எதிர்வரும் மே மாதம் 6-ம் தேதி அட்சயதிருதியை... கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக கொண்டாடப்பட்டு வரும் இந்த பண்டிகையின்போது ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்கினால்தான் ஆச்சு என மக்கள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். இந்த தங்க ஜுரம், தேர்தல் ரிசல்ட் ஜுரத்தையும் தாண்டி நிற்க, கடந்த ஒரு மாத காலமாகவே தங்கம், வெள்ளி விலை ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருக்கிறது. வருகிற அட்சயதிருதியைக்குள் பத்து கிராம் தங்கம் விலை 25,000 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 75,000 ரூபாய்க்கும் போய்விடும் என்று அடித்துச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்த வட இந்திய தங்க, வெள்ளி வியாபாரிகள்.
அசத்தல் லாபம்!
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரக் காரணம், கடந்த சில ஆண்டுகளில் அது கொடுத்த அசத்தல் லாபம்தான். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி பத்து கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 21,830 ரூபாய். ஆனால், ஓராண்டுக்கு முன்பு, அதாவது 2010, ஏப்ரல் 1-ம் தேதி அன்று அதே பத்து கிராம் தங்கத்தின் விலை 16,302 ரூபாய்தான். 2008, ஆகஸ்ட் முடிவில் 11,852 ரூபாய் மட்டுமே. இரண்டரை ஆண்டுக்குள் தங்கத்தில் போட்ட முதலீடு ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது ஆச்சரியம்தான். கடந்த மூன்றாண்டு காலத்தில் வேறு எதிலும் இந்த லாபம் கிடைக்கவில்லை என்பது முக்கியமான விஷயம்.
தங்கம்தான் இப்படி தகதகவென லாபம் கொடுத்தது என்றால் வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு லாபம் தந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை 67,750 ரூபாய். ஆனால், 2010 ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று அதே ஒரு கிலோ வெள்ளி விலை 26,905 ரூபாய்தான். 2008, ஆகஸ்ட் முடிவில் 20,223 ரூபாய் மட்டுமே. தங்கம் இரண்டு மடங்காகி பெருகி லாபம் கொடுத்தது என்றால் வெள்ளி மூன்றரை மடங்கு பெருகி, முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்தது!
டாலர்தான் காரணமா?
''தங்கம் விலை கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி 20,700 ரூபாய்தான். ஆனால், இன்று 21,830 ரூபாய். கடந்த மூன்றாண்டுகளில் தங்கம் இந்த அளவுக்கு வேகமாக உயர்ந்ததே இல்லை. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் 2008 ஜூன் மாத வாக்கில் 71.89 வரை சென்றது. பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, 2009 மார்ச்சில் 89 புள்ளி வரை சென்றது. 2009 அக்டோபரில் மீண்டும் இறங்கி 74 புள்ளி வரை வந்தது. 2010 ஜூலையில் மீண்டும் உயர்ந்து 88 புள்ளிகள் வரை சென்றது. ஆனால், அதற்கு மேல் செல்லாமல் தொடர்ந்து கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறது. இப்போது 74 புள்ளிகள் என்கிற அளவில் இருக்கிறது. டாலர் மதிப்பு தொடர்ந்து குறைவதால் அதை கையில் வைத்திருப்பதைவிட தங்கமாக வாங்கி விட்டனர் வெளிநாட்டு மக்கள்'' என்கிறார் சென்னையின் பிரபல ஜூவல்லரி கடையின் ஓனர் ஒருவர்.
இன்னும் உயருமா?
கடந்த மூன்றாண்டுகளில் தங்கம், வெள்ளியை குண்டுமணி அளவுக்குக்கூட வாங்காதவர்கள் தற்போது கடன் வாங்கியாவது அதை வாங்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். இதன் காரணமாக அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது. ''வருகிற அட்சயதிருதியைக்குள் பத்து கிராம் தங்கம் 25,000 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 75,000 ரூபாயையும் தாண்டிவிடும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. தங்கமும் வெள்ளியும் கடந்த சில மாதங்களில் அடைந்த வளர்ச்சியைப் பார்க்கும் போது நாங்கள் சொல்லும் விலை நிச்சயம் அடைய வாய்ப்புண்டு'' என்கிறார்கள் தங்க, வெள்ளி வியாபாரிகள்.
தங்கமா? வெள்ளியா?
கடந்த ஆண்டுகளில் தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்திருக்கிறது. இனி தங்கம் வாங்கினால் லாபம் கிடைக்குமா? அல்லது வெள்ளி வாங்கினால் லாபம் கிடைக்குமா? என்று பலர் கேட்கும் கேள்விகளை தங்க வியாபாரி களிடம் கேட்டோம். தங்கம் வாங்கலாம் என்பதற்கு சிலரும் வெள்ளி வாங்கலாம் என்பதற்கு சிலரும் பரிந்துரை செய்தார்கள். முதலில் தங்கத்திற்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்கள்.
''உலக அளவில் மிகக் குறைவாக தங்கம் இருக்கிறது. இதில் பெரும்பகுதியை உலகில் உள்ள பல வங்கிகள் வாங்கி வைத்திருக்கின்றன. என்ன கஷ்டம் வந்தாலும் இந்த வங்கிகள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்கப் போவதில்லை. சமீபத்தில் ஜப்பானில் சுனாமி வந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டபோதும் அந்நாடு ஒரு கிராம் தங்கத்தைக்கூட விற்கவில்லை. எனவே, எதிர்வரும் நாட்களில் தங்கம் விலை கொஞ்சம் குறைந்தாலும் பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை. ஆனால், விலை இன்னும் உயரவே வாய்ப் பிருக்கிறது'' என்கிறார்கள் தங்க ஆதரவாளர்கள்.
நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்கிற மாதிரி கருத்து சொல்கிறார்கள் வெள்ளிக்கு ஆதரவாக பேசுகிறவர்கள். ''தங்கம் என்பது வெறும் ஆடம்பரம்தான். ஆனால், வெள்ளிக்கு தொழில் துறை பயன்பாடு உண்டு. அடுத்துவரும் காலங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் வெள்ளி விலையும் நிச்சயம் உயரும்'' என்கிறார்கள்.
கவனம்! விலை இறங்கலாம்!
தங்கம், வெள்ளி கடந்த மூன்று ஆண்டுகளில் அளவுக்கதிகமான லாபத்தைக் கொடுத்தாலும் அதேபோன்ற லாபத்தை அடுத்து வரும் ஆண்டுகளிலும் கொடுக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று எச்சரிக்கிறார்கள் சிலர். ''உலக அளவில் கமாடிட்டி விலைகள் பாரதூரமாக உயர பல காரணங்கள் இருந்தன. இக்காரணங்கள் தொடர்ந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. தவிர, நல்ல லாபம் பார்த்தவர்கள் அதை விற்கவும் முயற்சி செய்வார்கள். அப்போது தங்கம், வெள்ளி விலை குறையும். தவிர, வெள்ளி விலை கடந்த சில மாதங்களில் உயர்ந்த விதத்தை பார்த்தால் 1970-களில் நடந்ததுபோல நடக்கிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது.
முன்பொரு காலத்தில் அமெரிக்காவில் ஹண்ட் பிரதர்ஸ் என்கிற இருவர் வெள்ளி விலையை திட்டமிட்டு உச்சத்துக்கு கொண்டு போனார்கள். ஒரு அவுன்ஸ் வெள்ளி 50 டாலருக்கு போனது. பிற்பாடு திடீரென குறைந்து 6 டாலருக்கு வந்தது. அதேமாதிரி இப்போது ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் இப்போதுள்ள விலையில் தங்கத்தையோ, வெள்ளியையோ அதிக அளவில் வாங்காமல் இருப்பதே நல்லது'' என்றார் ஒருவர்.
எதற்கும் உஷாராக இருப்பது நல்லதுதானே!
எஸ்.ஐ.பி-யில் தங்கம் சேருங்க!
கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம்.சி.எக்ஸ். 'கோல்ட் பெட்டல்’ என்கிற புதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான கான்ட்ராக்ட்டில் 3.25 கோடி ரூபாய்க்கு டேர்ன் ஓவர் ஆகி, அன்று ஒரு தினம் மட்டுமே 14,718 கிராம் மதிப்பிலான தங்கம் வர்த்தகம் ஆகியுள்ளது. டீமேட் வடிவத்தில் வாங்கி வைத்திருக்கும் தங்கத்தை பிஸிக்கல் தங்கமாகவும் வாங்கலாம். டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரூ, கொல்கத்தா, சென்னை ஆகிய ஆறு இடங்களில் டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். இதனை 8, 16, 24 கிராம் என தங்கக் காசுகளாக டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 10 கிலோ வரை 'கோல்டு பெட்டல்’ மூலம் தங்கத்தை சேர்த்து வாங்கலாம். எஸ்.ஐ.பி. முறையிலும் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு!
பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
அருமையான கட்டுரை.தலைப்பு தங்கம் 25000 வெள்ளி 75000 என்று இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குபாஸ்கரன்
http://www.thangavarthagam.in