கொல்லி மலை குள்ளன்!
''கொல்லி மலைக் குள்ளன்... அலாவுதீனின் அற்புத விளக்குபோல எல்லா மாயங்களையும் நடத்திக்காட்டுவான்.காட்டுக்குள்இருக்கும் அவ னைப் பிடிப்பவர்கள் அதிர்ஷ்டசாலி!'' - இப்படி ஒரு தகவல் நீண்ட நாட்களாகவேகொல்லிமலைப் பக்கம் உலவுகிறது!
இதை நம்பிக் கொல்லி மலைக்கு வரும்கூட் டமும் அதிகம். ''காட்டுக்குள்ள இருக்கிற அவனை வீட்டுக்குக் கொண்டுவந்துட்டா பணம் குவியும்னு சொன்னாங்க. அவனை வாங்கலாம்னு வந்தா, அலையவிட்டாங்களே தவிர, வேலை ஆகலை'' என்று நொந்து கொள்கிறார் ஏமாந்த ஆசாமி ஒருவர்!
விபரமான உள்ளூர் ஆசாமியோ, ''இங்க 30 வருஷமா இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு, எந்தக் குள்ள மனுசனும் இங்க கிடையாது. ஆனா, காலம் காலமா மர்மங்கள் உலவுற மலை இது. சில வருஷத்துக்குமுன் னாடி, சிலர் மோகினிப் பேயை செல்போன்ல படம் எடுத்ததாப் பரபரப்பு கிளம்புச்சு. இங்கே சித்தர்கள் நடமாட்டம் இருக்குங்கிறது மட்டும் உண்மை. ஆனா, அதுக்கும் ஆதாரம் இல்லை. இந்த மலையில் அதிசய மூலிகை கள் நிறைய இருக்கு. ராத்திரி நேரத்துல சில மூலிகைகள் ஒளிரும். அதைப் பார்த்துதான் மோகினிப் பிசாசுன்னு கிளப்பிவிடுறாங்க'' என்கிறார்!
- கே.ராஜாதிருவேங்கடம்
படம்: எம்.விஜயகுமார்
ஆஹா, அன்னலட்சுமி!
கோவை பி.என். புதூர், மருதமலை ரோட்டில் இருக்கிறது ஹோட்டல் அன்னலட்சுமி. சாப்பிட்டுவிட்டு கையில் காசு இருந்தால், கொடுக்கலாம். இல்லை என்றாலும், கேட்க மாட்டார்கள். சாதம், நெய், பொடி, சாம் பார், வத்தக் குழம்பு, கூட்டு, பொரியல், கீரை, தயிர், ஸ்வீட், ரசம், ஊறுகாய் எனக் களை கட்டுகிறது விருந்து. கோவையின் பிரபலமருத்துவர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள் பலரும் இந்த ஹோட்டலுக்கு நிதியுதவி செய்கிறார்கள்.
இதன் மேலாளர் டி.ஆர்.சுந்தரம், ''15 வருடங்களுக்கு முன்பு சுவாமி சாந்தானந்த சரஸ்வதி இந்த ஹோட்டலை ஆரம்பித்தார். சேவை நோக்கில் தன்னால் இயன்றவரை பொருள் உதவி பெற்று சமைத்துப்போட்டார். அதுதான் இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ளது. வசதி இருப்பவர்கள், கல்லாவில் பணத்தைப் போடுவார்கள். ஆயிரக் கணக்கில் போடுபவர்களும் உண்டு. வெற்றுக் காசோலையைக் கொடுத்து, வேண்டும் அளவுக்கு நிரப்பிக்கொள்ளச் சொல்லும் நல்ல மனிதர்களும் உண்டு'' என்கிறார். இந்த ஹோட்டலுக்கு சென்னை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் கிளைகள் உண்டு!
பா.விஜயசந்தர், படம்:வே.பாலாஜி
மரத்து மேல வீடு!
மரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் பறவைகளின் கூடு களைப் பார்த்து நாமும் ஒருநாள் இந்தக் கூட்டுக்குள் வசித்தால் எப்படி இருக்கும் என ஆசைப்பட்டு இருக்கிறீர்களா? டாப் ஸ்லிப் காட்டுக்குள் நிஜமாகவே மரத்தின் மீது அப்படி ஒரு வீட்டைக் கட்டி இருக்கிறார்கள்!
பொள்ளாச்சியில் இருந்து பரம்பிக்குளம் செல்லும் மலைப் பாதையில் இருக் கிறது டாப் ஸ்லிப். இங்கு அடர்ந்த வனப் பகுதியில் பிரமாண்டமான தேக்கு மரத்தின் மீது, மூங்கில்க ளால் வேயப்பட்ட மர வீடு இருக்கிறது. மூன்று அறை கள், அட்டாச்டு பாத்ரூம், அருமையான பால்கனி என சகல வசதிகளும் உண்டு. பால்கனியில் இருந்து பார்த்தால், கண் ணுக்கு எட்டும் தூரத்தில் மான்கள் துள்ளும். சமயத் தில் காட்டு எருமை, கரடி போன்ற வன விலங்கு களையும் பார்க்க முடியு மாம். இங்கு தங்குவதற்கு பொள்ளாச்சியில் இருக்கும் இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயத்தில் முன் பதிவு செய்ய வேண்டும். ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் தூக்கிவைத்துவிட்டு, ஒருநாள் இங்கு தங்கிவிட்டுச் சென்றால் போதும். ஒரு ஆண்டுக்கு உங்களை ரீ-சார்ஜ் செய்ததற்கு சமம்!
- கே.ராஜாதிருவேங்கடம், படம்: தி.விஜய்
மூங்கில் டிபன் பாக்ஸ்!
கிராமப் புறங்களில் வயல் வேலைக்கும் மேய்ச்சலுக்கும் செல்வோர் முன்பு எல்லாம் உணவை சுரைக் குடுவை அல்லது மூங்கில் குடுவையில் எடுத்துச் செல்வார் கள். ஆனால், எவர்சில்வர் வருகைக்குப் பின் அது பழங்கதை ஆகிவிட்டது. ஆனால், இன்றும் தர்மபுரி மாவட்டக் கிராமங்களில் சிலர் மூங்கில் குடுவையில்தான் உணவு எடுத்துச் செல்கின்றனர்.
அரூர் அருகே வகுத்துப்பட்டி கிராமத்தில் மூங்கில் குடுவையுடன் சென்றுகொண்டு இருந்த மாதுவிடம் பேசினோம். ''வெள்ளாடு மேய்ச்சலுக்குப் போறேன். எங்க தாத்தா காலத்துல இருந்தே மூங்கில் குடுவையில சோறு சாப்பிட்டாத்தான் வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும். அலுமினியப் பாத்திரம், பிளாஸ்டிக் டப்பாவுலயும் சில நேரம் சோறு கொண்டுபோய் இருக்கேன். வெயில் தாங்காம சாப்பாடு கெட்டுப்போயிடுது! களி, கம்பஞ்சோறு அல்லது அரிசி சோத்தை மோருடன் பிசைஞ்சு இந்தக் குடுவையில் அடைச்சுடுவேன். ஒருநாள் முழுசா கெட்டுப் போகாது; ருசியும் அருமையா இருக்கும்'' என்கிறார் மாது!
- எஸ்.ராஜாசெல்லம்
சிரிக்கும் சிற்பம்!
பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் வெகு பிரபலம். இங்கு வேதநாயகி அம்மன் இருக்கும் வசந்த மண்டபத் தின் முற்றத்தில் இருக்கிறது சிரிக்கும் பெண் சிற்பம். இந்த சிற் பத்தின் தலையில் இருந்து பவானி ஆற்றுத் தண்ணீரை ஊற்றினால் சிற்பம் சிரிப்பதைப்போலத் தோற்றம் அளிக்குமாம். அப்படி சிரிக்கும்போது, வேண்டுதலை சிற்பத்திடம் சொன்னால், அது கட்டாயமாக நிறைவேறும் என்று நம்புகிறார்கள் பக்தர்கள். இதனால் சிற்பத்தைக் குளிப்பாட்ட ஏகப்பட்ட போட்டி!
பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக