பிரபலமான இடுகைகள்

புதன், 24 ஆகஸ்ட், 2011

உடல் எடையை குறைக்க வேண்டுமா.... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா?? படியுங்கள்.. சாரி.. குடியுங்கள்.

என்ன நண்பர்களே.... தலைப்பில் ஏதோ ''குடியுங்கள்''

என்று இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா!!...?

ஆம் இந்த பதிவு குடிப்பதைப் பற்றிதான். பச்சை தேயிலையின் (Green tea) மகிமைகளைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.காபி அல்லது தேநீரை சரியான நேரத்தில் குடிக்காவிட்டால் நம்மில் சில பேருக்கு வேலையே ஓடாது. தேநீரைப் பற்றிய சீன பழமொழியைப் பாருங்கள்.

‘’மூன்று நாட்கள் உணவு கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை, ஒரே ஒரு நாள் கூட தேனீர் பருகாமல் இருக்க இயலாது.’’ - (சீன பழமொழி)

சீனாவில் பச்சை தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் உள்ளது. 4700 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவை ஆண்ட பேரரசர் ஷினாங் தன்னுடைய The Divine Farmer's Herb-Root Classic என்ற தன்னுடைய நூலில் பச்சை தேயிலையின் சிறப்புக்களை கூறியுள்ளார்.


மெல்ல மெல்ல சீன மக்கள் தினமும் தேனீர் பருகும் பழக்கத்தை கொண்டதால், பச்சை தேயிலையை பயிரிட தொடங்கினர். மூன்றாம் நூற்றாண்டில் இருந்து அது மக்கள் அன்றாட வாழ்வில் குடிக்கும் பானமாக மாறியது. இன்றோ, சீனாவில் நூற்றுக்கணக்கான பச்சை தேநீர் வகைகள் பயிரிடப்படுகின்றன.





35 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பச்சை தேயிலை தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தாலும் இந்தியா, இந்தோனேஷியா, கொரியா, நேப்பால், இலங்கை, தைவான், மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இதில் முன்ணனியில் உள்ளன.


ஆசியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பச்சை தேநீரை நீண்ட நாள் அருந்துவோரை வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் சில உண்மைகள் வெளிவந்துள்ளன.


உதாரணமாக, 1994 இல் தேசிய புற்றுநோய் நிறுவனம் தனது பத்திரிக்கை செய்தியில் (journal) பச்சை தேயிலை அருந்தும் சீன ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கிட்டத்தட்ட அறுபது சதவிகிதம் உணவுக்குழாய் புற்றுநோய் ஆபத்து குறைவதாக அறிவித்துள்ளது.


பர்டியூ பல்கலைகத்தை (University of purdue) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பச்சை தேநீர் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். இதை தவிர மோசமான (LDL) கொழுப்பை குறைத்து நல்ல (HDL) கொழுப்பின் விகிதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.


பச்சை தேயிலையின் வகைகள்
கமீலியா சினென்சிஸ் (camellia sinensis) என்னும் பச்சை தேயிலை செடியின் மூன்று முக்கிய வகைகள் இந்தியாவில்(அசாம்) மற்றும் சீனாவில் விளைகின்றன. (சிறிய, பெரிய, கலப்பின வகைகள்)


சீனாவில் விளையும் தேயிலை சிறு இலைகள் கொண்டது மற்றும் உயரமான இடங்களில் நன்கு வளர கூடியது. இந்திய தேயிலையோ, பெரிய இலைகளை கொண்டது மற்றும் குறைந்த உயரத்தில் நன்கு வளர கூடியது. கலப்பின வகைகள் இந்த இரண்டு வித குணங்களையும் கொண்டதாக விளங்குகின்றன.


சீனாவில் இருந்து ஜப்பானிற்கு…………….
NARA காலத்தில் (710-794) புத்த துறவிகளால் சீன விஜயம் செய்த போது பச்சை தேயிலை விதைகள் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜப்பானின் தேயிலை தொழிற்சாலை துறவி ஈசாயால் (Eisai) கோவில் நிலத்தில் 1191 ல் தொடங்கி வைக்கப்பட்டது.


பச்சை தேயிலையில்......அப்படி என்ன விசேஷம்?
பச்சை தேயிலையில் கேட்ச்சின் (catchins) பாலிபினால்கள்(polyphenols), எபிகேலோகேட்ச்சின் கேலட் (epigallocatechin gallete-EGCG) போன்ற பொருட்கள் உள்ளன. இவைகள் பச்சை தேயிலையின் மருத்துவ குணங்களுக்கு காரணங்கள் ஆகும்.

பச்சை தேயிலை தூள் உற்பத்தி - ஓர் அறிமுகம்




பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை
சாகுபடிக்கு பொருத்தமான காலநிலையும் , குறைந்த பட்ச மழையும் (114.3-127) வேண்டும். தேயிலை கடல் மட்டம் மேலே 7,218.2 அடி (2,200 மீ) வரை பயிரிடப்படுகிறது.










ஒரு ஏக்கருக்கு 681 கிலோ தேநீர் இலைகள் பறிக்க முடியும். கைகளால் பறிப்பதாக இருந்தால் ஏக்கருக்கு இரண்டு தொழிலாளர்கள் தேவைபடுவார்கள். தேயிலை செடிகள் பொதுவாக அதன் வளர்ச்சியைப் பொறுத்து ஐந்து முதல் பத்து நாட்களிள் பறிக்கலாம்.




உலர்ந்த நிலையில் பச்சை தேயிலை இலைகள்



உலர்த்துதல்
தேயிலை இலைகள் பறித்த பிறகு அவை நொதியாவதை (Ferment) தடுக்க உலர்த்தப் பட வேண்டும். இதை சரிவர செய்ய இயந்திரங்கள் வந்து விட்டன.






பச்சை தேயிலை தரம் என்பது நல்ல தரமான தேயிலை இலைகளை உபயோகிப்பதை பொருத்து இருக்கிறது. பாக்கெட்டில் அடைப்பதற்கு முன் அவை பல தரகட்டுபாடு அளவுகோளுக்கு உட்படுத்தப் படுகிறது. இறுதியாக தேயிலை தூள் அளவு, வடிவம், மற்றும் தூய்மை ஆகிய பண்புகளை கொண்டு அவை தரவரிசை படுத்த படுகின்றன.


உதாரணமாக ஜப்பனால் ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை இலைகளின் மாதிரிகள் அவற்றின் பல்வேறு பண்புகள் ஆய்வுக் உட்படுத்தபடுகின்றன. இலைகள், தண்டுகள், ஈரப்பதம், உள்ளடக்கம், நறுமணம், சுவை, மற்றும் வண்ணம் ஆகிய அனைத்தின் தரமும் ஆராயப்படுகின்றன. இந்த சோதனைகளை சரிவர கடந்தால் மட்டுமே தேயிலை தூள்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப் படுகிறது.




பச்சை தேநீரை தொடர்ந்து அருந்துவதனால் ஏற்படும் நன்மைகள்




புற்றுநோய் உருவாக்கூடிய செல்களின் வளர்ச்சியை (ஆரோக்கியமான திசுக்களுக்கு பாதிப்பும் இல்லாமல்)தடுக்க உதவுகிறது.


எல்.டி.எல்(LDL)கொழுப்பின் அளவை குறைக்கும் திறன் நிறைந்தது.


இரத்த கட்டிகளை (blood clots) உருவாகுவதை குறைக்கிறது.


இரத்த உறைவு (இரத்த கட்டிகளுடன் உருவாக்கம்) குறைக்கபடுவதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் நிகழ்வுகள் பெருமளவு சரிகிறது.


உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


பாக்டீரியா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் அழிக்கின்றது.


சர்க்கரை நோயை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.


வாய் துற்நாற்றத்ததை தடுக்கிறது.


மாச்சா (macha) வகையை சேர்ந்த பச்சை தேயிலையில் உள்ள முக்கியமான வைட்டமின்கள் (சி, பி,இ), ஃப்ளோரைடு (பல் சொத்தையை தடுக்கிறது), அமினோ அமிலங்கள் (இரத்த அழுத்தத்தை குறைக்க), மற்றும் பாலிசாக்கரைடுகள் (இரத்ததில் சர்க்கரையின் அளவை குறைக்க) பயன் படுகிறது.


மேலும் இதில் epigallocatechin gallate (EGCG) உள்ளதால் நல்ல ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidant) ஆகவும் செயலாற்றுகிறது. இது புற்றுநோயை எதிர்க்கும் தன்மையை தருகிறது.


மனதின் உற்சாகத்தை அதிகரிக்கரிக்கிறது.


மன அழுத்தம் ஏற்பட கூடிய ஹார்மோன் அளவுகளை குறைக்கிறது.


எச் ஐ வி நோயாளிகளிள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.


பார்க்கின்சன் நோய் மற்றும் குறுகிய கால மறதி ஆகியவற்றை குறைக்க பயன்படுகிறது.


எலிகளில் நடந்த பரிசோதனைகளில் தடங்கலான தூக்க மூச்சின்மை (obstructive sleep apnea) தொடர்பான சிகிச்சைக்கும்….


முடக்கு வாதம் சிகிச்சைக்காகவும்


உடல் எடையை குறைக்கவும் என இவற்றின் பயன்பாடுகள் நீள்கின்றன.


பச்சை தேயிலையின் நன்மைகளினால் ஈர்க்கப் பட்டதால் தான் என்னவோ அவற்றில் கிரீம்களிள் இருந்து deodorant வரை சந்தையில் வர தொடங்கி உள்ளன.


என்ன நண்பர்களே....... பச்சை தேநீரை பருக கிளம்பி விட்டீர்களா....!!

1 கருத்து: