பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

ஜம்முனு எடையைக் குறைக்கும் ஜி.எம்.டயட் !

'உடம்பை எப்படிக் குறைப்பது..?’ - இன்று பாதி மக்கள் தொகையின் கேள்வி இதுவாகத்தான் இருக்கிறது. 'ஸ்லிம் பாடி’க்கு ஆசைப்படுபவர்கள் தேர்ந் தெடுக்கும் முதல் வழி... டயட். அதிலும், 'அடுத்த வாரம் ஒரு ஃபங்ஷன்... அதுக்குள்ள வெயிட்டைக் குறைக்கணுமே’ என்று நகம் கடிப்பவர்களுக்கு சூப்பர் சாய்ஸ், ஜி.எம். டயட்! அதென்ன ஜி.எம். டயட்? கார்கள் மற்றும் மோட்டார் பாகங்கள் தயாரிப்பில் 'நம்பர் ஒன்’ நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், தன் ஊழியர்களுக்காகக் கொண்டு வந்த டயட் சார்ட்தான், 'ஜி.எம். டயட்’. அமெரிக்காவில் உள்ள 'அக்ரிகல்ச்சர் அண்ட் ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன்’ டிபார்ட்மென்ட் (Agriculture and food and drug administration),இந்த ஃபுட் சார்ட்டை அங்கீகரித்திருக்கிறது! 'ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம்' என இதன் ரிசல்ட் ஆச்சர்யப்படுத்தும் அளவில் இருக்கவே, ஜி.எம். நிறுவன ஊழியர்களைத் தாண்டி, உலகெங்கும் ஹிட் அடித்திருக்கிறது இந்த டயட். சினிமா ஸ்டார்கள் தொடங்கி, சாதாரண மக்கள் வரை ரீச் ஆகியுள்ள இந்த டயட், ஏழு நாட்களுக்கான ஃபுட் பிளான் பற்றி சொல்கிறது. நோய் உள்ளிட்ட எந்த உடற்பிரச்னைகளும் இல்லாதவர்கள், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இந்த ஜி.எம். டயட் சார்ட்டை ஃபாலோ செய்தால், எட்டாவது நாளில் நல்ல ரிசல்ட்டைக் காணலாம். இந்த டயட்டை எடுத்துக் கொள்ளும்போது, அதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கும் அளவு களைத் தவிர்த்து மற்றவற்றை வயிறு கொள்ளும் அளவுக்கு சாப்பிடலாம். கூடவே, தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம் என்பதை மனதில் கொள்ளவும். ஜி.எம். சார்ட்படி ஒரு வாரம் டயட் முடித்து, எட்டாவது நாள் எடையை செக் செய்தால், நிச்சயம் நாலைந்து கிலோ குறைந்திருக்கும் என்பதுதான் இதை உருவாக்கியவர்கள் தரும் உத்தரவாதம். அப்படி எடையைக் குறைத்த பெங்களூருவை சேர்ந்த மாலினி, இங்கே தன் அனுபவம் சொல்கிறார்... ''நான் அசிஸ்டென்ட் அக்கவுன்டன்டா... ஆடிட் ஆபீஸ்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். உடம்பைக் கவனிக்க நேரமே இருக்காது. 59 கிலோ வெயிட்ல இருந்த எனக்கு, சென்னையில இருக்கிற என் பெரியம்மா பையன்தான் ஜி.எம். டயட் பத்தி சொன்னான். அவன் அதை ஏற்கெனவே வொர்க் அவுட் செய்து, நல்லா மெலிஞ்சிருந்ததால, நானும் என் கணவரும் நெட்ல அதைப் பத்தின தகவல்களைத் தேடித் தெரிஞ்சுக்கிட்டு, நம்பிக்கையோட அதுல இறங்கினோம். முதல் ரெண்டு நாள் சுலபமா ஓடிருச்சு. மூணாவது நாள்ல இருந்து பசியெடுக்க ஆரம்பிக்க, ரொம்ப டயர்டாவும் இருந்தது. அஞ்சாவது நாள்... 'டயட்டை நிறுத்திடுவோம்'ங்கிற நிலைமைக்கு வந்துட்டேன். ஆனா... அந்தா, இந்தானு மனசை இழுத்துப் பிடிச்சு டயட்டை முடிச்சுட்டேன். எட்டாவது நாள் மூணு கிலோ குறைஞ்சுருந்தேன். என் கணவர் அஞ்சு கிலோ குறைஞ்சுருந்தார். இவ்வளவு எஃபெக்டிவ்வான ஒரு டயட்டை நான் பார்த்ததில்லை'' என்கிறார் சந்தோஷமாக மாலினி. சென்னையைச் சேர்ந்த 'ஸ்போர்ட்ஸ் டயட்டீஷியன்' மற்றும் ராமச்சந்திரா மெடிக்கல் யுனிவர்ஸிட்டியின் லெக்சரருமான ஷைனி சந்திரனிடம் ஜி.எம். டயட் பற்றிக் கேட்டபோது, ''இதை மிஞ்சிய பல டயட் சார்ட்டுகள் வந்துவிட்டன. ஆனாலும், 'அடுத்த வாரம் ஒரு முக்கியமான ஃபங்ஷன் வருது... வெயிட் குறைக்கணும்...’ என்கிற அவசரத்தில் இருப்பவர்களுக்கு, ஜி.எம். டயட் கை கொடுக்கும். என்றாலும் ஒரு டயட்டீஷியனின் மேற்பார்வையில்தான் இதை பலரும் வொர்க் அவுட் செய்கிறார்கள். சுயமாக முயற்சிகள் எடுக்கும்போது, பல பிரச்னைகள் வரலாம். உதாரணத்துக்கு, ஒருவருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவை என்றால், ஜி.எம் டயட்டை ஃபாலோ செய்யும்போது 1,200 கலோரிகள் மட்டுமே கிடைக்கும். இதை தொடர்ந்து ஃபாலோ செய்யும்போது அனீமியா, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் என பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். எப்போதும் படிப்படியா உடம்பைக் குறைப்பதுதான் சரி. நான் பரிந்துரைக்கும் இந்த சமச்சீரான உணவு சார்ட்டுடன் உடற்பயிற்சியும் செய்தாலே உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள லாம்'' என்றபடியே ஃபுட் சார்ட் தந்த ஷைனி, ''நான் தந்த சார்ட்டை 20 - 40 வயது வரையுள்ள, எந்த உடல் பிரச்னைகளும் இல்லாதவர்கள் மேற்கொள்ளலாம். இதனுடன், ஒரு ஃபிசியோதெரபிஸ்ட்டின் வழிகாட்டுதலுடன் கட்டாயமாக உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். எடை குறைவுக்கு நிச்சயமாக உத்தரவாதம் உண்டு! கூடவே, இரவு சரியாகப் பத்து மணிக்கு உறங்கி, காலையில் ஆறு மணிக்கு எழும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டாலே... நோய்கள் அண்டாது'' என்று நம்பிக்கை கொடுத்தார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக