பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

இண்டக்சன் ஸ்டவ்களில்

கேஸ் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இன்னமும் உயரக் கூடும் என்று பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ முன்னெப்போதும் இ ல்லாமல் இப்போ தெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களில் மின்சார அடுப்புகள் என்று சொல்லப் படுகிற ‘இண்டக்சன் ஸ்டவ்’ விளம்பரங்கள் அதிகரித்துக் கொண்டி ருக்கின்றன. மெகா சீரியல்களுக்கு நடுவில் ‘ப்ரீத்தி இண்டக்சன் ஸ்டவ்’ விளம்பரம் பார்த்திருப்பீர்கள் தானே!

ஹெல்த் வாசகர்களுக்காக மார்க்கெட் டில் பிரபலமாக உள்ள இண்டக்சன் ஸ்டவ் பிராண்டுகள், மாடல்கள், ஸ்டவ்களை இயக்கி விதம் விதமாகச் சமைக்கத் தேவைப்படும் மின்சார யூனிட் அளவுகள், கேஸ் ஸ்டவ் வோடு ஒப்பிடும்போது இரண்டிலும் உள்ள சாதக பாதகங்கள் போன்றவற்றைப் பற்றி ஒரு சின்ன அலசலை இங்கு காண்போம்.

இந்த இண்டக்சன் ஸ்டவ்களில் அப்படி என்னவெல்லாம் ஸ்பெஷல்?

மின்சார அடுப்பு என்பதால் மாதக் கடைசியில் ‘ஐயோ எப்போது கேஸ் தீர்ந்து போகுமோ!’ என்ற பயம் இல்லாமல் சமைக்கலாம்.

இண்டக்சன் ஸ்டவ்களில் சமைக்க கனமற்ற லேசான பாத்திரங்கள் போதும். இந்தப் பாத்திரங்களில் தான் வெப்பம் ஒரே சீராகப் பரவும். மேலும் இந்தப் பாத்திரங்களை சு த்தம் செய்வதும் எளிது.

கேஸ் ஸ்டவ்களில் சமைக்கும் போது கிச்சனில் எழும் புகை, அதிகப்படி புழுக்கம் எல்லாம் இண்டக்சன் ஸ்டவ்களில் சமைக்கும் போது கிடையாது.

மேலும் மழைக்காலங்களில் நமது லிவிங் ரூம்களை சூடாக்கவும்கூட இண்டக்சன் ஸ்டவ்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு நேர சமையலை முடிக்க ஒரு யூனிட் மின்சாரம் போதும் என்று மின்னடுப்புகள் விற்கும் பிரபலமான வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கூடங்களில் கூறப்படுகிறது.

மார்க்கெட்டில் பிரபலமாக உள்ள இண்டக்சன் ஸ்டவ் பிராண்டுகள்:

ப்ரீத்தி

ப்ரெஸ்டீஜ்

பட்டர்ஃபிளை

பீஜியன்

ஹேன்போ (வசந்த் அண்ட் கோ ஷோரூம் களில் கிடைக்கிறது)

இண்டக்சன் ஸ்டவ் மாடல்கள் மற்றும் விலை:

சென்னை ஷோரூம்களில் இந்த பிராண்டுகள் ஒவ்வொன்றிலும் சமைக்கும் பாத்திரங்களின் எடைக்குத் தக்க மூன்று விதமான மாடல் கள் வைத்திருக்கிறார்கள். மாடல் களுக்குத் தகுந்து விலை ரூ 2500 இல் இருந்து ரூ 4500 வரை மாறுபடுகிறது.

கேஸ் ஸ்டவ் VS இண்டக்சன் ஸ்டவ்:

நமக்கு நன்கு பழக்கமானது, கிச்சனில் புழக்கத்திற்கு எளிமையானது, விலை கட்டுப் பாட்டில் இருந்தால் கேஸ் ஸ்டவ் தான் அனைவரது ஏகோபித்த சாய்ஸ் ஆக இருக்கக் கூடும். ஆனால் அடிக்கடி உயர்ந்து கொண்டே இருக்கும் சிலிண்டர் விலைகள் மட்டுமல்லாது மழைக்காலங்களில் குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பெரும் தட்டுப்பாடாக இருக்கும் கேஸ் சிலிண்டர்கள் மக்களை பெரும் அவதிக்குட்படுத்துகின்றன. அதனாலும் சிலர் இண்டக்சன் ஸ்டவ்களை பயன்படுத் தும் மனநிலையை அடைந்திருக்கலாம்.

கேஸ் ஸ்டவ்களில் பூரி, வடை, முறுக்கு, போன்ற எண்ணெய்ப் பலகாரங்கள் சமைக்கும் போது எழும் அதிகப்படி புகையை பலர் விரும்புவதில்லை. இண்டக்சன் ஸ்டவ் களில் இப்படி புகை எழுவதில்லை என்பது அதன் ப்ளஸ்களில் ஒன்று.

மேலும் கேஸ் ஸ்டவ்களில் சமைக்க அடி கனமான பாத்திரங்கள் தேவைப் படுகின்றன. சமைத்து முடித்ததும் இவற்றை சுத்தப்படுத்துவது சில நேரங்களில் மனச் சோர்வைத் தரும் பெரிய வேலை. ஆனால் இண்டக்சன் ஸ்டவ்களில் எப்போதும் கனம் குறைவான லேசான பாத்திரங்களே பயன் படுத்தப்படுகின்றன என்பதால் பாத்திரங்களை சுத்தம் செய்வது வெகு எளிதானது.

கேஸ் ஸ்டவ் போலவே இண்டக்சன் ஸ்டவ்களும் பயன்படுத்த எளிதானவையே. ஆனால் மின்சாரப் பற்றாக்குறை இருப் பின் இண்டக்சன் ஸ்டவ்கள் பெரும் அவதி. மின்சாரம் இல்லாவிட்டால் இண் டக்சன் ஸ்டவ்களால் பயன் இல்லை.

பண்டிகைக் காலங்களில் விதம்வித மாய் சமைத்தால் இண்டக்சன் ஸ்டவ் உங்கள் வீட்டின் மின்சாரக் கட்டணங் களை அதிகமாக்கும்.

இப்படி கேஸ் ஸ்டவ்வோடு ஒப்பிடும் போது கேஸ் ஸ்டவ் மற்றும் இண்டக்சன் ஸ்டவ் இரண்டிலும் சில பிளஸ் மைனஸ்கள் உண்டு. இன்றைய காலகட்டத்தில் ‘இதில்லா விட்டால் அது; அதில்லாவிட்டால் இது’ என்ற கணக்கில் இரண்டையும் வாங்கி வைத்துக் கொண்டு சிலிண்டர் பற்றாக் குறை காலங்களில் இண்டக்சன் ஸ்டவ் களையும், மின்சாரப் பற்றாக்குறை இருக்கும் காலங்களில் கேஸ் ஸ்டவ் களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக