பிரபலமான இடுகைகள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

இந்தியாவில் கடலாய்வு

மறுபடியும் தமிழகத்தில் பாய்மர கப்பலை முழுமையாக பயன்படுத்த

நான், உலகை முழுமையாக கடலில் சுற்றிய கன்னியாகுமரி ஜஸ்டின் மற்றும் ஸ்மைல பாய் மர கப்பலின் முதலாளி ஜோய்சொன் அவர்கள் எடுத்த இரண்டு வருட முயற்சி பயன் அளிக்க தொடங்கி உள்ளது . விரைவில் தமிழக பாய் மர கப்பல்கள் இந்தியா முழுவதும் குறிப்பாக அனைத்து தீவுகளுக்கும் செல்ல ஏற்பாடுகள் நடக்கிறது .

நாற்பது கப்பல்களும் மற்றும கடலோர கப்பல் திட்டம் நடை முறைக்கு வந்து விட்டால் சாலையில் பொருள் ஏற்றி செல்லும் வாகனம்கள் கணிசமாக குறிந்து விடும் மற்றும் டீசல் தேவை குறைந்து விடும் என்பதால் நாட்டிற்கு நல்லது எனக்கும் மூழ்கி உள்ள நில பகுதியை கண்டு பிடிக்க உதவியாக இருக்கும்

இந்த வகை பாய்மரக்கப்பலில் உப்பு நீரை குடி நீராக மாற்றும் வசதியும், ஆய்வுகள் செய்யவும் மற்றும் மக்கள் சென்று வரக்கூடியதாக மாற்ற முயன்று வருகிறோம்.

கிழக்கு நாடுகளுக்கு குறிப்பாக மலைசியவின் புஜாங் சென்று வர ஏற்பாடு நடை பெறுகிறது


தூத்துக்குடி - கொழும்பு இடையே மீண்டும் தோணி மூலம் சரக்கு அனுப்பும் பணி
தூத்துக்குடி - கொழும்பு இடையே தோணி மூலம் சரக்கு அனுப்பும் பணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 9ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

தோணி எனப்படும் பாய்மர கப்பல் மூலம் தூத்துக்குடி - கொழும்பு இடையே சரக்கு வர்த்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாளடைவில் சரக்கு பெட்டகம் மூலம் இலங்கைக்கு சரக்குகள் அனுப்பப்பட்டதால், தோணி மூலம் ஏற்றுமதி செய்வது கடந்த 1998ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தோணி உரிமையாளர்கள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. தூத்துக்குடி - கொழும்பு இடையே தோணி மூலம் சரக்கு அனுப்பும் பணி 9ஆம் தேதி மீண்டும் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தோணி உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மெக்கன்னா, கடந்த 1998ஆம் ஆண்டுக்கு பினனர் ஒரு சில காரணங்களுக்காக இந்த தொழில் பாதிப்புக்கு உள்ளாகியது. தற்போது அந்த பாதிப்புகள் நிவர்த்தி செய்யப்படுவதையடுத்து, அனைவரும் இணைந்து வரும் 9ஆம் தேதி முதல் தூத்துக்குடி - கொழும்பு இடையே தோணி மூலம் சரக்கு அனுப்பும் பணி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது என்றார்

1 கருத்து: