பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

இனிய காலை வணக்கம்

ஓம் நமோ நாராயணாய
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

பிறருக்கு நீ செய்வது..

ஒருவன் மலையைக் கடந்து அடுத்த ஊருக்குச் செல்வதற்காக மலை ஏறிக்கொண்டிருந்தான். அப்போது வழியில் ஒரு துறவியும் வந்து சேர்ந்தார். இருவரும் பேசிக் கொண்டே போகும் போது..

அவன் தன்மனக் குறையை துறவியிடம் சொன்னான். யாரும் தன்னிடம் பாசமாகவும், உண்மையாகவும் பழகுவதில்லை. உதவிக்க வருவதில்லை என அதங்கத்துடன் சொல்லிக் கொண்டே வரும் போது அவன் காலை ஒரு கல் தடுக்கியது. உடனே அவன் "ஆ" என்று கத்தினான் அது மலையெங்கும் எதிரொலித்தது.

அப்போது துறவி அவன் தோளில் தட்டி, "நல்லவன்" என்று உரக்கச் சொல்! என்றார். அவனும் "நல்லவன்" என்று சத்தமாகச் சொன்னான். உடனே, மலையின் எல்லா திசைகளிலிருந்தும் "நல்லவன்" என்று எதிரொலித்தது.

உடனே துறவி அவனிடம் "வாழ்க்கையும் அப்படித்தான். பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுதான் உனக்கும் எதிரொலிக்கும்" என்று விளக்கினார் துறவி.

அன்றிலிருந்து அவன் எல்லோரிடமும் பாசமாகவும் அன்பாகவும் இருந்து உதவிசெய்து வரலானான். அதுபோல் மற்றவர்களும் அவனிடம் பாசமாகவும் அன்பாகவும் இருந்தனர்.



--


பாலாஜி
"மனிதனிடமிருந்து வெளிப்படும் எல்லாமே அருவருப்பானவை. வியர்வை, எச்சில், சிறுநீர், மலம், சுக்கிலம், சளி , இப்படி நம்மிடமிருந்து வெளிப்படும் யாவுமே துர்நாற்றம் உடையவை.அருவருப்பு தருபவை. உன்னிடமிருந்து இத்தனை துர்நாற்றம் மிக்கவை வெளிப்படும் பொழுது சொற்களாவது இனிய மணம் உடையதாக வெளிப்படட்டும்"

புத்தர்.

2 கருத்துகள்:

  1. யாராலும் யாரையும் மாற்ற முடியாது. எழுத்தாலோ, கதையாலோ, கட்டுரையாலோ, பேச்சினாலோ மட்டும் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது. ரமணர் சொல்வது போல் There is no any short route. அவனுக்கானதை அவனே முயன்றுதான் அடைய வேண்டும். அதற்குத் தான் இந்த மானுடப்பிறவி. அதற்கு முதலில் அவனுள் அவனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அதுவே முக்கியம்.

    பதிலளிநீக்கு