பிரபலமான இடுகைகள்
-
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்...
-
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில் எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் சாப்பிட வேண்டும். நொந்து போன வயிறும் குட லு...
-
உடலுறவினால் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது ‘எய்ட்ஸ்'’ நோயாகும். 1980ம் ஆண்டின் பிற்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த மிக முக...
-
காளான்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. அகாரிகஸ் கேம்பஸ் டிரிஸ், பிளாமுளினா வேலுடிபெஸ், லெண்டினஸ் எடோடஸ், கார்ட்டி னெல்லெஸ் ஷிட் டேக், க ல்வே...
-
* மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. * ஒரு...
-
நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந...
-
வத்தல் குழம்பில் தொடங்கி ஊறுகாய் மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி என பல வகையான உணவுகளில் வெந்தயம் பய ன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல...
-
''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங...
-
நம் உடலில் உள்ள திசுக்கள் செயல்படும்போது ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் வெளியேறுகிறது... இந்த திரவம் அதிகமாக வெளியேறினால் பல நோய்கள் வந்துவிட...
-
'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்கால...
ஞாயிறு, 23 டிசம்பர், 2012
நமக்குள்ளே....
சமீபத்தில், உலகத்தையே கலங்கடித்த விஷயம்... ஜெசிந்தாவின் தற்கொலை!
மங்களூரைச் சேர்ந்த ஜெசிந்தா... லண்டன், கிங் எட்வர்ட் மருத்துவமனையின் நர்ஸ். இளவரசர் சார்லஸின் மருமகள் கேட் வில்லியம், அங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையின் தொலைபேசி ஒலிக்கிறது. 'சார்லஸ் மற்றும் ராணி எலிசபெத் பேசுகிறோம்' என்றபடி ஆண், பெண் குரல்கள் அதில் ஒலிக்க... ஆடிப்போன ஜெசிந்தா... இணைப்பை இன்னொரு நர்ஸுக்கு மாற்றுகிறார்.
அதன் பிறகு, 'இளவரசர் சார்லஸ் மற்றும் ராணி போல மருத்துவமனைக்கு சாமர்த்தியமாகப் பேசி, அரசாங்க ரகசியத்தைக் கறந்துவிட்டோம்' என்றபடி மருத்துவமனை உரையாடல், ஆஸ்திரேலிய நாட்டின் எஃப்.எம் ரேடியோ ஒன்றில் ஒலிக்க... உலக அளவில் ஏகபரபரப்பு! 'அரச குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டோமே' என்கிற குற்ற உணர்ச்சி வாட்டியெடுக்க... உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டார் ஜெசிந்தா.
பிரபலங்களைப் போல் குரலை மாற்றிப் பேசி, தொலைபேசி மூலமாக பிறரை ஏமாற்றுவதை நகைச்சுவை நிகழ்ச்சியாக செய்துவரும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், 'எங்கள் விளையாட்டால், ஓர் அப்பாவியின் உயிர் பறிபோய் விட்டதே என்கிற குற்றவுணர்ச்சி, ஒவ்வொரு நாளும் எங்களை வாட்டி எடுக்கிறது' என்று கண்ணீர் பேட்டி கொடுக்கிறார்கள் இப்போது.
'அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு' என்பதை இச்சமூகத்துக்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்ட... இரண்டு குழந்தைகளின் தாயான 46 வயது ஜெசிந்தாவின் உயிர் பறிபோனதுதான் கொடுமை.
'நகைச்சுவை' என்கிற பெயரில் இங்கேயும்கூட தொலைக்காட்சிகளில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில், வெளிநாடுகளை ஒப்பிடும்போது... இங்கே 'எல்லை தாண்டிய பயங்கரவாதம்' என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்து டெரர் கிளப்புவது... காதில் 'ஊய்ய்' என்று சத்தமிடுவது... என 'டீஸிங்' செய்துவிட்டு, கடைசியில் 'கிஃப்ட்' என்று எதையாவது கையில் திணிக்கிறார்கள்! அந்த நேரத்தில் 'தேமே' என்று டி.வி-க்கு போஸ் கொடுத்தாலும், நாலு பேருக்கு மத்தியில் பட்ட அவமானம்... திரையில் பார்த்த பிறகு, பலரிடம் இருந்தும் பாயும் கேலிப் பார்வை என்று எத்தனை எத்தனை மன உளைச்சல்கள்?
மற்றவர்களை கேலிப்பொருளாக்கி, ஊரை சிரிக்க வைப்பதற்கு இவர்களுக்கு யார் உரிமையைக் கொடுத்தது?!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக