பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

கட்டா பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம், இஞ்சி - பூண்டு விழுது - தலா கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கட்டா செய்ய: தக்காளி (விழுதாக அரைக்கவும்) - 4, கடலை மாவு - அரை கப், மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தக்காளி விழுது, கடலை மாவு, மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் விட்டு கலந்து பிசைந்து, கயிறு போல நீளவாட்டில் கனமாக உருட்டவும். 2 இஞ்ச் நீள துண்டுகளாக வெட்டவும்.

அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பின்னர் உப்பு சேர்த்து உதிராக சாதம் வடிக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, உருட்டி வைத்துள்ள கட்டாக்களை போட்டு, மிதமான தீயில் வேகவிட்டு, தண்ணீர் வடித்து எடுக்கவும். கட்டாக்களை சிறு சிறு துண்டுகளாக 'கட்’ செய்து ஆற விடவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும், கடுகு, சீரகம் தாளித்து... இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலந்து, நறுக்கிய கட்டாக்களை போட்டு புரட்டவும். அதில் சாதத்தை போட்டு கரண்டியால் லேசாக கலக்கவும். 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.

1 கருத்து:

  1. I’m extremely impressed with your writing skills as well
    Either way keep up the excellent quality writing, it is rare to see a nice blog like this one today.
    Thanks for sharinhg!
    bigasoft-video-downloader-pro-crack

    பதிலளிநீக்கு