செல்லுமிடமெல்லாம் 'செல்' ---மதுக்கூர் இராமலிங்கம்
எங்கள் ஊரில் ஒருவருக்கு அடைக்கோழி என்று பட்டப் பெயர். வேட்டி கட்டுகிற வயசு வந்தபிறகும் கூட அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டே அலைந்தததால் இந்த நாமகரணம் சூட்டப்பட்டது. ஆனால் கோழி அப்படி குஞ்சுகளை அழைத்துக்கொண்டு திரிவதில்லை. குஞ்சுகள் தனியாக இரைதேடும் காலம் வந்தவுடன் தாய் கோழி குஞ்சுகளை கொத்தி விரட்டிவிடும். அடைக்கோழி என்று அடைமொழி பெற்ற அவர் திருமணம் ஆன பிறகு அவருடைய மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்ற ஆரம்பித்துவிட்டார் என்பது தனிக்கதை.
கோழி முட்டைகளின் மேல் உட்கார்ந்து அடைகாக்கும்போது அதன் முகத்தைப் பார்த்தால் ஒரு முனிவர் களை சொட்டும். தர்மயோகம், ஞானயோகம் என்று கதைப்பவர்கள் அடைக்கோழியைப் பார்த்தால் வெட்கப்படுவார்கள். அப்படி ஒரு கர்மசிரத்தை ஞானயோகம். பெரும்பாலும் அடைக்கோழி மதிய நேரங்களில்தான் இரைதேடச் செல்லும். அப்போது கூட அடைமுட்டைகள் இருக்குமிடத்தை விட்டு ரொம்பதூரம் சென்றுவிடாது. ஒரு பரப்பரப்போடும், பதட்டத்தோடும் ஏதாவது கிடைக்கிறதா என்று அலையும். சந்தேகத்திற்கு இடமாக சிறு ஒலி கேட்டால் கூட கெக்கே கெக்கக்கே என்று கத்தியபடி முட்டையில் வந்து அமர்ந்துவிடும். பெரும்பாலும் அரைப்பட்டினியாகத்தான் கிடக்கும்.
கோழி அடைகாத்த இடத்தில் ஒருவகையான செல் மொய்க்கும். பெரும்போக்காகப் பார்த்தால் கண்ணுக்குத் தெரியாது. உன்னிப்பாகப் பார்த்தால் மாவு போல வெள்ளையாகத் தெரியும். தப்பித்தவறி அதில் கைவைத்துவிட்டால் மொழு மொழுவென்று உடம்பு முழுவதும் ஏறிவிடும். பத்துமுறை குளித்தால் கூட உடம்பில் ஏதோ மொய்த்துக்கொண்டிருப்பது போலவே இருக்கும்.
செல்போனுக்கு செல் என்று பெயர் வந்ததற்கு கோழிச்செல் ஏதாவது ஒரு வகையில் காரணமா என்பதை மொழி அறிஞர்கள் ஆய்ந்து சொன்னால் நல்லது. கோழிச்செல் எப்படி பிடித்துக்கொண்டால் விடுவதில்லையோ அது போல இந்தச் செல்லும் பிடித்தால் விடுவதில்லை.
பெரிய பெரிய நிறுவனங்கள் சிக்கன்65 சாப்பிட மக்கள் செல் மொய்க்க அடைகாக்கிறார்கள். . செல்போன் பேசுபவர்களின் வாய் மொழியை மட்டுமின்றி உடல் மொழியையும் கவனித்தால் நாடகப்பாங்குடன் இருக்கும். தரைவழிப் பேசியில் ரிசீவரை வைத்த ஞாபகத்தில் இன்னமும் கூட செல்போனிலும் அப்ப வெச்சிரட்டுமா என்று கேட்டுக்கொண்டிருப்போர் பலர்.
அலுவலக வாசலில் ஒரு இளைஞனை நான் அன்றாடம் சந்திப்பேன். அவருடைய முகவரி என்ன? ரேசன் கார்டு உண்டா? என்பதெல்லாம் கிடையாது. ஆனால் எப்போதும் செல்போனில் பேசியபடியேதான் இருப்பார். அவர் என்ன பேசுகிறார் என்று பக்கத்தில் சிபிஐ அதிகாரி இருந்தால்கூட கண்டுபிடிக்க முடியாது. சிபிஐ அதிகாரிகள் அதைத்தான் கண்டுபிடித்தார்கள் நீங்கள் அலுத்துக்கொள்வது தெரிகிறது.
எதிர்முனையில் இருப்பவர் இவர் என்ன பேசுகிறார் என்பதை எப்படித்தெரிந்துகொள்வார் என்று தெரியவில்லை. பார்வையற்றவர்கள் பயன்டுத்தும் பிரெய்லி மொழி போல ஒலியே இல்லாத புதுவகையான மொழி எதையும் கண்டுபிடித்திருக்கிறார்களோ என்னமோ தெரியவில்லை.
ஒரு இடத்தில் அமர்ந்து அவர் பேசமாட்டார். ஐந்தாறு இடம் மாறி மாறி உட்காருவார். ஆனால் ஒரு முறை உட்கார்ந்துவிட்டால் அந்த இடத்தை விட்டு எழுந்திரிக்க குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும். இதற்கென ஏதாவது கால அட்டவனை இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.
அந்தக்காலத்து தசாவதானி, அஷ்டாவதனிகள் போல ஒரு செல்லில் பேசிக்கொண்டே மறு செல்லில் வந்த குறுஞ்செய்திகளை படிப்பது, அதற்கு பதில் அனுப்புவது என்று எப்போதும் கண், காது, கை என எல்லா உறுப்புகளுக்கும் வேலை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்.
நீராராடியா பேசியதை டேப் செய்தது போல இந்த வாலிபர் பேசுவதையும் டேப் செய்தால் ஏதாவது பரபரப்பான செய்தி கிடைக்குமோ என்னவோ தெரியவில்லை.
எதிர்காலத்தில் செல்போன் தனியாக இருக்காது. எல்லோர் தலையிலும் ஒரு ஆன்டெனாவை தனியார் கம்பெனியிலும் பொருத்திவிடுவார்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் தம்பி பூபாளம் பிரகதீஸ்வரன் சொன்னார்.
கபால ஆன்டெனா ஊழல் என்று அதிலும் பெருந்தொகை சுருட்டப்படக்கூடும்.
பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக