பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

புற்று நோயைய தடுக்க உதவும் குங்குமபூ

கல்லீரல் புற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமீன் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்று நோயைக் கட்டுப் படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். எலியைக் கொண்டு சோதனை மேற் கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவு களில் கொடுத்து வந்தனர். பின்னர், செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டை எத்தில் நைட்ரோசமைன் (டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப்பூ கொடுக்கப் பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது. இதன் மூலம் குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப் படுத்தும் என உறுதி செய்தனர்.

‘‘உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப் படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது. கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமான செல் களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது’’ என அமீன் தெரிவித்தார்.

கர்ப்ப காலத்தில் குழந்தை சிவப்பாகப் பிறக்க குங்குமப் பூ பயன்படும் என்று தான் நமக்குத் தெரியும். ஆனால் புற்றுநோயைத் தடுக்க உதவும் என்பது ஆச்சரியம் தரும் தகவல் போல்தான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக