அபர்ணா பாஜ்பாய்... மும்பையை மூச்சிரைக்க வைக்கும் மாடல். 'ஈசன்’ படத்தில் பெரிய இடத்துப் பெண்ணாகக் கன்னம் காட்டிவிட்டுப் போனவர், 'கருப்பம்பட்டி’ படத்துக்காக அஜ்மலுடன் ஆட்டம் போடுகிறார். சிக் உடம்பில் கிக் கிளப்பும் இந்த மோகினி ஆடாத ஆட்டமே இல்லை!
''ரொம்ப ஸ்லிம்மாவும் அதே நேரம் ரொம்ப ஸ்ட்ராங்காவும் என் உடம்பை வெச்சிருக்கேன்னா, அதுக்கு ஸ்போர்ட்ஸ்தான் காரணம். நான் ஜிம் பக்கம் தலைவெச்சே படுக்க மாட்டேன். பயிற்சிங்கிற பேர்ல உடம்பைச் சக்கையா பிழிஞ்சு எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்ம உடம்புக்கே தெரியாம நாம பண்றது தான் பயிற்சி. பேஸ்கட் பால், பேட்மிட்டன், ஸ்பின்னிங், பௌலிங்னு நிறைய விளையாட்டுகள் எனக்குத் தெரியும். மணிக்கணக்கில் விளையாடுவேன். சும்மா பேருக்காக விளையாடுற ஆள் இல்லை நான். எந்த விளையாட்டா இருந்தாலும், முதல் ஆளா பின்னி எடுப்பேன். நான் பேஸ்கட் பால் ஆடுற அழகை வந்து பாருங்க... மைதானமே குலுங்குற அளவுக் குத் தடதடன்னு ஆடுவேன். உடம்பில் 200 கிராம் வெயிட் ஏறினாலும், எனக்குத் தெரிஞ்சிடும். வெயிட் போடுற மாதிரி தெரிஞ்சா விளையாடுற நேரத்தை ஜாஸ்தி ஆக்கிடுவேன். ஷூட்டிங் நேரத் தில் சூழலுக்குத் தக்கபடியான விளையாட்டுகளை விளையாடுவேன்!''-தெம்பாகக் கையை மடக்கிக்காட்டிச் சிரிக்கிறார் அபர்ணா.
''விளையாட்டு தவிர, வேறு பயிற்சிகள் எதுவும் செய்வது கிடையாதா?''
''காலையில் வாக்கிங், ஜாக்கிங் போவேன். அதைக்கூட பயிற்சியா நினைச்சுப் பண்றது கிடையாது. 6 மணிக்கு எழுந்து காலாற நடக் கிறப்ப, மனசுக்கு ரிலாக்ஸ்டா இருக்கும். ஒருநாள் தவறினாலும் அன்னிக்கு முழுக்க எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கும். அதே மாதிரி டான்ஸும் எனக்கு உயிர். குச்சிப்புடி, கதகளி, வெஸ்டர்ன்னு விதவிதமா ஆடுவேன். டான்ஸ் ஆடுறப்ப கிடைக்கிற பரவசத்துக்கும் ஆத்ம திருப்திக்கும் அளவே இருக்காது. நைட்ல, பிடிச்ச மியூஸிக்கைக் கேட்டபடியே பெட் ரூம்ல டான்ஸ் ஆடுவேன். விளை யாட்டு, டான்ஸ், வாக்கிங், ஜாக் கிங்னு இத்தனை விஷயங்களையும் தாண்டி, தனியாப் பயிற்சிகள் ஏதும் பண்ணணுமா என்ன?''
''சின்ன குழந்தைங்க சாப்பிடுற மாதிரி குறைவா சாப்பிடுறீங்களே... எப்பவுமே இப்படித்தானா?''
''பசிக்குத் தக்கபடி அளவாத்தான் சாப்பிடுவேன். உணவு விஷயத்தில் எவ்வளவு கரெக்ட்டா இருக்கிறோமோ, அந்த அளவுக்கு உடம்பு கன்ட்ரோலா இருக்கும். மும்பையில் இருந்த வரைக்கும் சரியா டயட் ஃபாலோ பண்ணினேன். ஆனால், 'ஈசன்’ ஷூட்டிங்குக்காக சென்னை வந்தப்ப 'ஆப்பம்’கிற அட்டகாசமான உணவை அறிமுகப்படுத்திட்டாங்க. அப்பப்பா... என்ன ஒரு டேஸ்ட்? ஆப்பமும் தேங்காய்ப் பாலும் கொடுக்கிறவங்களுக்கு நான் அடிமையாகவே இருக்கத் தயார். இப்போ மும்பை முழுக்கச் சல்லடை போட்டுத் தேடி ஆப்பம் விக்கிற கடைகளைக் கண்டுபிடிச்சிட்டேன். வாரத்துக்கு ஒரு தடவையாவது ஆப்பக் கடைகளில் ஆஜராகிடுவேன். எப்பவுமே ப்யூர் வெஜிடேரியன். வெரைட்டியான சத்துகள்கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவேன். எண்ணெய்ப் பதார்த்தங்களைக் கண்டாலே பயம் வந்துடும். இரவு நேரங்களில் கிராம் கணக்கில் தான் சாப்பிடுவேன். ரொம்ப ஸ்லிம்மா இருக்கிற துக்கு அதிகமா சாப்பிடாததும் முக்கியக் காரணம்!''
''முக அழகை எப்படிப் பராமரிக்கிறீங்க?''
''வெளிப்புற அலங்காரத்தால் சில மணி நேரங்களுக்கு மட்டுமே முகத்தையும் உடலையும் அழகா வெச்சுக்க முடியும். உணவு முறைகள் மூலமா உருவாகும் அழகுதான் நிலைச்சு நிக்கும். சின்ன வயசுல இருந்தே இந்த விஷயத்தில் நான் தெளிவா இருக்கேன். அதனால், மேக்கப் விஷயத்தில் நான் அக்கறை காட்டுறதே கிடையாது. தினமும் நிறைய பழங்கள் சாப்பிடுவேன். அரை லிட்டர் அளவாவது ஜூஸ் குடிப்பேன். பச்சைக் காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவேன். சாப்பாட்டில் எப்பவுமே ஒரு கீரை இருக்கும். ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பேன். சாப்பாட்டில் மாறுதல் ஏற்பட்டாலும், தண்ணீர் விஷயத்தில் சரியா இருப்பேன். வெள்ளரி, தர்பூசணி மாதிரி குளிர்ச்சியான பொருட்களை வைத்து ஃபேஷியல் பண்ணிக்குவேன். இயற்கையான பொருட்களை முகத்தில் அப்ளை பண்றதால், ஸ்கின் எந்தப் பாதிப்புக் கும் ஆளாகாது. ஷூட்டிங் நேரத்தில் மட்டுமே மேக்கப். அதுவும் டைரக்டர் வற்புறுத்தினால் மட்டும்!''
''தலைமுடியும் ரொம்ப ஷைனிங்கா இருக்கே?''
''கால் வரைக்கும் முடி வளர்த்து அழகு காட்டுறது எல்லாம் அந்தக் காலம். ஸ்டைலிஷாவும் ஷைனிங்காவும் முடியை வெச்சுக்கிறதுதான் இப்போதைய ட்ரெண்ட். வாரத்துக்கு இரண்டு தடவை தலைமுடிக்கு கண்டிஷனர் ஷாம்பு பயன்படுத்துவேன். அடிக்கடி ஆயில் மசாஜ் பண்ணிக்குவேன். உச்சந்தலையில் ஏற்படும் குளிர்ச்சிதான் உடல் முழுக்கக் குளிர்ச்சியை உண்டாக்கும். அதனால், ஆயில் மசாஜ் எல்லாப் பெண்களுக்குமே அவசியம்!''
''எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பது எப்படி?''
''வாழ்க்கையில் எனக்குப் பிடிச்ச இரண்டு விஷயம் தூக்கமும் புன்னகையும்தான். உலகத் தைப்பற்றிக் கவலையேபடாமல் கண்ணை மூடித் தூங்கும் நிம்மதி நமக்கு வேற எந்த விஷயத்திலும் கிடைக்கிறதே இல்லை. அதனால 10 நிமிஷ இடைவெளி கிடைச்சா லும் கண்ணை மூடிக்கிடப்பேன். தவறியும் யார்கிட்டயும் கோபப்பட மாட்டேன். கோபத்தால் சாதிக்க முடியாததை, சின்னப் புன்னகையால் நிச்சயம் சாதிக்க முடியும். நம் குணம் எப்படிப்பட்டதுன்னு சொல்ற விசிட்டிங் கார்டே புன்னகைதான். மாடலிங், சினிமா மாதிரியான இடங்களில் ஜெயிக்க அந்த விசிட்டிங் கார்டு எப்பவும் இதழ்களில் இருந்துகிட்டே இருக்கணும்!''
பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக