பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

அவியல் ஓம்

ஓம்.

நவக்கிரஹங்களை சுற்றுவது எப்படி?

மொத்தம் ஒன்பது முறை நவக்கிரஹங்களைச் சுற்றவேண்டும். ஞாயிறே போற்றி என்று ஆரம்பித்து, திங்களே போற்றி, மங்களச் செவ்வாயே போற்றி, புதனே போற்றி, குருவே போற்றி, சுக்கிரனே போற்றி, சனியே போற்றி என்று ஒவ்வொன்றாகக் கூறிக்கொண்டே ஏழாவது சுற்று வரை வலமாகச் சுற்றவேண்டும். ஏனெனில் இவை ஏழும் இடமிருந்து வலமாகச் சுற்றுகின்றன. ஏனைய இரு கிரஹங்களான ராகு, கேது இரண்டும் வலமிருந்து இடமாகச் சுற்றுபவை. எனவே நாமும் ராகுவே போற்றி, கேதுவே போற்றி என்று கூறி இடமாகச் சுற்றவேண்டும்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=--=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

”இஞ்சி தின்ற குரங்கு போல’

என்றொரு பழமொழி உண்டு. அதன் பொருள் சரியாகப் பல்ருக்குத் தெரியாது. இஞ்சியின் அளவில் இஞ்சியைப் போன்றே தோற்றமுள்ள காட்டு மஞ்சள் கிழங்கு குரங்குக்கு மிகவும் மோகம். இது, மாங்கய் இஞ்சியைப் போன்றது. அதிகம் காரம் இல்லாதது.. அதில்ருசி கண்ட குரங்கு அது போலவே தோன்றும் இஞ்சியைக் கண்டு ஏமாந்து கடித்து சுவைத்து விடும். அப்போது ஏற்படும் அதன் முகபாவத்தையும், கோபத்தையும் சொல்லத் தேவை இல்லை. ஏற்க்னவே குரங்கு முகம், இப்போது கேட்கவேண்டுமா?

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

கொட்டாவி

-=-=-=-=-=-=

கொட்டாவி விடும்போது வாய்க்கு எதிரே கையை வைத்துக் கொள்ள வேண்டும். கொட்டாவி சோம்பலுக்கும், நோய்க்கும், தூக்கத்திற்கும் தூதன் போன்றது. உள் இருக்கும் கெட்ட காற்று, மதகு வழியாக நீர் வெளிவருவது போல வெளியே வருகின்றது. அது பிறர்மேல் பட்டால் நோய் தொற்ற வாய்ப்புண்டு. ஒருவர் கொட்டாவி விடும் போது பார்த்தால் பார்ப்பவரையும் அது தொற்றிக் கொள்ளும். கையால் மறைப்பதாலும், விரல்களால் சிட்டிகை (சுடக்கு) போடுவதாலும் அஹ்தூய்மையற்ற காற்று நேராகப் பிறர்மேல் பரவாமல் காற்றுடன் கலந்துவிடும். ’சிவ’ ,’சிவ’, ’கிருஷ்ண’, ‘கிருஷ்ண’ என்று அச்சமயம் கூறுவர்.

பசுக்களுக்கு நடுவிலும், பெரியோர்களுக்கு நடுவிலும்,, அக்னி- பந்தணர் இவர்களுக்கு இடையிலும், தம்பதிகளுகு இடையிலும், குரு- சீடர்களுக்கு நடுவிலும், அண்ணந்தம்பி இடையிலும், அக்காள்- தங்கை இடையிலும், குழந்தை- தாய், பசு- கன்று இடையிலும் போகக் கூட்டாது. நந்தி-சிவன், சிவன்- பார்வதி,, பெருமாள்- பிராட்டி, பெருமாள்- கருடன் இவர்களுக்கு இடையில் சென்றால் முன்னர் நாம் செய்த புண்ணியம் அனைத்தும் அகன்றுவிடும். அவர்களைப் பிரதக்ஷிணமாகச் சென்றால் புண்ணியம் உண்டாகும்.

உபவாஸம் என்பது, சரீர சுத்திக்காகவும், மன சுத்திக்காகவும், தெய்வப் பிரஸாதம் பெறுவதற்காகவும் ஏற்பட்ட கர்மா. நினைத்தபடி சாஸ்திரமில்லாமல் உபவாஸமிருக்கக் கூடாது. ‘உபவாஸம் இரு என்று சாஸ்த்திரம் விதித்த காலத்தில் உண்ணக் கூடாது.

மனஹு ஒருமைப் படுவதற்கு உபவாஸம் ஓர் உயர்ந்த சாதனம். உடலே தர்மத்திற்கு முதல் சாதனமாதலால் நோய்வாப் படும்படி கடினமான உபவாஸத்தைக் கைக்கொள்ளலாகாது.கலியில் அன்னத்தை ஆசரயித்தே ஜீவனிருப்பதால், அடிக்கடி அனாவசியமான உபவாஸத்தால் உடலைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது.

நன்றி சங்கர சாஸ்த்ரிகள்.`

-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=--

ஓம்.

இந்தக் கொட்டாவியினால் ஒரு அவஸ்தையடைந்த ஒரு ஜீவன் இலக்குவன்.

ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தின் போது ரகுவம்ஸ குலகொழுந்து ஸ்ரீ ராமபிரான் மங்கள ஸ்நானம் செய்து, புனிதப் புத்தாடைகள் புனைந்து , அணிகலன்கள் அரசருக்குரியனவற்றை அணிந்து, ஏவலர் வெண்சாமரம் வீச, மகனீயர்களும் ரிஷி புங்கவர்களும், வேத விற்பன்னர்களும் மறையோத, வெண்கொற்றக் குடை தாங்கி ராஜ நடை பயின்று வர, தாய்மார்களும் உடன் பிறப்புகளும் அனுமனும் சீதா பிராட்டியும் புளகாங்கிதம் எய்தி, அரசபரம்பரை உறவுகள் குழுமியிருக்க, மக்கள் மன்னர்மன்னனின் பட்டாபிஷேகக் காட்சியை எதிர்நோகியிருக்க பெருங் கொட்டாவியின் திடர் திணிப்பால் நைந்த இலக்குவன் வாய்விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பொலி இலக்குவனின் இருக்கையினின்றும் வெளிப்போந்து அவையெங்கும் சுற்றிச்சுழன்று அகில் மணத்துடன் கலந்து சம்பிரதாய அமைதியான வாத்திய ஒழுங்கு தாண்டி ரகுவம்ஸதிலகம் உட்பட அனைவருக்கும் கேட்டு அனைத்து மக்களும் பிராட்டியுட்பட ஒருகணம் ஒலி எழுந்த பக்கம் நோக்கினர். அவையடக்கமின்றி ஒலியின் பிறப்புக்கு யாது காரணம்? என விழிகள் அனைத்தும் இலக்குவனின் இருக்கையில் தஞ்சமடைய, அவரவர் மனதில் தோன்றியவாறு காரணம் கற்பித்துக் கொண்டு வாளாவிருந்தனர். அவையின் செயற்பாடுகள் ஒருகணம் நின்று மீண்டும் செயற்பட்டன. எனினும் அனைவரையும் ஈர்த்த சிரிப்பொலியின் காரணத்தை உண்மையில் அறிய அனைவரும் விரும்பினர். இலக்குவனிடம் நேரடியாக எவரும் கேட்க முன்வராதபோது சபையின் நிகழ்வுகள் பழுதின்றி நிறைவேறின.

சீதா பிராட்டி இலக்குவனிடம் நாசுக்காக காரணம் விசாரித்தார். இலக்குவன் சொன்னான்,” யாசித்துப் பெற்றேன் ஒருவரம். அந்தக் காலக் கெடு முடிந்தவகையால், வரம் தந்தவர் என்னை நெருக்க வேறு எதுவும் செய்யவியலாத நிலையில், கெஞ்சினேன், கால்பிடித்தேன், மேலும் ஒருகணம் அந்த வரத்தை நீட்டிக்க வேண்டினேன். இரக்கமற்ற அவர் என்பால் கருணை கொள்ளாமல், என் கோரிக்கையை ஏற்காமல் என்னை பெரிதும் ஆள்படுத்தி , என் வலிமை எல்லாம் சோதித்து என்னைப் பலவீனன் ஆக்கி, நொந்துபோய் அவர் காலடியில் விழுமாறு செய்துவிட்டார். என்னை மீறிய அந்த நடவடிக்கையின் செயற்பாடு என்னை வெகுள வைத்தாலும் எதுவும் செய்யவியலாதவனானேன். கையறு நிலையில் அவரிடம் மன்னிப்பு கோரிய நிலையினை நினைந்தேன். என் இயலாமை என்னை உறக்கச் சிரிக்கச் செய்துவிட்டது. பிழை பொறுக்க வேண்டுகிறேன்” என்றான்.

யார் அந்த வரமளித்தவர்? அவர் ஏன் நெருக்கினார்? என்று பிராட்டி வினவ,

இலக்குவன் சொன்னான்,” பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீ ராமனைப் பின்தொடர்ந்து பாதுகாக்கவும் உடன் உறையவும் வேண்டி நித்திராதேவியிடம் வனவாசம் முடியும் வரை தூக்கம் துறக்க வரம் கேட்டேன். அவள் ஒரு நிபந்தனையின் பேரில் வரம் தந்தாள். வனவாசம் முடிந்தகையுடன் உன்னை ஆக்கிரமித்துக் கொள்வேன்; அரைக் கணமும் பொறுக்கமாட்டேன், சம்மதமா?” என்று விதித்து நான் உளமாற அறுதியிட்டுச் சொன்னமையால் ஏற்றுக் கொண்டு வரம் ஈந்தாள்.

இன்றைய பட்டாபிஷேகம் காண எனக்கு மட்டும் ஆசையில்லையா? என்னமன்றாடியும் விடாப்பிடியாக என்னை ஆக்கிரமிக்க வந்தவளைக்கண்டு, அவருடைய அசையா உறுதியைக் கண்டு நெகிழ்ந்துபோனேன். அதனால் சிரித்துவிட்டேன்” என்றான்.

-=-=-

1 கருத்து: