பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

நல்ல தூக்கம்

தூக்கம் இன்றும் மனிதனுக்குப் புரி யாத புதிராகவே இருக்கிறது. ‘அதன் காரணம் இன்னதாக இருக்கலாம்’ என் பது பற்றி பல ஊகங்கள் இருக்கின்றன. நம் உடல் நலனைக் காக்கவும், செலவிட்ட உடல் ஆற்றலைத் திரும்பப் பெறவும், உயிர் வாழவும் தூக்கம் அவசியம்.

ஓய்வும், முறையான தூக்கமும் செல விட்ட ஆற்றலை இட்டு நிரப்ப மட்டு மின்றி, நாம் சோர்வு நீங்கி உற்சாகம் பெறவும் பயன்படுகின்றன.
இதயத் துடிப்பு இருந்து வரும்வரையில் நம் உடலுக்கு முழுமையான ஓய்வு என்பது கிடைக்காது. எப்போதும் நடை பெற்றுத் தீரவேண்டிய மூச்சு, இதயத் துடிப்பு இவற்றுக்காக எந்நேரமும் உடல் ஆற்றல் செலவாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால், பூரண ஓய்வுக்கு மிக நெருங்கிய நிலை, தூங்கும்போது ஏற்படுகிறது.

தூங்கும் போது நம் நாடித் துடிப்பும் மூச்சு வேகமும் மிகவும் மந்தம் அடைகின்றன.

நம் ரத்த அழுத்தமும் குறைகிறது. நம் பிரக்ஞை (உணர்வும்) மறைந்து நிற்கிறது.

ஆனால், அடி மன பிரக்ஞை (Sub cocious mid) மட்டும் தூங்குவதில்லை.

தூங்கும்போதுகூட ஒருவன் நம் பேச் சுக்குச் சில சமயம் பதில் சொல்வதற்கு இந்த அடிமன பிரக்ஞையின் விழிப்புதான் காரணம்.

நம் தூக்கத்தின் ஆழம் எப்போதும் ஒரே தரமாக இருப்பதில்லை. தூக்கம் தொடங்கிய இரண்டாவது மூன்றாவது மணி நேரங்களில் தூக்கம் ஆழ்ந்ததாக இருக்க வேண் டும். இந்த இரண்டு மணி நேரங்களில் தூக்கம் கலைந்தாலும் அதை யாராவது கலைத்தாலும் கேடு நேரும். முக்கியமாக குழந்தைகளின் விஷயத்தில் இதில் கவனம் வே ண்டும். விழிப்பு நேரம் நெருங்க நெருங்க தூக்கத்தின் ஆழம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வரும்.

உடம்பு, இழந்த அதன் ஆற்றலைப் பெறும் வேலை முடிந்தவுடன் விழிப்பு வந்துவிடும்.

தூக்கத்தில் முழுப் பயனையும் பெற வேண்டுமானால் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுங்கள்:

ஒழுங்கு முறை

தினமும் ஒரே நேரத்தில் படுக்கப்போக வேண்டும். ஒரே நேரத்தில் விழித்தெழ வேண்டும். இது முதல் விதி. இந்த நேரக் கட்டுப்பாடு குழந்தைகளுக்கு மிக அவசி யம். போதிய தூக்கமில்லாத குழந்தைகள் படபடப்பும், சிடுசிடுப்பும் உள்ளவர் களாக இருப்பார்கள். நல்ல பசி இருக் காது. இளைக்கத் தொடங்குவார்கள்.

தூக்கத்துக்கு முன் உடல், மனம் இரண்டும் சிறிது நேரமாவது ஓய்வு பெற வேண்டும். தூக்கத்துக்கு முன் எது பற்றியாவது உணர்ச்சி வசப்பட நேர்ந்திருந்தால், இந்த ஓய்வு மிக மிக அவசியம்.

நல்ல காற்றோட்டமான பகுதியில் சற்று உலாவுவது இந்த ஓய்வைப் பெற உதவும். சிலர் விஷயத்தில், இளஞ்சூடான பானம் அருந்துவது இதற்கு உதவும்.

தூக்கமின்மை (Insomnia) என்பது உண்மை யில் ஒரு நோய் அல்ல; வேறு ஒரு நோய் காரணமாக இது ஏற்படுவதும் எப்போதாவது தான். கவலை அல்லது மனக்கிளர்ச்சியே தூக்கம் கெடுவதன் அடிப்படைக் காரணம் என்பது கவனித்தால் விளங்கும்.

தூக்கம் போவதற்கு ஒரு மணி நேரம் முன்பாவது மனக் கிளர்ச்சிகள் பற்றிய காரணத்தை ஆராய்ந்து ஆறுதல் பெற முயல வேண்டும். கோபம், தூக்கம், பயம் இவை தூக்கத்தைத் கெடுத்துவிடும்.

மிகச் சிறு நிகழ்ச்சிகள் கூட குழந்தை களிடம் இந்த உணர்ச்சிகளை உண்டாக்கி விடும்.

இருட்டைக் கண்டு பயப்படும் குழந்தைக்கு ஆறுதல் தர, கூடத்து விளக்கின் ஒரு கிரணம் குழந்தையின் படுக்கை அறையில் விழும்படி அமைப்பது அதற்குத் தைரிய மூ ட்டும். அதன் பயத்தைப் போக்கி விடும். நமக்குத் துணை இருக்கிறது என்ற தைரியம் குழந்தைக்கு இந்த சிறு சாதனத்தால் உண்டாகும்.

படுக்கை அறையைக் கவனமாகத் தயாரிப்பது அவசியம். பிரகாசமான வெளிச்சம் கண்ணுக்கும், நரம்புகளுக்கும் எரிச்சல் ஊட்டும். எனவே, பிரகாசமான வெளிச்சம் தரும் விளக்குகளை ‘லைட் ஷேடு’களால் மங்கச் செய்யவேண்டும். படுக்கை விரிப்புகள் சில்லென்று இல்லாமல் கதகதப்பாக இருக்கவேண்டும். அவை மிக கனமாக இ ருக்கக்கூடாது. மிக இறுக்கமாக, படுக்கையோடு இணைத்து செருகியிருக்கக்கூடாது. உடல்நலத்துக்கு தூய காற்று அவசியம். எனவே, ஜன்னல் களைக் கொஞ்சமாவது திறந்து வைத் திருக்க வேண்டும்.

தூங்கப் போகும்முன் வயிறு நிரம்ப உண்ணக்கூடாது. மிதமான உணவே இரவில் பலருக்குப் போதும்.

தூக்கத்தின் அளவு

நம் தூக்க நேர அளவு என்ன? இது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்ப தில்லை. நபருக்கு நபர் வேறுபடுகிறது. என்றாலும், வயது வந்த ஒருவர் ஒரு நாளில் சுமார் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்தில் கழிக்கவேண்டும். அதாவது, சுமாராக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். குழந்தைகள் இன்னும் அதிக நேரம் தூங்குவது அவசியம்.

கீழ்க்காணும் அட்டவணையில் உடல்நலத்துக்கு அவசியமான சராசரி தூக்க அளவைக் காண்க:

வயது தூக்க நேரம்

1 ஆண்டு 14-16 மணி
2-3 ஆண்டு 12-14 மணி
4-5 ஆண்டு 10-12 மணி
6-10 ஆண்டு 10-11 மணி
11-16 ஆண்டு 9-10 மணி

யாருக்கேனும் இங்கே குறிப்பிட்டுள்ள அளவுக்கு குறைவாகத் தூங்கி எழுந் திருக்கும்போது சோர்வில்லாமல் உற்சாக மாக இருந்தால், அவர் அந்த அளவு தூக்கமே தமக்குப் போதும் என்று வைத்துக் கொள்ளலாம்.

தூக்கத்தையொட்டிய பழக்கங்கள்

கால ஒழுங்கு வேண்டும். தூங்கப் போகும்முன் மனமும், உடலும் ஓய்வாக இருக்கவேண்டும். கவலை கூடாது.

தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத் துக்கு முன்பே மனக் கிளர்ச்சிகளை ஆற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து நம் உடலில் ஏதாவது வலியோ, வேதனையோ எங்காவது இருந்து தூக்கத்தைக் கெடுக்கு மானால், மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

தூக்கத்திற்கு முன் தூய காற்றோட்ட முள்ள இடத்தில் சற்று உலாவி வருவதும், மிதமான உணவு கொள்வதும், நல்ல தூக்கத்துக்குத் துணை. உடல், மன ஓய்வைத் தரும்.

படுக்கை அறை அமைதியாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் உள்ள தாக இருக்கவேண்டும். படுக்கை விரிப்பு கள் கதகதப்பாகவும், கனமில்லாமலும் இருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக