ஒவ்வாமை: ஒரு பார்வை!
இந்தக் காலத்தில் 'ஒவ்வாமை' எனப்படும் 'அலர்ஜி'யால் பாதிக்கப்படாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அலர்ஜி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.
பரம்பரைத் தன்மைக் காரணமாக ஒருவருக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படலாம். எனினும் பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச் சூழல் தூண்டுதல் காரணமாகவே பெரும்பாலானோருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. உதாரணமாக சிகரெட் புகை, வேதிப் பொருட்கள், குளிர்காற்று உள்பட தட்பவெப்ப நிலையில் திடீர் மாற்றம், கடுமையான துர்நாற்றம், மன அழுத்தம் உள்பட பல்வேறு காரணங்களால் 'ரைனிட்டிஸ்' எனப்படும் மூக்குப் பாதை திரவப் படலத்தில் வீக்கம் ஏற்பட்டு ஒவ்வாமை ஏற்படும்.
வீட்டைப் பொறுத்தவரை தூசு நுண்பூச்சி, பூனை உள்பட சில வளர்ப்புப் பிராணிகளின் முடியில் குடியிருக்கும் நுண்ணிய கிருமிகள், தலையணை, மெத்தை, விரிப்பு போன்றவற்றில் ஒளிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒவ்வாத தூசுப் பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஆற்றல் படைத்தவை. கரப்பான் பூச்சி, எலிகள் காரணமாகவும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். உணவுப் பொருட்கள் காரணமாகவும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு. மீன் உட்பட கடல் சார்ந்த உணவுப் பொருட்கள், கடலை உள்ளிட்ட பருப்பு வகைகள், பால் பொருட்கள், சோயா உள்ளிட்டவை காரணமாகவும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டு.
தொழில் சார்ந்த அலர்ஜியைப் பொறுத்தவரை வேதிப் பொருட்கள், மரம் உள்ளிட்ட சாமான்களில் உள்ள தூசு, வேளாண்மை சார்ந்த தானியங்கள் காரணமாகவும் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.
கிராமங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் சென்னை உள்பட பெரு நகரங்களுக்கு வருகின்றனர். இதனால் பெரு நகரங்களில் இரு சக்கர வாகனங்கள் உள்பட பிற வாகனங்களின் பெருக்கம் லட்சக்கணக்காக உயர்ந்துள்ளது. விளைவு அந்த வாகனங்கள் விடும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து அதன் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒவ்வாமையின் அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். நாம் 24 மணிநேரமும் சுவாசித்துக் கொண்டிருப்பதால் ஒவ்வாமை காரணமாக பொதுவாக பாதிக்கப்படுவது சுவாச மண்டலாம்தான். அலர்ஜி காரணமாக நமச்சல் ஏற்பட்டு மூக்குப்பாதை திரவப் படலத்தில் வீக்கம் ஏற்படும். தொடர் ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா நோய் பாதிப்பும் ஏற்படக்கூடும். மூச்சு விடுவதில் கஷ்டம், கண்கள், உதடு, முகம் ஆகியவற்றில் வீக்கம், தொண்டை அடைப்பு உள்ளிட்டவை உயிருக்கு ஆபத்தான தீவிர ஒவ்வாமை அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் வெளிப்படும் நிலையில் உடனடி சிகிச்சை அவசியம். அதிர்ஷ்டவசமாக ஒவ்வாமை என்பது பொதுவாக ஒருநாள்பட்ட நோயாகத்தான் உள்ளது. காது, மூக்கு, தொண்டை தொடர்புடைய ஒவ்வாமை காரணமாக ஒருவர் பாதிக்கப்படும் நிலையில் தொடர் ஜலதோஷம், தொடர் தும்மல், மூக்கின் சுவாசப் பாதையில் அடைப்பு, வறட்டு இருமல், முகப் பகுதியில் வலி, வாசனையை அறிய முடியாத தன்மை, குரலில் மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
ஒவ்வாமை காரணமாக மூக்கு, கன்னப் பகுதிக்குள் உள்ள சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்பட்டு 'சைனுசைட்டீஸ்' நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஒவ்வாமை காரணமாக ஒற்றை தலைவலி பிரச்சினையும் ஏற்படலாம். இது தவிர ஒருவருக்கு அலர்ஜி பிரச்சினை இருந்தால் வயிறும் பாதிக்கக் கூடும். சில பொருட்களை சுவாசித்தல், சிலவற்றை சாப்பிடுதல், தொடுதல் ஆகிய காரணங்கள் மூலமாக ஏற்படும் ஒவ்வாமை இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாதது. இதற்கு மனிதர்களுக்கு பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததும், மனநலம் சீராக இல்லாததுமே காரணம் என்கிறது நவீன ஆராய்ச்சிகள்.
ஆங்கில மருத்துவத்தில் ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் இருக்கின்றன. ஆனால் இம்மருந்துகள் சிலருக்கு மட்டுமே பயன்தரும். சிலருக்கு பக்க விளைவுகள் வந்த வேடிக்கை சம்பவங்களும் உண்டு. பின் விளைவுகளும் வரும்.
ஹோமியோபதியில் ஆர்கனிகம் ஆல்பம், பெசிலினம், மெபோரினம், சிபிலினம், நக்ஸ்வாமிகா போன்ற மருந்துகள் உள்ளன. உடலையும், உள்ளத்தையும், சுற்றுப்புறத்தையும் கணக்கில் கொண்டு இந்த ஹோமியோபதி மருந்துகளைக் கொடுப்பதால் ஒவ்வாமை இரண்டே மாதங்களில் இருக்கிற இடம் தெரியாமல் அலறி அடித்து ஓடிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக