பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துவது தான் தமிழர்களின் பண்பாடு

இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துவது தான் தமிழர்களின் பண்பாடு. ஆனால் இப்படி வணக்கம் செலுத்துவதில் ஒரு வகையான தீண்டாமை இருக்கிறது என்றும், அதனால் ஐரோப்பிய முறைப்படி கைகுலுக்கி, கொள்வதே சிறந்த மரபு என்றும் சில தமிழ் அறிஞர்கள் பேசுவதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறா என்ற ஒளி வட்டம் தனித்தனியாக உள்ளது. இதனை நவீன கேமராக்கள், படம் எடுத்தும் உள்ளன. விஞ்ஞானமும் அதை ஒத்து கொள்கிறது.




இந்த ஆறா என்பது வேறொரு மனிதனை தொடும் போது மற்றவர்களின் ஆறாவால் சற்று சலனம் படுகிறது.

இது சம்பந்தப்பட்ட இருவருக்குமே நல்லது என்று சொல்ல முடியாது. இதை முற்றிலுமாக உணர்ந்த நமது முன்னோர்கள் வணக்கம் செலுத்தும் முறையை கொண்டு வந்தார்கள்.









இவையெல்லாம் இருக்கட்டும் இனி வணக்கம் செலுத்தும் முறைக்கு வருவோம். இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி உயர்த்தி வணங்குவது கடவுளை வணங்கும் முறை.

நெற்றிக்கு நேராக கை கூப்புவது ஆசியரை வணங்கும் முறை.

உதடுகளுக்கு நேராக கைகளை குவிப்பது தந்தையையும், அரசரையும் வணங்கும் முறை.




மார்புக்கு நேராக வணங்குவது உள்ளத்தாலும் அறிவாலும் உயர்ந்த சான்றோரை வணங்கும் முறை.

தொப்புள் கொடி உறவை தந்த தாயை வயிற்றுக்கு நேர் கை கூப்பி வணங்க வேண்டும்.


இதயத்தில் கை வைத்து நம்மை விட சிறியவர்களை வணங்க வேண்டும். இது தான் இந்திய மரபு.

இதில் தீண்டாமை என்பது இல்லவே இல்லை.

2 கருத்துகள்:

  1. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறா என்ற ஒளி வட்டம் தனித்தனியாக உள்ளது. இதனை நவீன கேமராக்கள், படம் எடுத்தும் உள்ளன. விஞ்ஞானமும் அதை ஒத்து கொள்கிறது.
    yes. we accept.

    பதிலளிநீக்கு
  2. I wii fallow this methad.........Thanks for your information. Take care.......

    பதிலளிநீக்கு