பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

டேஸ்டி வரிட்டி கேக்

தேவையானவை : முட்டை 8, சர்க்கரை 250 கிராம், மைதா 250 கிராம், கோகோ பவுடர் 50 கிராம், ஆலிவ் எண்ணெய் 100 மிலி, கேக் ஜெல் 30 கிராம், பேக்கிங் பவுடர் 5 கிராம், எஸன்ஸ் 2 டீஸ்பூன்.

செய்முறை : மைதா, பேக்கிங் பவுடர், கோகோ முதலியவற்றைக் கலந்து சலிக்கவும். கேக் ஜெல்லை தண்ணீருடன் கலக்கவும். முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். பின் முட்டையுடன் சர்க்கரை சேர்த்து அடித்து பின் எஸன்ஸ் சேர்த்து நன்கு அடிக்கவும். பின்பு இத்துடன் ஜெல், தண்ணீர் கலவையையும் சேர்த்து அடிக்க வும். பின் மைதா கலவையையும் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். கடைசியில் எண்ணெயைக் கலந்து, பேக்கிங் டிரேயில் எண்ணெய் தடவி மைதா தூவி, கேக் கலவையைக் கொட்டி பரத்தவும். 180 டிகிரி உஷ்ணத்தில் பேக் செய்யவும். சுமார் 20 அல்லது 25 நிமிடம் பேக் செய்தவுடன், பிரௌன் கலர் வந்துவிடும். பின் வெளியே எடுக்கவும்.



எக்லெஸ் பிளாக் ஃபாரஸ்ட் கேக்

தேவையானவை : கன்டென்ஸ்ட் மில்க் - ஒரு டின், சூடான பால் - 1லு கப், வெண்ணெய் - 100 கிராம், சர்க்கரை - 60 கிராம், வெனிலா எஸன்ஸ் - 2 டீஸ்பூன், பேகிங் பவுடர் - 2 டீஸ்பூன், சமையல்சோடா - ஒரு டீஸ்பூன், கோகோபவுடர் - 4 டீஸ்பூன். அலங்கரிக்க : ஃப்ரஷ் க்ரீம் - லு கிலோ, சாக்லேட் பார் - 50 கிராம்.

செய்முறை: வெண்ணெய், சர்க்கரை, கன்டென்ஸ்ட் மில்க் மூன்றையும் சேர்த்து நுரைக்க அடிக்கவும். மைதா, பேகிங் பவுடர், கோகோ பவுடர் மூன்றையும் கலந்து சலிக்க வும். இத்துடன் சர்க்கரை கலவையை சேர்க்கவும். பின் சூடான பாலையும் கலந்து, தோசைமாவு பதத்தில் கரைத்து வைக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் டிரேயில் பரத்தி 180 டிகிரி உஷ்ணத்தில் பேக் செய்யவும். பின் வெளியே எடுத்து ஆற வைக்கவும். சாக்லேட் பாரை துருவிக் கொள்ளவும். ஃப்ரஷ் க்ரீமை நுரைக்க அடித்து, லேயர் லேயராக பேக் செய்த கேக்கை வைத்து ஃப்ரஷ் க்ரீம், சாக்லேட் துருவல் தூவி அலங்கரித்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

எக்லெஸ் செர்ரி பாதாம் கேக்

தேவையானவை : கன்டென்ஸ்ட் மில்க் ஒரு டின், சர்க்கரை 75 கிராம், மைதா 250 கிராம், பேகிங் பவுடர் 2 டீஸ்பூன், சமையல் சோடா ஒரு டீஸ்பூன், பாதாம், செர்ரி தலா 100 கிராம், சூடான பால் 2 கப், பாதாம் எஸன்ஸ் லு டீஸ்பூன், வெண்ணெய் 125 கிராம்.

செய்முறை : பாதாமை ஊற வைத்து தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். செர்ரியையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மைதா, சமையல் சோடா, பேகிங் பவுடர் மூன்றையும் கலந்து சலித்துக் கொள்ளவும். வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் சேர்த்து நுரைக்க அடிக்கவும். இத்துடன் பாதாம் எஸன்ஸ் சேர்த்துப் பின் கன்டென்ஸ்ட் மில்க் சேர் த்து நன்கு அடித்துக் கலக்கவும். இத்துடன் மைதா கலவையையும், பாதாம் செர்ரி துண்டுகளையும் கலக்கவும். இத்துடன் அடித்து வைத்துள்ள கன்டென்ஸ்ட் மில்க், வெண் ணெய் கலவை இரண்டையும் கலந்து, கடைசியாக சூடான பால்விட்டு தோசைமாவு பதத்தில் கரைக்கவும். பின் கலவையை கேக் டிரேயில் கொட்டி 20 அல்லது 25 நிமிடம் பேக் செய்யவும்.

கிறிஸ்துமஸ் கேக்

தேவையானவை : மைதா, பொடித்த சர்க்கரை, வெண்ணெய் - தலா 200 கிராம், முட்டை - 6, கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பிரவுன்சுகர் - 100 கிராம், காரமல் சிரப் - ஒரு கப், பேகிங் பவுடர் - 2 டீஸ்பூன், உலர் கறுப்பு திராட்சை, ப்ரௌன் கிஸ்மிஸ் பழம், மஞ்சள் உலர் திராட்சை, செர்ரி, ஆரஞ்சுத் தோல், சர்க்கரைப்பாகில் முக்கிய இஞ்சி - தலா 50 கிராம், முந்திரி, பாதாம் - தலா 100 கிராம், கேக் மசாலா - 2 டீஸ்பூன், நன்கு பொடித்த பட்டைப் பொடி - லு டீஸ்பூன், ஜாதிக்காய்ப்பொடி - ஒரு சிட்டிகை, ஷா ஜீரா - 2 டீஸ்பூன்.

செய்முறை : வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் சேர்த்து அடித்துக் கலக்கவும். முட்டையை நுரைக்க அடிக்கவும். மைதா, பேகிங் பவுடர் சேர்த்து சலிக்கவும். திராட்சை வகைகளை அலசி ஒரு மெல்லிய துணியில் போட்டு ஈரத்தை உலர்த்தவும். இப்போது மிகப் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், திராட்சை வகைகள், இஞ்சி, செர்ரி, ஆரஞ்சு, தோல் இவைகளை மைதா கலவையில் கலக்கவும். வெண்ணெய், சர்க்கரை கலவையுடன் ஷாஜீரா கேக் மசாலா சேர்த்துக் கலக்கவும். இத்துடன் காரமல் சிரப்பையும் சேர்த்துக் கலக்கவும். கடைசியில் நன்றாக நுரைக்க அடித்த முட்டையை, வெண்ணெய், சர்க்கரைக் கலவையுடன் சிறிதுசிறிதாக கலக்கவும். பின் மைதா கலவையையும் கலந்து, பேகிங் டிரேயில் கொட்டிப் பரத்தவும். 180 டிகிரி உஷ்ணத்தில், 20 நிமிடமும், 160 டிகிரி உஷ்ணத்தில் 10 நிமிடமும் வைத்து பேக் செய்யவும்.

செர்ரிபாதாம் கேக்

தேவையானவை : செர்ரி பழம் 2 டீஸ்பூன், உலர் திராட்சை லு கப், வெண்ணெய், சர்க்கரை தலா 50 கிராம், முட்டை 3, பாதாம் எஸன்ஸ் லு டீஸ்பூன், பொடித்த பாதாம் 1ரு கப்.

செய்முறை : சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்றாக அடிக்கவும். அடுத்து முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் பிரித்து எடுத்து வெண்ணெய் கலவையுடன் சேர்த்து அடித்து, பின் பாதாம் எஸன்ஸ் சேர்த்து, பாதாம்பொடி, முட்டையின் வெள்ளைக் கரு எல்லாமாகச் சேர்த்து நன்கு கலக்கவும். பின் இத்துடன் மைதா, பேகிங் பவுடர் சேர் த்து, திராட்சை, செர்ரி இரண்டையும் கலக்கவும். கடைசியாக கேக் பாத்திரத்தில் கொட்டி அவனில் 180 டிகிரியில் பேக் செய்யவும்.

டேட்ஸ் வால்நட் கேக்

தேவையானவை : வெண்ணெய், சர்க்கரை, மைதா - தலா 175 கிராம், பேகிங் பவுடர் - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பேரீச்சை - 50 கிராம், அக்ரூட் விதை - 100 கிராம், முட்டை - 4, வெனிலா எஸன்ஸ் - 2 டீஸ்பூன்.

செய்முறை : வெண்ணெய், எஸன்ஸ், சர்க்கரை சேர்த்து நுரைக்க அடிக்கவும். சிறிதளவு கொதிக்கும் நீரில் சிட்டிகை சோடா சேர்த்து பேரீச்சையை நறுக்கிப் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து உலரவிடவும். அக்ரூட் விதையையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மைதா, பேகிங் பவுடர், பேரீச்சம்பழம், வால்நட் சேர்த்து நன்றாகக் கலக்கவும். முட்டையை நுரைக்க அடித்து, வெண்ணெய் கலவையுடன் சேர்க்கவும். இத்துடன் மைதா கலவையையும் சிறிது சிறிதாக சேர்க்கவும். அனைத்தையும் கலந்த பின், கேக் பாத்திரத்தில் வைத்து 180 டிகிரியில் அரை மணி நேரம் பேக் செய்யவும்.

ஆரஞ்சு ஷிஃபான் கேக்

தேவையானவை : மைதா ஒரு கப், சர்க்கரை வு கப், துருவிய ஆரஞ்சு தோல் ஒரு டீஸ்பூன், எண்ணெய் லு கப், ஆரஞ்சு ஜூஸ் ஒரு கப், ஆரஞ்சு எஸன்ஸ் 2 டீஸ்பூன், பேகிங் பவுடர் 1லு டீஸ்பூன், முட்டை 2.

செய்முறை : முட்டையை மஞ்சள்கரு தனியாக, வெள்ளைக்கரு தனியாக பிரித்து வைக்கவும். மஞ்சள் கருவுடன், எண்ணெய், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் நுரைக்க அடிக்கவும். மைதாவுடன் பேகிங் பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும். அடித்து வைத்த முட்டை, சர்க்கரைக் கலவையுடன், ஆரஞ்சு ஜூஸ், எஸன்ஸ், கலர், துருவிய ஆரஞ்சுத் தோல் சேர்த்து அடிக்கவும். கடைசியாக, முட்டைக் கலவை, மைதா கலவை. அடித்த வெள்ளைக் கரு இவைகளைக் கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய கேக் பாத்திரத்தில் கொட்டி 180 டிகிரியில் பேக் செய்யவும்.



ஆரஞ்சு வால்நட் ஸ்விஸ் கேக்

தேவையானவை : முட்டை - 4, சர்க்கரை - 120 கிராம், வால்நட் அக்ரூட் - 120 கிராம், துருவிய ஆரஞ்சுத் தோல் - 2 டீஸ்பூன், மைதா - 120 கிராம், பேகிங் பவுடர் - 1லு டீஸ்பூன், வெனிலா எஸன்ஸ் - 2 டீஸ்பூன்.

செய்முறை : முட்டையை மஞ்சள் கரு தனியாக, வெள்ளைக்கரு தனியாகப் பிரிக்கவும். பேகிங் பவுடருடன் மைதாவைச் சேர்த்து சலிக்கவும். முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை இரண்டையும் சேர்த்து அடிக்கவும். அடிக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, அந்த சூடான ஆவியின்மேல் முட்டை பாத்திரத்தை வைத்து நுரைக்க அடிக்கவும், பின் எஸன்ஸ் சேர்க்கவும். ஆவியிலிருந்து கீழே இறக்கி வைத்த மைதாவையும், அக்ரூட்டையும் கலந்து கடைசியில் முட்டையின் வெள்ளைக் கரு வைக் கலக்கவும். பின், வெண்ணெய் தடவிய பட்டர் பேப்பரில் வைத்துப் பரத்திய கேக் டிரேயில் வைத்து 180 டிகிரி பேக் செய்யவும். கேக் ரெடியானவுடன், இன்னொரு பட்டர் பேப்பரை வைத்து காலண்டர் போல சுருட்டி ஆறியவுடன் கட் செய்யவும்.
தொகுப்பு: எழில்செல்வி

கேக் டிப்ஸ்....

மைதாவை சேர்த்த உடனேயே பேக் செய்துவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து பேக் செய்தால் கேக் கடினமாகிவிடும். எனவே கரண்ட் கட், கடன் கொடுத்துவிட்ட கேக் பாத்திரம் திரும்ப வாங்கிட்டோமா என்பதை மனதில் வைத்து, கேக் செய்ய ரெடியாகுங்கள்.

ஆகிவிட்டதா, ஆகிவிட்டதா என்று அடிக்கடி அவனை திறந்து பார்க்கக் கூடாது. அப்படிச் செய்தால் கேக் நடுவில் குழிகள் விழுந்துவிடும்.

கேக் ரெடியான உடனே அவனிலிருந்து எடுக்கக் கூடாது. சிறிது நேரம் அந்தச் சூட்டிலேயே வைக்க வேண்டும்.
மின் விசிறியில் ஆற வைக்கக் கூடாது.

பழைய பேகிங் பவுடரை உபயோகித்தால் கேக் உப்பாது.
முதலில் அவனை சூடாக்கிக் கொண்டுதான், உள்ளே கேக்கை பேக் செய்ய வைக்க வேண்டும்.

கேக் ரெடியானவுடனே சூடாக கவிழ்க்கக் கூடாது. கேக் உடைந்துவிடும்.
கப் அளவுகளை கடைப்பிடிக்கும்போது குலுக்கி, குலுக்கியும், சலித்தும் அளக்கக் கூடாது.

கேக் செய்யும் பாத்திரத்தை வெண்ணெய் தடவி, மைதா தூவி
ரெடியாக வைத்த பிறகே கேக் கலவையை ரெடி செய்ய வேண்டும்.
எவ்வளவுக்கெவ்வளவு வெண்ணெய், சர்க்கரையை நுரைக்க அடிக்கிறோமோ, அந்த அளவுக்கு கேக் சாஃப்டாக இருக்கும்.

கேக் செய்ய எவர்சில்வர் டிரே உபயோகிக்க வேண்டும்.
பழைய மைதா மாவிலும் கேக் செய்யக் கூடாது. கேக் நன்றாக உப்பி வராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக