பிரபலமான இடுகைகள்

புதன், 26 ஜனவரி, 2011

மனப் பயிற்சியே மகிழ்ச்சிக்கு வழி

மனதை ஒருநிலைப்படுத்த சில வழிகள் உண்டு.
நாம் அடைந்த வெற்றி, சாதித்த சாதனை ஒன்றை
எடுத்துக் கொள்ள வேண்டும். அதைப்பற்றியே
நினைத்து நினைத்து மகிழ்ந்து கொண்டிருப்பது நல்லது.
-
காலையிலோ , மாலையிலோ, கடற்கரை, பூங்கா,
குளக்கரை, ஏரிக்கரை, பச்சை வயல்வெளி, மரங்கள்
அடர்ந்த பகுதி இவைகளில் ஏதேனும் ஓரிடத்தைத்
தெரிவு செய்து உலாவப் போகலாம்.
மன அமைதிக்கு இது உதவும்.
-

யோகாசனம், சுவாசப் பயிற்சி இவைகளின் மூலமும்
மனதை ஒரு நிலைப்படுத்தலாம். ஒரு குருவின் மூலமாக
யோகாசனம், மூச்சுப் பயிற்சி இவைகளை முறையாகக்
கற்றுக் கொள்வது அவசியம்.
இன்று பல நோய்கள் கூட இவைகளினால்குணமாகிறது.

இப்படியாக ஏதேனும் ஒரு வழியில் தினம் பத்து அல்லது
இருபது நிமிட நேரம் மனதை ஒரு நிலைப்படுத்தப்
பழகிக் கொண்டால், நாம் எதையும் சாதிக்க முடியும்.

'மகிழ்ச்சியை நம்புங்கள். மகிழ்ச்சியைப் பற்றி நினையுங்கள்.
மகிழ்சியாக இருப்பதை வழக்கமாக எற்படுத்திக் கொள்ளுங்கள்.
பழக்கத்தின் மூலம் மகிழ்ச்சியை நிலை நிறுத்துங்கள்.
அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுங்கள்' என்கின்றார்
நார்மன் வின்சென் பீல்.

நம்முடைய மனப் பயிற்சினால் மகிழ்ச்சியோடு இருப்பதே
நமது நோக்கமாகக் கொண்டு செயல்பாட்டால் எளிதில்
இன்பம் காணலாம்.

மனப் பயிற்சியே மகிழ்ச்சிக்கு வழி

1 கருத்து: