பிரபலமான இடுகைகள்

வியாழன், 30 டிசம்பர், 2010

ஜெரால்டு செலன்ட் - Gerald Celente - கருநாக்கு!

2012-ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என்று சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி தீயாகப்பரவியதுஅதைப் பற்றி ஒரு படம்கூட எடுத்தார்கள்ஆனால் அந்தச் செய்தி உண்மையாஇல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்அதேபோல இன்னொரு குண்டைஅமெரிக்கா மீது தூக்கிப் போட்டிருக்கிறார் ஜெரால்டு செலன்ட்(Gerald Celente) என்ற அமெரிக்கப்பொருளாதார வல்லுநர்அவர் என்ன சொன்னார் என்பதற்கு முன்பாக அவரைப் பற்றி ஒரு சிறுஅறிமுகம்...
அமெரிக்காவில் பிறந்த ஜெரால்ட், 'தி டிரெண்ட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின்நிறுவனராகவும் இயக்குநராகவும் இருக்கிறார்அவ்வப்போது நம்மூர் சாமியார்கள் மாதிரிஆருடங்களை அள்ளிவிடுவார்... கிட்டத்தட்ட யாகவா முனிவர் மாதிரிதான்! 'இனி தங்கம்தான்தங்கும்தானியம் தங்காது’ என்று யாகவா எடுத்துவிடுவதைப் போல எடுத்துவிடுவார்... ஜெரால்டுசொல்வது ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகமாகத்தான் இருக்கும்அவர் ஏதாவது சொல்லாமல்இருந்தால் அதுவே நல்லது என்று பிரார்த்திப்பவர்கள் நிறைய பேர்அந்த அளவுக்கு மனுஷனுக்குகருநாக்குஅந்த நாக்கு சுழன்று சொற்களை வீசினால் திராவகம் தெளித்த கதிதான்!
கருநாக்கு ஜெரால்ட் ஆரூடம் சொன்ன சில விஷயங்களை முதலில் பார்க்கலாம்... 1980-களின்இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சுக்குநூறாகும் என்றார்அதைப்போலவே உடைந்ததும்சுக்கு நூறல்லஆயிரம் ஆனதும் அனைவரும் அறிந்ததேஅடுத்து 1987-ம் வருடம் பங்குச்சந்தைசரியும் என்று சாபமிட்டார்அதுவும் அப்படியே ஆனதுஆசியாவில் நடந்த கரன்சி யுத்தம்சப்பிரைம் மார்ட்கேஜ் பிரச்னை என அனைத்தையும் முன்கூட்டியே சொன்ன முனிவர்(வெள்ளைக்கார!) அவர்.
இவ்வளவு பில்ட் அஃப் கொடுக்கிறீர்களேஅப்படி என்னதான் சொன்னார் என்று கேட்கிறீர்களா?இதுதான் விஷயம். ''2012-ம் ஆண்டு டிசம்பருக்குள் அமெரிக்கா இன்னொரு பொருளாதாரநெருக்கடியில் மாட்டும்அது 1929-ம் ஆண்டு கிரேட் டிப்ரஷனை விட பயங்கரமானதாகஇருக்கும்இப்போது வளர்ந்த நாடாக இருக்கும் அமெரிக்கா 2012-ல் வளர்ந்து வரும் நாடுகளின்பட்டியலில் இணைந்துவிடும்அப்போது நடக்கும் சண்டை பெரும்பாலும் உணவுக்காகத்தான்இருக்கும்வேலை இருக்காதுயாரும் வரிகட்டமாட்டார்கள்நிறைய பேர்களுக்குவேலையில்லாமல் போகப்போவதால் கலவரம் வெடிக்கும். 2012-ம் ஆண்டு கிறிஸ்மஸுக்குயாரும் கிஃப்ட் வாங்கப்போவதில்லைஅப்போது சரியான உணவு கிடைத்தால் அதுவேகிஃப்ட்தான்டாலர் தன்னுடைய மதிப்பை 90 சதவிகிதம் வரை இழக்கும்'' என்று திகிலூட்டிஇருக்கிறார் ஜெரால்டு.
மேலும் அவர், ''கடந்த 30 வருடங்களில் பணக்காரர்களுக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கும் உள்ளஇடைவெளி அதிகரித்து கொண்டே வந்திருக்கிறதுஎண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இந்தமிடில் கிளாஸ் மக்கள்தான் நாட்டில் நடக்கும் புரட்சிக்கு வினைஊக்கியாக இருப்பார்கள்அப்படிநடக்கும்பட்சத்தில் வால் ஸ்டீரிட்டில் என்ன நடக்கும் என்பது பற்றிச் சொல்லத் தேவையேஇல்லை.
இதனால் ரியல் எஸ்டேட் பாதாளத்தில் விழும்ஏற்கெனவே நிறைய பேர் வீடில்லாமல்இருக்கிறார்கள்அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது நாடு முழுவதும் டென்ட்நகரங்கள்தான் முளைக்கும்குற்றச்செயல்கள் தறிகெட்டு அதிகரிக்கும்'' என்றுசொல்லிக்கொண்டே போகிறார் ஜெரால்டு.
இதற்கு தூபம் போடுவது போல அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ்,வால்ஸ்டீரிட் ஜர்னல்சி.ன்.பி.சி., யு.எஸ்.டுடே போன்றவை ஜெரால்டுக்கு சாதகமாகவே எழுதிஇருக்கின்றனஇதற்கு ஒரு படி மேலே போய், 'நாஸ்டர்டாம்ஸ் இருந்தால் அவர் ஜெரால்டுடன்போட்டி போடுவது கஷ்டம்தான்’ என்று எழுதி இருக்கிறது நியூயார்க் போஸ்ட்.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெரி கட்டும் காலம் இதுஅமெரிக்கமார்க்கெட் டல்லடித்தால் உடனே நம்மூர் மார்க்கெட் படுத்தே விடும்இந்நிலையில் ஜெரால்டுசொன்ன விஷயங்கள் எல்லாம் நடந்தால்நம் சந்தை என்ன ஆகும் என்பதைச் சொல்லத்தேவையே இல்லைகடவுளிடமோ அல்லது இயற்கையிடமோ பிரார்த்திக்கும் போது இனிஅமெரிக்காவும் நல்லா இருக்கணும் என்று வேண்டிக்கொள்ளலாம்நம்மால் முடிந்தது அதுதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக