் கூடாக செய்தி சேனல்களில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். அப்படி யான சூழலில் நமக்கு இங்கே பாது காப்பாக வாழும் சூழல் கிடைத்து நல்ல உணவும் கிடைக்கும்போது அவற்றை குப்பையில் கொட்டி வீணடிப்பானேன்.

இனிமேல் உங்கள் வீடுகளில் நடத்தப் படும் விழாக்கள் என்றாலும் சரி, அல்லது உங்கள் பகுதிகளில் நடத்தப்படும் அரசியல் மற்றும் ஆன்மிக விழாக்கள் என்றாலும் சரி இந்தப் புகைப்படத்தில் உள்ள 1098 எண்ணுக்குத் தொடர்பு கொண்டு மீதமான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும்படி கேட்டுக்கொள்ளுங்கள், நமது தேவைக்கு மிஞ்சும் உணவுப் பொருட்கள் நிஜமாகவே தேவை உள்ள குழந்தைகளின் நலன்காக்க உயிர் காக்க உதவும். இந்த ஹெல்ப் லைன் எண்கள் இந்தியப் பயன்பாட்டுக்கு மட் டுமே!

1 கருத்து: