பிரபலமான இடுகைகள்

வியாழன், 30 டிசம்பர், 2010

எண்ண வர்ணங்கள்

சமணம் மனிதனின் மனதில் தோன்றும் அல்லது எண்ணங்களை கொண்டு, வெண்மை, கருமை என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறது. அவற்றை மேலும் விரித்து ஆறு வகைகளாகவும் பிரித்திருக்கிறது.

  1. கிருட்டினலேசியை – மிகுந்த கருமை (Dark Black)
  2. நீலலேசியை – கருமை (Black)
  3. கபோதலேசியை – வெண்மை கலந்த கருமை (Grey)
  4. பீதலேசியை – மஞ்சள் கலந்த வெண்மை (Pale yellow)
  5. பத்மலேசியை – மங்கலான வெண்மை (Pale white)
  6. சுக்லலேசியை – தூய வெண்மை (Pure White)

முதல் மூன்றும் கருமை எண்ணங்கள், பிற மூன்றும் வெண்மை
எண்ணங்கள்.

  1. மிகுந்த கருமை – சதா சச்சரவு செய்யும் தன்மை, கடின மனயில்பு, பழிவாங்கும் உணர்ச்சி, பெரியவர்கள் பேச்சை ஏற்காமை.
  2. கருமை – சோம்பல், அறிவின்மை, சுகங்களில் அதிக நாட்டம்.
  3. வெண்மை கலந்த கருமை – எதற்கெடுதாலும் அவசரப்படுதல், பயப்படுதல், மன உறுதியின்மை, காரணமேயின்றி பிறரை வெறுத்தல்.
  4. மஞ்சள் கலந்த வெண்மை – நன்மை-தீமைகளை சீர்த்தூக்கிப் பார்த்தல், தயை, பரிவுத் தன்மை, தானம் செய்தல்.
  5. மங்கலான வெண்மை – உண்மை, நேர்மை மனத்தினர், தியாக சிந்தனை, மன்னிக்கும் இயல்பு, குருவை மதித்தல்.
  6. தூய வெண்மை – சமநோக்கு உடைமை, விறுப்பு, வெறுப்பு இன்மை, கோபம் கொள்ளாமை.

நீங்கள் எந்த வர்ணம்? ;-)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக