பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

தமிழக முதல்வருக்கு ஓட்டாண்டியின் கடிதம்

கோடாணு கோடி மக்களுக்கு இலவசமா தாரை வார்த்து தரும் தர்ம வள்ளலயே அப்படின்னு போஸ்ட்ர் அடிக்கும் ஏழை மக்கள் இருக்கும் வரை இலவசம் தந்தே தீருவேண்ணு பிடிவாதம் செய்யறீகளே....உங்களுக்குத்தாங்க இந்த கடிதம்.ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ஓடாய் போன ஓட்டாண்டிங்க நாங்க... எல்லா கட்சிக்காரங்களுக்கும்.



இலவசம் இலவசம்னு தர்றீங்க சரி. ஒரு படி மேலேயே போய் அரிசி ஒரு ரூபாய்ங்கறிங்க.

ஆனா தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசாங்க கழிப்பிடங்களில் கூட ஏனய்யா டீசல், பெட்ரோல் விலையாட்டும் ஏத்திட்டீங்க....அத அரசாங்கம் உற்பத்தி பண்ணலையே , ஆசாமிதானே உற்பத்தி பண்ணறான்.... இதுக்கெல்லாம் கூடவா விலை ஏத்தறது , வரும்காலத்துல டேக்ஸ் ஏதும்போட்ற மாட்டீங்களே.....

.....லோடிங் ஒரு ருபாய். அன்லோடிங் 4 ரூபாய்.

எந்த ஊர் நியாயம்யா இது... அப்படியாவது அந்த கழிப்பிடம் நல்லாவா இருக்குது....

உங்களுக்கு விளக்கி சொல்றதுக்குகாக ஒரு சின்ன குட்டிக்கதைங்க..



.பஞ்ச பாண்டவர்களின் முதல்வரான தர்மர் பற்றி உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்.

உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர்னு எல்லாம் சொல்லுவாங்க. அவரை தவிர இவ்வுலகித்தலயே அதிக தர்மமும், தானமும் செய்பவர்கள் யாரும் இருக்கமுடியாதுங்கிறது அவரு எண்ணம். இதுவே அவருக்கு அகந்தையாக மாறக்கூடாதுன்னு என்று நினைத்த கண்ணபிரான் தர்மரை மலைநாட்டு மன்னர் மகாபலி சக்கரவர்த்தியின் நாட்டுக்கு அவரை அழைத்து சென்றார்.அங்குள்ள ஒரு வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கும்போது அவ்வீட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார். அவர்கள் குடித்து முடித்ததும் தங்க செம்பை வீசி ஏறிந்துவிட்டார்.

தர்மர் அந்த பெண்மணியிடம் அம்மா தங்கச் செம்பை பத்திரமா வைத்திருக்கவேண்டுமே? நீங்கள் வெளியில் எறிந்துவீட்டீர்களே என்று ஆச்சர்யமாக கேட்டார்.அந்த பெண்மணியோ எங்கள் வீட்டில் நாங்கள் ஒரு முறை பயன்படுத்தியை மறுமுறை பயன்படுத்துவதில்லை என்று அலட்சியமாக பதில் கூறினார்.பின் மகாபலியின் அரசவைக்கு சென்ற கண்ணபிரான் மகாபலியிடம் தர்மரை அறிமுகப்படுத்தும்போது இவர்தான் தர்மர், இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர் என்ற சொன்னாருங்க.

தர்மரின் முகத்தில் கூட விழிக்காமல் கிருஷ்ணனிடம் பேசிய மகாபலி.,கண்ணபிரானே என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை. ஆகையால் எல்லாரிடமும் செல்வம் குவிந்துள்ளது. எனவே பிச்சை என்ற சொல்லுக்கும் தர்மம் என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை. எனவே அவர்கள் தானம் பெறவேண்டியதும் அவசியமில்லை.. இவரது நாட்டில்தான் ஏழைகள் அதிகமாக உள்ளார்கள் போலும், எனவேத்தான் எல்லாரும் தானம் கேட்டுவருகின்றனர்.இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த அரசரின் முகத்தைப்பார்க்க வெட்கப்படுகிறேன் என்றார்.

மேல உள்ள வரிகளும் உங்களுக்கு தானுங்க.... நீங்களும், இலவசம் இலவசம்னு அள்ளித்தர்றதுக்குபதிலா விவசாயத்தையும், தொழில் முன்னேற்றத்தையும் வளர்த்துவிடுங்க. இதுபற்றி உங்க மக்களட்ட கேட்டா பசிக்கு மீன கொடுக்கிறதுக்கு பதிலா, மீன பிடிக்க கத்துக்கொடுங்கன்னு சொல்றாங்க....அதுக்காக சட்டுபுட்டுனு வெளிநாட்டு காரன கூட்டிட்டு வந்துடாதிங்க. உலக நாட்டில் இருந்து ஆள கூட்டிட்டு வந்து பண்றது ஒரு வியாபாரம்னாலும் உள்ளூர் வியாபாரமும் பெருகணுமுங்க...நீங்க நாலும் தெரிஞ்சவர்... புரிஞ்சுப்பீங்ன்னு நம்பறேனுங்க......



இப்படிக்கு

ஓட்டாண்டி...

1 கருத்து:

  1. பசிக்கு மீன கொடுக்கிறதுக்கு பதிலா, மீன பிடிக்க கத்துக்கொடுங்க-this is the way.

    பதிலளிநீக்கு