ஒரு ஐந்து நிமிடம் தொலைக்காட்சியில் ஏதாவது நல்லதொரு நிகழ்ச்சியைப் பார்க்கவேண்டும் என்று நினைத்து உட்காரும்போது ஒரு நிமிடத்திற்குள் 10 விளம்பரங்களை போட்டுவிடுகிறார்கள். அவற்றில் 6 விளம்பரங்கள் அழகுசாதனப் பொருட்களைப் பற்றியதாக இருக்கிறது. அந்த ஆறில் மூன்று ’முகப்பொலிவு க்ரீம்’ அல்லது ’சிவப்பழகு க்ரீம்’ பற்றியதுமாக இருக்கிறது.
செயற்கையாக நம்மை அழகாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே இத்தகு விளம்பரங்கள் உணர்த்துகின்றன.
.
“சினம் எழாத மனம் பிரகாசமாக இருக்கும். முகம் பொலிவாகக் காணப்படும்.”
-மகரிஷி
’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ ("Face is the Index of the Mind") என்பது ஓர் சிறந்த பழமொழியாகும்.
மனத்தில் எல்லா நற்குணங்களும் தோன்றி செயல்படும்போதுதான் நமது முகம் அழகாககத் தோன்றுகிறது. நற்குணங்கள் என்று சொல்லுகிறபோது அதற்கு எதிர்ச்சொல்லாக வருவது ’தீயகுணங்கள்’ ஆகும். ‘தீ’ என்பது எதையுமே அழிப்பது அல்லவா? அவற்றுல் தலையாயது ‘சினம்’ ஆகும்.
அதனால்தான் வள்ளுவப்பெருந்தகை,
“தீயவை தீயபயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்’
-குறள் 202
என்கிறார்.
மகரிஷி கூறுகிறார்கள்,
“சினம், அறிவுக்கு மேன்மையைத் தரத்தக்க ஒரு வழியை அடைத்துவிட்டு, தடுத்து விடுகிறது என்பது ஒன்று. இரண்டாவது உடல்நலத்தைக் கெடுத்துவிடுகிறது. மூன்றாவது குடும்பத்தில் எந்த நேரமும் சச்சரவு, சங்கடம். உறவினர்களிடத்தில்கூட அன்போடு பண்போடு இருக்கக்கூடியவர்களிடம் கூட சங்கடத்தையும், துன்பத்தையும், குழப்பதையும் விளைவித்துவிடும்.”
-(அருளருவி)
மேலும் மகரிஷி அவர்கள் ஒரு எளிய எடுத்துக்காட்டு ஒன்றையும் குறிப்பிடுகிறார்கள்.
“ஒரு பூக்கூடையை எடுத்துக்கொண்டு போய், நந்தவனத்திலிருக்கும் அருமையான பூக்களைப் பறித்துப் போட்டுக்கொண்டே வருகிறோம். பறித்த பூக்களெல்லாம் நல்ல வாசனையோடு இருக்கின்றன. அந்த சமயத்தில் தவறி பூக்கூடையைச் சாக்கடையில் கொட்டிவிட்டோமேயானல் என்னாகுமோ அதேபோல நமக்கு(SKY Meditationer) அந்தச் சக்தி (தவஆற்றல்) பயன்படாமலேயே போகும். இந்தச் சக்தியை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் சினம் தவிர்க்கத்தான் வேண்டும்.”
-(அருளருவி)
மற்றவர்கள் ’முகப்பொலிவு க்ரீம்’ தினசரி பயன்படுத்துவது போல நாமும் சினம் தவிர்க்கும் பயிற்சியை தினமும் செய்து இயற்கையான அழகைப்பெறுவோம்.
வாழ்க வளமுடன்.
பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக